POEMS BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
......................................................முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித் தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.
நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241
..............................................................................................................
POEMS BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


I still remain
in this cabin
Ho, Friendly Flower.
After very many years
I utter your name
Once again today.
You are the indistinct warmth of
one half of mine.
It was you who taught me
The language of Motherhood
hiding inside me.
Inside the unread pages of
The story unwritten of
He who couldn’t live without attachments
And turned a prey to the man-eaters
Who feed on his affection
You still remain
Alive.
In the almirahs of forgotten memories
Escaping the termites of sorrow
infesting even minuscule reminiscences
You remain still alive
deep down...
Being in the midst of all these humans
who move on with the flow of Time
I remain still here
As signifying a moving doll.
In the midst of my mass of words
that none reads
the noise of angst keeps sounding
in silence.
I remember those words of yours
Uttered before many years
Smilingly - “Just ignore those who understand not
the language of silence
and keep going”.
I recall now.
“The language of silence
would always echo as deafening sound”
True, Blossom Buddy....
Time has made the hands of he
who penned Poetry
to stretch out for alms.
I, being crushed under the wheels of poverty
My scream seems to
Stay outside ears many.
Wearing the garment of humiliations
I stand stark naked
as personification of contradictions.
In this cabin called body
I
Still remaining alive
இந்த அறைக்குள்தான்
இன்னுமிருக்கிறேன்
சிநேகப்பூ.
பல வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உன் பெயரை
உச்சரிக்கிறேன் இன்று.
என்னொரு பாதியின் உருவற்ற
மென்மை நீ.
எனக்குள் ஒளிந்திருக்கும்
தாய்மையின் மொழியை
கற்றுத் தந்தவள்.
பற்றர வாழ முடியாதவனின்
பாசத்தை தின்னும் புறந்தின்னிகளின்
கொடுரப்பசிக்கு இரையாகிப் போனவனின்
எழுதப்படாத கதையில்
வாசிக்கப்படாத பக்கங்களுக்குள்
இன்னும் நீ
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.
மறக்கப்பட்ட ஞாபகங்களின் அலமாரியில்
சின்னஞ்சிறு நினைவுகளையும் அரித்த
துயரக் கரையான்களிடமிருந்து தப்பித்து
இன்னும்தான் உயிர்த்திருக்கிறாய்
உள்ளுக்குள் நீ.
காலத்தின் நகர்வுகளில் நகர்ந்து செல்லும்
இத்தனை மனிதர்களின் இடையில் நானும்
நகர்ந்து கொண்டு
இன்னும்தான் இங்கிருக்கிறேன்
அசையும் பொம்மையின் அடையாளமாய்.
யாரும் வாசிக்காத என்
சொற்களின் கூட்டத்திற்கிடையில்
சோகத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான்
இருக்கிறது மெளனமாக.
"மௌனத்தின் மொழி புரியாதவர்களை
புறந்தள்ளிப் போய்கொண்டே இரு" என்று
அன்றொருநாள் நீ
புன்னகைத்தபடி கூறியதை
நினைத்துக் கொள்கிறேன் இப்போது.
"மௌனத்தின் மொழி எப்போதும்
பெருஞ்சப்தமாகத்தான் எதிரொலிக்கும்”
உண்மைதான் சிநேகப்பூ.
கவிதை எழுதியவனின் கைகளை
ஏந்த வைத்து யாசிக்க வைத்தது
காலம்.
வறுமையின் சக்கரத்தில் நசுங்கிக் கதறும்
என் சொற்களின் சத்தம்
யார் காதிலும் விழுவதாயில்லை.
அவமானங்களின் ஆடையணிந்து
நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறேன்
முரண்களின் மொத்த உருவமாய் இன்று.
உடல் என்ற இந்த அறைக்குள்
உயிருடன்தான் இருக்கிறேன்
இன்னும் நான்.
ஆத்மாஜீவ் : #அகபுத்தகம்_IB_68 : #சிநேகப்பூ
(2)
It was from the day that I parted from the hand that held mine I understood the meaning of the word Orphan.
Mother’s hand
Father’s hand
My daughter and son held my hand
Now they don’t.
Today its comprehension
Seems to me having different dimension
I know not whether they realize it
Yet I do feel the word Aloneness.
As she has become half of mine
I can’t disunite my wife’s hand
One who is brave always
Since the day I had stretched my hand, begging
She has turned disintegrated; lonely.
Just as the words of poet beseeching
None would be accompanying
in the end.
With my one hand
I softly hold the other.
Before the moisture of water
poured on the soil
gets dried up
Should reach my place...
That’s all.
என் கையைப் பிடித்திருந்த கையை
விட்டுப் பிரிந்த நாள்முதல்தான் புரிந்தது
அனாதை என்ற சொல்லின் அர்த்தம்.
அம்மாவின் கை
அப்பாவின் கை
என் கையை பற்றிப் பிடித்திருந்தார்கள்
மகளும் மகனும்.
இப்போது விட்டு விட்டார்கள்.
இன்று அதன் அர்த்தம்
வேறுமாதிரி இருக்கிறது
எனக்கு.
அவர்கள் இதை உணர்ந்தார்களா என்று
தெரியாது என்றாலும் நான்
தனிமை என்ற சொல்லை உணர்கிறேன்.
ஒருபாதி கலந்து விட்டதால்
மனைவியின் கையை தனித்து
பிரிக்க முடியவில்லை என்னால்.
எப்போதும் தைரியமாக இருப்பவள்தான்
நான் கையேந்திய நாள்முதல்
தனிமைப்பட்டு விட்டாள்
யாசிக்கும் கவிஞனின் சொற்களைப் போல.
யார் கையும் உடன்வரப் போவதில்லை
கட்டங்கடைசியில்.
என் கை ஒன்றை மறுகையால்
மெல்லப் பிடித்துக் கொள்கிறேன்.
மண்ணில் ஊற்றிய தண்ணீரின் ஈரம்
உலர்ந்து போவதற்குள்
ஊர் போய் சேரவேண்டும்
அவ்வளவுதான்.
ஆத்மாஜீவ்
(3)
The anguished cries of those roots buried deep down
Those birds knew not
They built their nests in the branches
Relished fruits – unripe and ripe
Many a wayfarer reposed there.
Tree too cannot escape the Seasonal cycles
It accepted the different seasons
Without any complaint.
Though all the leaves withered and fell down
The tree didn’t feel sad.
Leaves would sprout anew
It very well knew.
It cursed the merciless hearts of some
Proceeding to cut the branches of tree for firewood.
It is in the branches that birds build their nests.
Seeing that the number of birds’ nests
Has gone down
It felt sad.
Unripe ripe fruits too
Are reduced in number.
Have grown old.
Roots having no strength to suck moisture
_ so it began cursing its own self.
As fruits became less
The birds too shifted their nests
to some other trees
Also, due to branches getting reduced
When a terrible tornado lashed
The taproot couldn’t withstand
The pain unbearable of separating from
the soil
The roots couldn’t endure.
In the well of a night
When
Deadly wind blew
Coming off the land
The giant tree remained
lying on the land
roots were seen out
wet utmost.
புதைந்திருக்கும் வேர்களின் குமுறல்களை
அந்த பறவைகள் அறியவில்லை.
மரக்கிளைகளில் கூடுகள் கட்டின.
காய்கனிகளை ருசித்தன.
வழிப்போக்கர்கள் பலரும்
இளைப்பாறினார்கள்.
பருவகாலச்சுழற்சியிலிருந்து
மரம் மட்டும் விடுபடுமா.
எல்லாக் காலங்களையும்
முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொண்டது.
எல்லா இலைகளும் உதிர்ந்தபோதும்
மரம் வருத்தப்படவில்லை.
மீண்டும் துளிர்க்கும் என்று
அதற்கு தெரியும்.
மரக்கிளைகளை
விறகுக்காக வெட்டிப் போகும்
சிலரின் ஈரமற்ற நெஞ்சத்தை சபித்தது.
மரக்கிளைகளில்தான் பறவைகள்
கூடுகளை கட்டிக் கொள்கிறது.
இப்போது
பறவைகளின் கூடுகளின் எண்ணிக்கை
குறைந்து போனதை கண்டு வருந்தியது.
காய்கனிகளும் குறைய ஆரம்பித்தன.
மரத்திற்கு வயதாகி விட்டது.
ஈரம் உறிஞ்ச திராணியற்ற வேர்கள்
என்று
தன்னைத்தானே சபிக்கத் துவங்கியது.
பழங்கள் குறைந்ததால்
பறவைகள் தங்கள் கூடுகளை
இடம் மாற்றிக் கொண்டது.
மரக்கிளைகள் குறைந்ததாலும்தான்.
கடும் புயல் ஒன்று வந்தபோது
ஆணிவேரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நிலத்திலிருந்து பிரித்துக் கொள்ளும்
அம்மாபெரும் வேதனையை வேர்களால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு இரவின நடுசாமத்தில்
பெரும்காற்று ஒன்று வீசியதில்
நிலத்திலிருந்து பிரிந்து
நிலத்திலேயே விழுந்து கிடந்தது
மரம்.
வேர்கள வெளியே தெரிந்தன
நிறைய ஈரத்துடன்
ஆத்மாஜீவ்
(4)
Their palms are empty
I continue begging for alms
My palms too remain empty
Behind the screen
They collect my tears
That quenches their thirst.
Mortgaging my self esteem prestige and what not
I now stand at the street corner
With hands stretched out
Begging
I am
About those who
Witnessing my sufferings
Turning the other way
and go past
I have no complaints.
In the past
My bowl was brimming with
Words.
Today
Just the sounds of their final breath
are heard.
Those who go beyond me
Turn and see
My turbulent heart
The wail of my soul oscillating
in the spot where I had lost
my Pride and Poise
go and hide
inside
words unwritten.
Dipping my tears
in Night’s black
I draw a face
That stands as
the statue of sorrow.
அவர்களின் கைகள் காலியாக உள்ளன.
நான் யாசிப்பதை தொடர்கிறேன்.
எனது கைகளும் காலியாக உள்ளது.
திரைமறைவில்
என் கண்ணீர்த் துளிகளை
சேகரிக்கிறார்கள் அவர்கள்.
அது
அவர்களின் தாகம் தணிக்கிறது.
எனது மானஅவமானங்களை
அடகு வைத்து இப்போது
தெருமுனையில் வந்து நிற்கிறேன்
கைகளை ஏந்தி யாசித்தபடி
நான்.
என் துயரங்களை
கண்டுங்காணாமல்
கடந்து செல்பவர்கள் பற்றின
புகார்கள் ஏதுமில்லை
என்னிடம்.
முன்பெல்லாம்
சொற்கள் நிறைந்திருந்தது
எனது பாத்திரத்தில்.
இன்று அதன் இறுதி மூச்சின்
சப்தங்கள் மட்டுமே கேட்கிறது.
என்னைக் கடந்து செல்பவர்கள்
திரும்பிப் பார்க்கிறார்கள்
அலைப்புறும் என் மனத்தினை.
எனது கம்பீரத்தை தொலைத்த இடத்தில்
ஊசலாடும் என் ஆன்மாவின் கதறல்
எழுதப்படாத வார்த்தைகளுக்குள்
ஔிந்து கொள்கிறது.
இரவின் கருமையில்
எனது கண்ணீரைத் தொட்டு
ஒரு முகத்தை வரைகிறேன்
அது
துயரின் சிலையாக நிற்கிறது.
ஆத்மாஜீவ்
(5)
There my birdcircling in the sky
With direction lost
Not knowing where to migrate
Right in front
Weather keeps changing for ever
In the soft fluttering of
the wings of bird
that wander in search of
a place to recline
My poetry is being written.
திக்கு திசை தெரியாது
வானில் வட்டமடிக்கிறது
என் பறவை.
நேரெதிரில்
மாறிக் கொண்டேயிருக்கிறது
வானிலை.
இளைப்பாறுவதற்கு ஓர்
இடம் தேடி
அலைகிற பறவையின்
மெல்லிய சிறகசைப்பில்
எழுதப்படுகிறது
என் கவிதை.
ஆத்மாஜீவ்
(6)
Life remains clinging
in one alone
With the hope that
it would dawn
Looking at the sky
the flower’s wait
would stay alive
Is Life drawn?
in the elongating night’s curtain
இருமைகளில் ஒன்றில் மட்டுமே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
விடிந்து விடும்
என்ற நம்பிக்கையுடன்
வானத்தைப் பார்த்தபடி
உயிர்த்திருக்கும்
ஒரு பூவின் காத்திருப்பு.
நீளும் இருளின் திரைச்சீலையில்
வரையப்பட்டிருக்கிறதோ வாழ்வு.
ஆத்மாஜீவ்
(7)
PLEASE STAY WITH ME, MY FRIEND
You
be here, My Friend,
by my side
I float in faith
always
Faith in God Satan
Ghosts Demons Spirits
and on Humans
I am one having faith
in the dreams that come during sleep
and several realities
when awake
From God to realities
I kill them too.
That resurrection would happen
again and again _
This faith of mine
with no change remains
Killing God
I wake up Satan
Slicing Satan’s head
I fix God’s face.
This is how
killing any and all
I pursue resurrection
with a murderous sword.
Today – your turn
Now you kill me
After I am resurrected
please don’t go away
It is you alone
sitting inside
is still left
without leaving me.
Please remain by my side, Friend
Forever.
என்_அருகிலேயே_இரு_நண்பா
நீ
இங்கேயே இரு நண்பா.
என் அருகில்.
எப்போதும் நான்
நம்பிக்கையில் மிதப்பவன்.
கடவுள் சாத்தான்
பேய் பிசாசு ஆவிகள்
மற்றும்
மனிதர் மீதான நம்பிக்கைதான்.
உறங்கும்போது வரும் கனவையும்
விழித்திருக்கையில்
சில நனவுகளையும்
நம்பிக் கொண்டிருப்பவன்.
கடவுள் முதற்கொண்டு
நனவுகள்வரை
கொலை செய்தும் விடுகிறேன்.
மறுபடி மறுபடி
உயிர்த்தெழுதல் நடக்குமென்ற
எனது நம்பிக்கையில்
மாற்றம் ஏதுமில்லை எனக்கு.
கடவுளை கொலை செய்து
சாத்தானை எழுப்புகிறேன்.
சாத்தானின் தலையை வெட்டி
கடவுளின் முகம் பொருத்துகிறேன்.
இப்படித்தான்
ஒவ்வொன்றையும் கொலை செய்து
உயிர்த்தெழுவதை பின்தொடர்கிறேன் கொலைவாளுடன்.
இன்று உன் முறை.
இப்போது என்னை நீ
கொன்றுவிடு.
நான் உயிர்த்தெழுந்தபின்
தயவுசெய்து சென்று விடாதே.
உள்ளே உட்கார்ந்திருக்கும்
நீ ஒருவன்தான்
விட்டு விலகாது மிச்சமிருக்கிறாய்
எனக்கு.
என் அருகிலேயே இரு நண்பா
எப்போதும்.
ஆத்மாஜீவ்
(8)
The pain of not being able to return
to the passage gone beyond
is being relived
by going there
with the wings of words
is what the grand world
of the writer indeed.
The height of release
Is but a hiatus.
That
would be forever conversing
in the language of silence.
That is
the soft music of Life
Those having ears listen
When the heart wanders
in this space
That can’t be filled with Life
Deficiency fills and swells
I fancy
The bird craving to fly
in the bygone sky
is the writer’s heart - Oh My!
கடந்துபோன பாதைக்கு
திரும்ப முடியாத வலியை
வார்த்தைச் சிறகுகளால்
மீளச் சென்று வாழும் மனம்தான்
படைப்பாளியின் பெரும் உலகம்.
விடுபடுதலின் உயரம்
ஓர் இடைவெளி.
அது
மௌனத்தின் மொழியில்
பேசிக் கொண்டேதான் இருக்கும்.
அது
உயிரின் மெல்லிய இசை.
காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.
உயிரிட்டு நிரப்ப முடியாத
இந்த இடைவெளியில்
மனம் சஞ்சரிக்கும்போது
போதாமை நிரம்பி விடுமென
நினைக்கிறேன்.
கடந்து விட்ட வானத்தில்
பறக்கத் துடிக்கும் பறவை
படைப்பாளியின் இதயம்.
ஆத்மாஜீவ்