INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, September 4, 2026

ABDUL SATHAR

THREE POEMS BY 

ABDUL SATHAR

Rendered in English by Latha Ramakrishnan(*first Draft)

A man insane he is

Not having the need to face

This world confusion-confounded….

What he does

He knows not at times….


He wants to embrace his fellowmen 

and love them with all his heart….

But they shy away

Put off by his outward appearance….


With long dishevelled tresses

Uncouth attires

He remains…

Some make fun of him…

But his heart

Has inherent love for

The universe

And its species

And remains pure pristine.


Seeing how they view him

He wants to hide himself from humans….


He isolates himself

With fears and worries filling him

He languishes in an unnecessary

 sense of guilt…

he realizes nothing

bothers not of anything

he wants to find a release 

from all responsibilities…


At night

keeping awake for long

with his soulful eyes

Converses with the moon and stars

Luminous in the sky


He mixes hues in void…

That

Becomes surreal art


You call him a lunatic

But, he in fact is

an enlightened soul.

He sees things that ordinary humans 

see not

All his elucidations are exclusive ones

as enticing the future.

His comprehensions deep

His ideas firm

And you call him  insane

Precisely for this – yes?


He is already dead within…

Not having the need to realize anything

And he doesn’t want to live again

For the sake of the world

Outside.


Allow him to live on

As someone dead and gone

within

As a man insane

Instead of living In this world 

where

all things fair and just 

are extinct

and a life of righteousness

has become a rarity

Being in his own world

as mentally deranged

would be sheer bliss indeed! 

இந்த குழப்பமான உலகத்தை

எதிர்கொள்ள அவசியமற்ற

மனம் பிறழ்ந்தவன் இவன்..

இவன் என்ன செய்கிறானென்று

இவனுக்கே சில சமயங்களில்

தெரிவதில்லை..


இவன் சக மனிதர்களை

அரவணைத்து

அன்பு பாராட்ட

எண்ணுகிறான்..

இவனது புறத்தோற்றத்தைக்கண்டு

அவர்கள் ஒதுங்குகிறார்கள்..

நீண்ட கலைந்த முடிகளுடனும்

சீரற்ற ஆடைகளுடனும்

காணப்படுகின்றான்..

சிலர் இவனை

எள்ளி நகையாடுகிறார்கள்..

இவனது உள்ளமோ

பிரபஞ்சம் மீதும்

உயிர்கள் மீதும்

உள்ளார்ந்த நேசம் கொண்டு

தூய்மையாக உள்ளது.


இவனைப்பற்றிய அவர்களது

எண்ணம் கண்டு

இவன் மனிதர்களிடமிருந்து

தன்னை மறைத்துக்கொள்ள

விரும்புகிறான்.. 


தன்னை தனிமைப்படுத்திக்கொள்கிறான்..

பயங்களும் கவலைகளும் ஆக்கிரமிக்க

தேவையற்ற தீவிர 

குற்ற உணர்வில் உழல்கிறான்..

எதையும் உணர்வதில்லை.. 

எதைப்பற்றியும் 

கவலை கொள்வதில்லை..

பொறுப்புகளிலிருந்து விடுபட

விரும்புகிறான்… 


இவன் இரவில் 

நெடுநேரம் விழித்திருந்து

தனது ஆத்மார்த்த விழிகளால்

வானில் ஒளிரும்

நிலவிடமும் விண்மீன்களுடனும்

உரையாடுகிறான்..


இவன் சூன்யத்தில்

வண்ணங்களை 

குழைக்கின்றான்..

அது ..

மீமெய்மையியல் ஓவியமென

ஆகிறது..


இவன் மனம் பிறழ்தவனென

நீங்கள் கூறுகிறீர்கள்..

ஆனால் இவன் 

ஞானம் மிகுந்தவன்..

மனிதர்கள் காணாததை 

இவன் காணுகின்றான்.

இவனது விளக்கங்கள் அனைத்தும்

எதிர்காலத்தை ஈர்க்கக்கூடியது போன்று

தனித்துவமானவை..

இவனது புரிதல் ஆழமானது..

இவனது கருத்துக்கள்

உறுதியானவை..

அதனால்தானே இவனை

மனம் பிறழ்ந்தவன் 

எனக்கூறுகிறீர்கள்..


இவன் உள்ளுக்குள் 

இறந்து விட்டான்… 

எதையும் உணர தேவையற்று

மறுபடியும் வெளி உலகிற்காக

உயிர்வாழ விரும்பவில்லை..


தன்னுள் இறந்தவனாகவே

மனம் பிறழ்தவனாகவே

இவனை வாழ விடுங்கள்..

நியாயங்கள் மடிந்துவிட்ட…

அறம் சார்ந்த வாழ்வே

அருகிவிட்ட …

இவ்வுலகில்

வாழ்வதைவிட

மனம் பிறழ்தவனாக

அவனது உலகில் 

இருப்பது எத்தனை சுகம்…


-கோவை.அப்துல் சத்தார்


(2)


As the stone lying in water

I  remain…

in silence

lone…

with no obstruction

Despite seeing the course of Time

Daring to be unafraid….


Discarding  all the burdens 

of day

along the way

all too pleasant….

With no worries at heart

Reclining slowly under the shade of tree

I turn light….


In the atmosphere that 

I have created for my own self

I  allow my heart to

relax.


Inhaling the air

Soaking in the breeze and 

Reveling

Blending  with the day’s beauty

I, being myself

Ho , how blissful it is!


நீரில் கிடக்கும் 

கல்லினைப்போல்

அமைதியாய் நான்.. 

தனிமையில்…

எந்த தடையுமின்றி…

காலத்தின் ஓட்டம் கண்டும் 

கலங்காமல்…


பகலின் பாரம் 

யாவும் துறந்து,  

இனிமை ததும்பும் 

இனிய வழியில்….

மனதில் ஏதும் 

கவலையின்றி

மரநிழலில் 

மெல்ல சாய்ந்து 

நான் தளர்கிறேன்…


எனக்கென நானே 

உருவாக்கிய சூழலில் 

இதமாய் இதயம் 

இளைப்பாறுகின்றேன்…

மூச்சில் காற்றை முகர்ந்து,

தென்றலில் தோய்ந்து திளைத்து,

நாளின் அழகில் கூடி

நான் நானாக இருப்பது

எத்தனை இனிது…!


-கோவை.அப்துல் சத்தார்


(3)

In those days that echo your name

I slowly walk along the rims of aloneness

and amidst crowds jampacked


As the fading glow of the faraway star above

In the direction where you live

a droplet of my life lingers…


My laughter

in the smile at the corner of your lip

My calm

in those moments of our communion

I have entrusted.


Just as the song that has 

forgotten its rhythms 

each and every heartbeat of mine

remains incomplete 


in tales that never end

and silences with language lost

I search for thee

with a craving beyond words.


When rarely a hairline void

touches thee

Do realize that it is me…

The one who has lost my heart 

in thee.


உன் பெயரை எதிரொலிக்கும் 

நாட்களில்…

தனிமையின் ஓரங்களிலும்

கூட்ட நெரிசல்களிலும்

மெல்ல நான் நடக்கின்றேன்..


வானின் தொலைதூர

விண்மீனின் மங்கும் 

ஒளியைப்போல்..

நீ வாழும் திசையில்

என் உயிரின் ஒரு துளி

தங்கிவிட்டது..


எனது சிரிப்பை 

உனது இதழோரப்புன்னகையிலும்..

எனது அமைதியை 

நாம் சேர்ந்திருந்த கணங்களிலும்..

நான் தந்துவிட்டேன்…


தன்னுடைய சந்தங்களை 

மறந்த பாடலைப்போல்

என்னுடைய ஒவ்வொரு

இதயத்துடிப்பும்

முழுமையற்றதாகவே உள்ளது..


முடிவுறாத கதைகளிலும்

மொழியிழந்த மெளனங்களிலும்

சொற்களில் அடங்கா ஏக்கத்துடன்

உன்னைத்தேடுகிறேன்…


எப்போதேனும் 

ஒரு மெல்லிய வெறுமை

உன்னை தீண்டினால்…

உணர்ந்து கொள்..

அது நான்தான்..

உன்னில் எனது இதயத்தை

தொலைத்த.. 

நான்தான்…!


-கோவை.அப்துல் சத்தார்

NIZAM SYED

 A POEM BY 

NIZAM SYED


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




My photograph 

with weapon in hand

in different angles

go out as news many

For you

I deserve to be killed

Kneeling down

Tying my hands at the nape

before setting right the armament

full of shells

Just go to my house and see

For some time

You wouldn’t be able to cross my destinies.

 They all brim with the stench of dead bodies 

If possible

please retrieve and hand over the 

corpses of children

buried in ruins.

கையில் 

ஆயுதம் தாங்கிய

என் நிழற்படம் 

வேறு வேறு கோணங்களில் 

வெவ்வேறு செய்திகளாக 

வெளியேறுகிறது 

உங்களை பொருத்தவரையில் 

கொல்லப்பட வேண்டும் 

மண்டியிட்டு 

கைகளை பிடரியில் கட்டி

தோட்டாக்கள் நிறைந்த ஆயுதத்தை சரிசெய்யும் முன்

என் வீட்டிற்குள் 

சென்று பாருங்கள் 

உங்களால் சற்று நேரம் 

என் வீதிகளையே கடக்க இயலாது 

அவ்வளவும் பிண நெடி

முடியுமெனில் இடிபாடுகளில் புதைந்த

குழந்தைகளின் 

சடலங்களை மீட்டு தாருங்கள்.

-நிஜாம் சையத்

PAADHASAARI VISWANATHAN

 FOUR POEMS BY 

PAADHASAARI VISWANATHAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

In women’s tears

there could be trickery at times

But man’s tears don’t pretend ever.

By and large

In the hushed up sobs of man

Tears would burn with 

the pulsating heat of veracity, for sure.


பெண் அழுகையில் 

சிலபோது அதில் 

பசப்பல் இருக்கக் கூடும்..

ஆனால் ஒருபோதும் 

ஆண் அழுகையில் பாசாங்கு இருக்காது தானே?

பொதுவாக 

ஆணின் 

வாய் பொத்தின 

கேவலில் 

சத்தியத்தின்உயிர்வெம்மையுடன் கண்ணீர் சுடும்.


(2)

Stench unbearable yet it is manure

Organic manure that decays to help crops

Flourish and so live on….

Stench horrendous

for you alone

Not for the seeds

Stench horrendous

All the same

It is care; vigour


கடும் துர்நாற்றம், ஆனாலும் அது உரம்..

தான் மட்கி பயிர் செழிக்க உயிர் வளர்க்கும் இயற்கைஉரம்..

கடும் துர்நாற்றம் 

உனக்குத் தான்

விதைகளுக்கில்லை 

கடும் துர்வாடை 

ஆனாலும் அது 

கருணை உரம்


(3)

Man has

The House of Heart

Forever holding it as his belonging

He suffers  day in and day out….

At times

even other’s house

He assumes to be his

and thereby undergoes 

sufferings utmost.


மனிதனுக்கு உண்டு 

மனவீடு 

மனவீட்டை எந்நேரமும் 

சொந்தம் கொண்டாடித் துயர் அடைகிறான்..

சில வேளைகளில் அடுத்தவர் மனவீட்டையும் 

சேர்த்துச் சொந்தம் கொண்டாடி 

அடங்காத்துயர் 

அடைகிறான்


(4)

Earth-like

Our heart is

In incline

It circles itself

and others too


Just as Earth

heart too

has shadow


But Earth-like endurance

heart lacks – Alas.


பூமி போலானது 

நமது மனம் -

சாய்வில் 

தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, 

பிறனையும் சுற்றிவருகிறது.. 


பூமிக்கு போல

மனதுக்கும் 

நிழல் உள்ளது 


பூமி போலான 

பொறுமை தான் 

மனதுக்கில்லை 

VATHILAIPRABHA


TWO POEMS BY

VATHILAIPRABHA

Rendered in English by Latha Ramakrishnan (* First Draft)

(1)

He felled the tree

With two huge tusks

an elephant fell down

Using giant lorries

He removed those elephants

That lay there with there bellies 

ripped open

They were elephants that

blessed him 

placing their trunk on his head

It is the same he thus blessed

every time

is felling them and slicing them.

Still more trees all over the jungle

serenely  blessing.

*POEM WRITTEN FOR WORLD ELEPHANT DAY

மரத்தை வெட்டிச் சாய்த்தான்

இரண்டு பெரிய தந்தங்களோடு 

ஒரு யானை வீழ்ந்தது.

வயிறு பிளந்து வீழ்ந்துகிடந்த யானைகளை 

பெரும் லாரிகளைக் கொண்டு

அப்புறப் படுத்தினான்.

தலைமீது தும்பிக்கை வைத்து

அவனை ஆசீர்வதித்த யானைகள் அவை.

ஒவ்வொரு முறையும் 

ஆசீர்வதிக்கப் பட்டவன்தான்

வெட்டி வீழ்த்துகிறான்.

இன்னமும் வனம் முழுக்க மரங்கள்

ஆசீர்வதித்தபடி.


வதிலைபிரபா

*உலக யானைகள் தினத்திற்கான கவிதை


(2)



That flower starts dropping off

Just as the flight of butterfly.

It bids farewell to  the wind.

To that stalk too that held it last

Why even to the plant that has made it wither

He who watered would come.

For any and everyone having soft heart

with no venom mixed.

Silent it remains

 for the sake of  slipping down.

The blossom that doesn’t refute

No matter for whom or what

For whom it is waiting still

Will the insects that relished honey

come?

‘Oh, you blooming face’

How can he henceforth write so ?

In the consummation of the final journey

the flower slides its soft body.

Causing  grand vibrations

the buds break out!

அந்தப் பூ உதிரத் தொடங்குகிறது

வண்ணத்துப் பூச்சியின் பறத்தலைப் போல.

காற்றிடம் விடைபெறுகிறது

கடைசியாக தாங்கிப்பிடித்த 

அதன் காம்பிடமிருந்தும்.

ஏன் வாழ்வழித்த அதன் செடியிடம் கூட.

தண்ணீர் ஊற்றியவன் வருவான்.

துளிவிசம் கலக்காத 

மென்மனம் கொண்ட எவனுக்கும்.

தன் உதிர்தலின் பொருட்டு

மௌனமாய் இருக்கிறது.

எதன்பொருட்டும் மறுதலிக்காத பூ

இன்னும் யாருக்காக காத்திருக்கிறது.

தேனுண்ட பூச்சிகள் வருமா?

'மலர்ந்த முகமே' என்று

இனி எப்படி எழுதுவான் அவன்?

இறுதிப் பயணத்தின் நிறைவில்

தன் மென்உடலைச் சரிக்கிறது பூ

பெரும் அதிர்வுகளை எழுப்பியபடி

வெடிக்கின்றன மொட்டுகள்!

வதிலைபிரபா

K.C.AMBIKAVARSHINI

A POEM BY 

K.C.AMBIKAVARSHINI

Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)



The White bud

to be flowering today

The first squirrel

climbing on the ribs of 

fractured branch

The early morn’s leaving of 

the electric-wire parrots

The beak of the peacock

alighting into the lawn

The regimented cloud-cover of the

Sun dawned

The winnowing of the 

Wild oats 

with roots moving off the arable land

The same East of 

the different windows 

through which we –

 Father and I – perceive.


இன்று பூக்கப் போகும் 

வெண்ணிற முகை

முறிந்த மரக்கிளையின் விலா எலும்புகளில் 

ஏறும் முதல் அணில்

மின்கம்பிக் கிளிகளின் 

அதிகாலை விலகல்

புல்வெளிக்குள் இறங்கும் மயிலின்

அலகு

உதயமாகும் சூரியனின்

பத்திய மேகமறைப்பு

உழுநிலத்திலிருந்து வேர்நீங்கிய 

காட்டுக் காடைக்கண்ணிகளின்  

தூற்றல்

அப்பாவும் நானும் பார்க்கும்

வெவ்வேறு ஜன்னல்களின்

ஒரே கிழக்கு


-க.சி.அம்பிகாவர்ஷினி

PUNITHA JOTHI

 A POEM BY 

PUNITHA JOTHI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

When I turned a Truth into an Orange 

and began peeling its skin

Many found it comprising

sour slices.

Some found them to be

sweet segments.

Some saw it

as rotten fruit.

But in my hand

It remains ever

as an Orange.


‘THE DELUGE OF THE MASS OF SILENCE







 KANNAN VISWAGANDHI

MATHUSAN SIVAM

A POEM BY 

MATHUSAN SIVAM

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

SHADOW DELUSIONAL

A man goes escorting a woman 

That woman goes escorting a child 

That child goes escorting a doll 

For me who sees from above

The doll seems to escort all

The doll thus escorting

Was bought in a toyshop.

The entire street is filled with toyshops.

The entire city is a city of selling toys

The entire country is a land selling toys.


That doll was made 

melting plastic

and casting it in metal mold

The doll so made was neatly packed

packed so meticulously 

so as to make the child believe 

that the doll in the pack is beautiful indeed.


But it only made the child believe 

that the doll would be lovely

But not that the doll inside the pack

would ever escort it.


மாய நிழல்

ஒரு ஆண் ஒரு பெண்ணை அழைத்துப்போகிறான்

அப்பெண் ஒரு குழந்தையை அழைத்துப் போகிறாள்

அந்த குழந்தை ஒரு பொம்மையை அழைத்துப்

போகிறது

உயரத்தில் இருந்து பார்க்கும் எனக்கு அந்த பொம்மைதான் 

அனைவரையும் அழைத்துப் போவதாக தெரிகிறது.


அழைத்துப் போகும் அப் பொம்மை

ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் 

வாங்கப்பட்டது;

அத்தெருவெங்கும் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் 

கடைகள் தான்,

அந் நகரமே விளையாட்டுப்பொருட்கள் விற்கும் நகரம் தான்

அந்த நாடே விளையாட்டுப்பொருட்கள் விற்கும்

நாடுதான்


அந்தப்பொம்மை பிளாஸ்ரிக்கை உருக்கி

உருக்கிய பிளாஸ்ரிக்கை உலோக அச்சில் வார்த்து

தயார் செய்யப்பட்டது

தயார் செய்யப்பட்ட பொம்மையினை அழகாக 

பொதி செய்யப்பட்டது

இந்தப் பொதிக்குள் இருக்கும் பொம்மை அழகானது என்று 

குழந்தை நம்பும்படி பொதி செய்யப்பட்டது


குழந்தைக்கு பொம்மை அழகாக இருக்கும் எனத்தான் 

நம்பவைக்கப்பட்டதே தவிர;

பொதிக்குள் இருக்கும் பொம்மை அழைத்துப் போகும் 

என நம்ப வைக்கப்படவில்லை.


-மதுஷன் சிவன்

PA.RAJA

 A POEM BY 

PA.RAJA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


DISTANCE

For remembering some

there will be something

Some things

Events

Songs

In your case

Nothing there except distance.

That you are born

I heard being faraway

From that day onwards

I keep walking 

for  our nearness

which is possible of course.

But, the distance refuses

to come to a close.


தொலைவு.

___________

சிலரை

நினைவிற்கொள்ள

ஏதேனுமொரு

பொருளிருக்கும்

நிகழ்விருக்கும்

பாடலிருக்கும்.

உன் விஷயத்தில்

தூரத்தைத் தவிர

வேறு ஏதுமில்லை.

நீ பிறந்திருக்கிறாய்

என்றச்செய்தி கேட்டதே

தூரத்திலிருந்துதான்.

சாத்தியம் மிகுந்த

நம் அருகாமைக்கு

அன்றிலிருந்தே

நடக்கின்றேன்

தீர மறுக்கிறது

தூரம்.

••

          ___ பா. ராஜா_

KRISHNA MOORTHY

A POEM BY 

KRISHNA MOORTHY

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




A torn rupee note

I planned to change hands as one

in tact.

The Tea-selling sister from whom

I usually buy a cup

The granny from whom 

I usually buy banana

The big brother from whom

 I usually buy provisions

None of them could be fooled

Like all others

I too gave the rupee note

with the torn part  well concealed

Yet

all of them found out the tear

being momentarily aware.

I, not lost losing hope

decided to act smart 

with a grand old man

having skin shrunken

adjusting his spectacles

 _ The one who sells camphor 

on Full Moon day

“It is torn, my son

Well, I’ll change it in the Bank

Give me” said he.

And, in his  business acumen 

My University Degree

went aflame, with just ashes remained

·

கிழிந்த ரூபாய் நோட்டொன்றை

எப்படியாவது தள்ளிவிட நினைத்தேன்

வழக்கமாகத் தேநீர் அருந்தும் அக்காவிடம்

வழக்கமாக வாழைப்பழம் வாங்கும் ஆயாவிடம்

வழக்கமாக மளிகை வாங்கும் அண்ணாச்சியிடம்

யாரிடமும் என் சாமார்த்தியம் பலிக்கவில்லை

எல்லோரையும் போல

கிழிந்திருப்பது தெரியாதது போலவேதான்

நானும் கொடுத்தேன்

ஆனாலும் எல்லோருமே

நொடிப்பொழுதான விழிப்புணர்வில்தான்

கிழிந்ததைக் கண்டறிந்தார்கள்

மனம்தளராத நான்

சுருங்கிய தோல்களோடு

கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு

பௌர்ணமிக்குச் சூடம் விற்கும் தாத்தா ஒருவரிடம் 

சாமர்த்தியத்தைக் காட்ட நினைத்தேன்

"கிழிஞ்சிருக்கு தம்பி

பேங்க்ல மாத்திகிறேன் கொடுங்கள்" என்ற

வியாபாரத்தில்

எரிந்து சாம்பலாகி நிற்கிறது

எனது பல்கலைக்கழகப் பட்டம்

கிருஷ்ணமூர்த்தி


MARIMUTHU SIVAKUMAR

A POEM BY 

MARIMUTHU SIVAKUMAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


EACH MOUNTAIN HAS DREAMS

In sleep

I enter into dreams….

The dream hidden in the brain

Comes running

and sits in the inner eye.


The mountains viewing the dream

Off-loaded their angsts and burdens

one by one….


The mountain coming there

Narrated the tale of it cutting of its own ink-applied finger.


Another mountain that stood

Many feet above

came rolling

and stood there lamenting

That the warriors who broke the house it built and

Piled it up neatly

Are being felled mercilessly.


The mountain which many saw 

And stood there in wonder and awe

Stood there with billhook machete

for ransacking the whales that had devoured

the  reliefs and aids. 


The mountain arrived last

wailed uncontrollably 

claiming that Nature 

had its kith and kin

buried deep in the sand.


The dream that gathered the pains and agonies of mountains

stood up to insert a new weapon 

into my mind.


Now in the dream sprouting in my mind

weapons for liberation are

being manufactured…


If not,

the mountains would dare to

even kill my dream


ஒவ்வொரு மலைக்கும் கனவுகள் உண்டு

 உறக்கத்தில்

கனவுகளினுள்  நுழைகிறேன்...


மூளைக்குள் ஒளிந்திருந்த கனவு

ஓடி வந்து

மனக்கண்ணில் அமர்ந்து கொள்கிறது.


கனவை பார்த்த மலைகள் 

தமது வேதனைகளையும்

சுமைகளையும் ஒவ்வொன்றாய் இறக்கி வைத்தன...


அங்கு வந்த  மலை 

தனது மை பூசிய விரலை 

தானே வெட்டி வீசிய கதையை உரைத்தது.


பல அடி உயரத்தே நின்ற 

இன்னொரு மலை

உருண்டோடி வந்து

தான் கட்டிய வீட்டினை உடைத்து அடுக்கிய வீரர்களை 

வெட்டி வீழ்த்துவதாய் புலம்பி நின்றது.


பலரும் பார்த்து வியந்த மலை

தனக்கு வழங்கிய நிவாரணங்களை

விழுங்கிய திமிங்கிலங்களை சூரையாட வீச்சரிவாளோடு நின்றது.


இறுதியாய்  வந்த மலை

தன் உறவுகளை 

இயற்கை 

மண்ணுக்குள் புதைத்துக்கொண்டதாக கதறியது..


மலைகளின் வலிகளை ஒன்று திரட்டிய கனவு...

புதியதொரு ஆயுதத்தை 

என் மூளைக்குள் திணித்திட  எழுந்தது.


இப்போது 

என் மூளையில் முளைவிடும் கனவில்

விடுதலைக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது...


இல்லையென்றால் 

மலைகள் 

என் கனவினை  கொலை செய்யவும் துணியும்.

~~~~~~~

மாரிமுத்து சிவகுமார்.

PON ILAVENIL. B

A POEM BY 

PON ILAVENIL.B

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


LEMON YELLOW

All doors of ownership

have become flawed


Love that is Hope breaking apart

 Secret concealed in the dark turning nil

All rooms have turned

Lemon Yellow


For all to see

the dilapidated walls have grown 

so weak


Hereafter there is nothing

to admire.


Love’s place 

has become the centre

where even things base

can spit with ease


nothing more to speak

all words have attained

the essence of poison.

Well, the remaining words too

are going to settle down

as rock-doves

in the ruined well.


Henceforth for you and I

to mutually serve

There swells nothing but venom 

concealed in tongue 


In this field where you and I 

are going to be

sacrificial prey mutually


Devils have commenced their 

deadly game.


எலுமிச்சை மஞ்சள் 

_______

உரிமையின் எல்லாக் கதவுகளும் 

பழுதடைந்து விட்டது 


நம்பிக்கை எனும் பிரியம் உடைந்து

இருளுற்ற  ரகசியம் கொஞ்சமுமற்று

எல்லா அறைகளும் எலுமிச்சை மஞ்சளாக மாறிவிட்டது


எல்லாரும் எளிதாகப் பார்க்க 

இடிந்த சுவர்கள் மிகவும் 

பலவீனம் கொண்டு விட்டது


இனி மெச்சுவதற்கு ஒன்றுமில்லை


கயமைகளும்  

காரித்துப்பும் மையமாகிவிட்டது

பிரியத்தின்  இடம்


இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை

எல்லா சொற்களும் 

விசத்தன்மை பெற்றுவிட்டது


மீத சொற்களும் 

பாழடைந்த கிணற்றில் பொந்துப் புறாக்களாக குடியேறப் போகிறது


இனி நீயோ நானோ

பரிமாறிக் கொள்ள

நாக்கில் மறைத்திருக்கும் 

விசம் மட்டுமே ததும்புகிறது


உனக்கு நானும்

எனக்கு நீயும் பலி இரையாகும்

வெளியில்


சாத்தான்கள் ஆட்டத்தைத் துவங்கிவிட்டன

K.PUNITHAN

A POEM BY 

K.PUNITHAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

BUDDHA ROBOT

In Buddha Robot’s speech

the language of birds sounded


There was the  tale of the Robot

that while leaving the palace

Metal leaving Time

and the era of Mythical seed

sprouting in crow's spit

moving towards Time.


The language of Koel

Rows of ants carrying food

Zen stories

The scent of the herb called heart

All were programmed.


The wax upon which

rain drop stays on the plantain leaf

was applied all over


Yasodhara’s 

Feminine language

and the language of Tea

incorporated in it.


//• A "Buddha robot" usually refers to either Gabi, a humanoid robot monk introduced in South Korea in May 2026, or Mindar, an android Kannon preacher in Japan.//


புத்தா ரோபோ 

புத்தா ரோபோ பேசுவதில் 

புள்ளினங்கள் மொழி 

இருந்தது 


அரண்மனை விட்டு 

வெளியேறும் போது 

உலோகம் காலம் விட்டு 

காகத்தின் எச்சில் முளைத்த 

விதையின் தொன்மம் காலம் 

நோக்கி நகர்ந்த

ரோபோவின் கதை இருந்தது 


குயிலின் மொழி

உணவு கொண்டு போகும் 

எறும்புகளின் சாரை 

ஜென் கதைகள் 

மனம் எனும் மூலிகையின் 

வாசம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தது 


வாழை இலை மேல் 

மழைத்  துளி தங்கும்  

மெழுகில் முழுக்க பூசப்பட்டிருந்தது 


யசோதரவின் 

பெண் மொழியும் 

தேநீர் மொழியும் 

அதில் சேர்க்கப்பட்டிருந்தது

 

...க. புனிதன்

MULLAI AMUTHAN

 MULLAI AMTHAN

INSIGHT MARCH 2021

INSIGHT, JULY 2026 - A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPROARY TAMIL POETRY

 INSIGHT, JULY 2026