INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, July 3, 2024

ALEX PARANTHAMAN

A POEM BY
ALEX PARANTHAMAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



I was waiting for the bus.
A beggar came and stood in front of me
stretching one hand.

Keeping the ticket-fare
I gave him the remaining five rupees.
“Bless you”
Those words….
My heart turns buoyant!
If just a word can have
emotions myriad so intense
If thousands of such words
are spread everywhere
With peace and quiet
Ho – how so exquisite
this world would be!
in every sense….

Alex Paranthaman .
பேருந்துக்காகக் காத்திருந்தேன்.
எதிரே
ஒரு யாசகன்
கரம் ஒன்றை நீட்டியபடி...
பேருந்துக்கான பணத்தை
வைத்துக்கொண்டு...
மிகுதி
ஐந்து ரூபாவைக் கையளித்தேன்
அவனிடம்.
" நீ நல்லாயிரப்பா..."
அந்த ஒரு வார்த்தை...
லேசாகிறது மனம்!
காற்றிலே பறப்பதான உணர்வு
எனக்குள்.
ஒரு வார்த்தைக்கு
இத்தனை உணர்வுகள் இருப்பின்
இதேபோல்
ஓராயிரம் வார்த்தைகள்
பரவப்பட்டால்
எவ்வளவு
அழகாக...
அமைதியாக ... இருக்கும்
இந்தப் பூவுலகம்.
- அலெக்ஸ் பரந்தாமன்

THENMOZHI DAS

  A POEM BY

THENMOZHI DAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Have to smile; No other way
when some scrape betrayal as salt-paper
In the social space.
When nothing is there to indict
One’s back becomes the white screen
apt for scribbling and stamping
Painful smile
can turn upside down
the lexicons within.
In order to make things
Flawless, untarnished
Better to gulp it all
as the simple ‘Appam
and move on.
Bizarre preconceptions not only mind’s scribbling
But also the drunkard’s bursting vomit.
Accessing the dark of the lock fitting the key
and having the sharpness of key fitting the lock
are indeed two different things.
The fingers depicting conflicts with enmity
and rolling them in silver-sheets and gifting
are more ghastly than the murderous hand.
It is those chapters
where kissing the cheek
and tearing the heart
not even offering water but crucifying
inserting the finger inside the hip-rib
to ascertain whether there is life
and poked fun at
that became the Great Grand
New Testament.
All ‘Now’ will become ‘Then’
Amen.

Thenmozhi Das

வலிமிக்க புன்னகை
புன்னகைப்பதைத் தவிர வேறு வழியில்லை
சிலர் வஞ்சகத்தை
உப்புக் காகிதமாய் சமூக வெளியில்
உரசும் போது
குற்றப்படுத்த ஏதுமில்லாத நிலையில்
வெள்ளைத் திரை
கிறுக்கிக் குத்துவதற்கு ஏதுவான முதுகு
வலிமிக்க புன்னகை
மாத்திரைகளின் உள் அகராதிகளை
புரட்டியெடுக்க வல்லது
குற்றமும் குறையுமற்றதாக்க
எதையும் எளிய அப்பத்தைப் போல
விழுங்கி விலகிச் செல்லுதல் நல்லது
விசித்திர முன்முடிவுகள் மனக்கிறுக்கல்கள் மட்டுமல்ல
குடிகாரனின் அவசர வாந்தி
சாவிக்கு ஏதுவான பூட்டின் இருள்
கண்டடைவதும்
பூட்டுக்கு ஏதுவான சாவியின் கூர்மை
வைத்திருப்பதும் வேறு வேறு
முரண்களை பகை உணர்சியோடு
சித்தரித்து
வெள்ளிக் காகிதத்தில் சுற்றி பரிசளிக்கும் விரல்கள்
கொலைக் கரத்தை விட கொடூரமானது
கன்னத்தில் முத்தமிட்டு
மனதைக் கீறி
தண்ணீர் கூடத் தராமல் அறைந்து
விலாவில் விரல்விட்டு உயிர் உள்ளதா
எனக் கண்டு பரிகசித்த அத்தியாயங்கள் தான்
ஆகப்பெரும் புதிய ஏற்பாடு ஆனது
எல்லா தற்காலமும் இறந்தகாலமாகும்

 

AKASA MOORTHY

A POEM BY 

AKASA MOORTHY




Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



He who has moved over
to another place
gets accustomed to it little by little in the coming days.
Be it Darkness or Fog
_ As they keep dispersing
Everything of the new terrain
could be seen.
Each soil has a language of its own
In any land
there would be ongoing quest and search
for finding the true and the real.
For the man who knows
how to converse with the soil
the brushing breeze
burning Sun
tender sprout _
One and all land
is but his home ground.

வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்தவன்
கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுகிறான்.
இருளா பனி மூட்டமா
விலக விலகத்
துலங்கும்
புதிய ஊரின் அனைத்தும்.
மண்ணுக்கு ஒரு மொழியுண்டு.
எந்த மண்ணிலும் மெய்மைக்கான தேடல் உண்டு.

மண்ணோடு
உரசும் காற்றோடு
சுடும் வெயிலோடு
செந்தளிரோடு
பேசத் தெரிந்தவனுக்கு
யாதும் ஊரே.

ஆகாசமூர்த்தி


ANTON BENI

 A POEM BY 

ANTON BENI



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




Just a small shower only.
In our street the windows of many a house open
The parents search for one Quire notebook
left after all that their children had used
in the classroom
and the Ronald pens
to write rain-poem.
In the opposite house where the child is
yet to be admitted in school
the noise of the husband and wife quarreling
is heard above the rain.
To buy that couple Quire notebooks two
I am wading through the street
getting wet.


சிறிது மழைதான்
எங்கள் தெருவில் நிறைய வீடுகளின் ஜன்னல்கள் திறக்கின்றன.
பிள்ளைகள் பள்ளியில் எழுதியதுபோக மீதமிருக்கும் ஒரு குயர் நோட்டையும் ரெனால்ட் பேனாக்களையும் பெற்றோர்கள் தேடுகிறார்கள்...
மழைக் கவிதை எழுத.
எழுதட்டும்….
குழந்தையை இன்னமும் பள்ளியில் சேர்க்காத எதிர்வீட்டில்,
கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்ளும் சத்தம்
மழையை மீறிக் கேட்கிறது.
அவர்களுக்கு இரண்டு
ஒரு குயர் நோட்டு வாங்கித் தர
நனைந்தபடி தெருவில் நடக்கிறேன்.

ஆண்டன் பெனி

J.J.ANITA

 TWO POEMS BY 

J.J.ANITA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)


All those who had gone away

parted ways
Those shutting their hearts enraged
seek pardon with their anger assuaged.
Remembrance of those dead and gone
reflects in life anon.
Even those distancing themselves, one by one
expressing aversion
come closer now
accompanied by love
The very thought of it proving ecstatic _
Oh what have I done to earn it….
Absolutely nothing
With all my sorrows in tact
I have got used to exist
without those lot.

பிரிந்து போனவர்கள் எல்லாம்
திரும்ப வருகிறார்கள்.
கோபமாய் மனந்திருப்பியவர்கள்
மன்னிப்பை விரும்புகிறார்கள்.
இறந்தவர்கள் நினைவு
வாழ்வில் தெரிகிறது.
பிடிக்கவில்லையென ஒதுங்கியவர் கூட
அன்பின் துணையோடு
நெருங்குகிறார்கள்.
நினைக்கவே சிலிர்ப்பாகும்படி
அப்படி என்ன செய்தேன்.
ஒன்றுமே இல்லை.
சகல துக்கங்களோடும்
அவர்கள் இல்லாமலே
வாழப் பழகியிருந்தேன்.
ஜே.ஜே.அனிட்டா


(2)


My father taught me the life of
the righteous ones.
Ever since I have grown
and He dead and gone
I have come across those
who are sincere; genuine.
But all too suddenly
These days
I meet but betrayers alone
Identify those faking affection.
Weighed under this revulsion
I turn worse than a worm
They call me one who knows not
how to live well.
But who at all understands life in full.
To my children
I classify treachery and betrayal
I teach them to meet those
Who cheat in the name of love.
The true souls of this planet
Don’t know how to hurt, I proclaim
That intense faith also
Will make you cry, I claim
In truth, only those
who know not how to 'make use' of life
can teach you
the Art of Living.

என் அப்பா எனக்கு
நேர்மையாளர்களின் வாழ்வையே
சொல்லித் தந்தார்.
நான் வளர்ந்த பின்னும்
அவர் இறந்த பின்னும்
உண்மையாய் இருப்பவர்களையே
பார்த்திருக்கிறேன்.
திடீரென்று
இப்போதெல்லாம்
ஏமாற்றுபவர்களாகவே சந்திக்கிறேன்.
பொய்யன்பாளர்களையே
இனங்காண்கிறேன்.
இந்த அருவருப்பின் கீழ்
நானொரு புழுவினும் தாழ்ந்தவளாகிறேன்.
என்னை வாழத் தெரியாதவள்
என்கிறார்கள்.
யாருக்குத் தான் வாழ்வை புரிந்திருக்கிறது.
என் பிள்ளைகளுக்கு நான்
துரோகங்களை அடையாளங்காட்டுகிறேன்.
அன்பின் பெயரால் ஏமாற்றுபவர்களை
சந்திக்கக் கற்றுக் கொடுக்கிறேன்.
இவ்வுலகின் உண்மை ஆன்மாக்கள்
துன்புறுத்த தெரியாதவை என்கிறேன்.
தீவிர நம்பிக்கையும் அழ வைக்குமென்கிறேன்.
உண்மையில் வாழத் தெரியாமல் போனவர்களால் தான்...
வாழ்வைப் புரிய கற்றுக்கொடுக்க முடியும்.
ஜே.ஜே.அனிட்டா




S.RAVINDRAN

 A POEM BY

S.RAVINDRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

SIX SHADOWS
How come father has not committed suicide?
How come mother is not insane as yet
In the midst of a whole lot of sorrows
How come I had a comfortable birth
How many a house we have shifted
Ho, why not even one
is our own
Why hasn’t there a time
when we ate to our hearts’ content
Why is it that inside my brain
cockroaches keep breeding in millions
Cramming inside a coffin
the whole lot of these queries
and to come out of this soil
In fury unleashed
I walk on
Out of me six shadows
pursue
One after another
None I merited with a backward glance ever

S Ravindran
ஆறு நிழல்கள்
அப்பா ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை
அம்மாவுக்கு ஏன் இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது
இத்தனை துக்கத்திலும்
நான் எப்படி சுகமாகப் பிறந்திருக்கிறேன்
எத்தனை வீடுகள் மாறியிருக்கிறோம்
ஒன்றுக்கூட
எங்களுக்கு ஏன் சொந்தமாக இல்லை
வயிறு நிறைய சாப்பிட்ட காலமொன்று
எங்களுக்கு உருப்படியாய் ஏன் வாய்க்கவில்லை
என் மூளைக்குள் ஏன் கோடிக் கணக்கில்
மூட்டைப் பூச்சிகள் உற்பத்தியாகிகொண்டே இருக்கின்றன
இத்தனை கேள்விகளையும்
ஒரு சவப்பெட்டியில் அடைத்துக்கொண்டு
இந்த மண்ணிலிருந்து ஆவேசமாய்
வெளியேற நடக்கிறேன்
என்னிலிருந்து ஆறு நிழல்கள்
ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றன
அதில் ஒன்றைக்கூட
நான் திரும்பி பார்க்கவேயில்லை

~ ரவீந்திரன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS