INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 30, 2023

LAWRENCE VASUTHEVAN

 A POEM BY

LAWRENCE VASUTHEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


YOUR ABODE
I know
that you have an abode
That is built by You
For You
_ The You being exclusive.
No sketches drawn
No permission obtained
It is built by means of your
conveniences.
In a very comfortable place
You have kept the door
In your most favourite spots
You have placed the windows.
The automatic solace-providers
that would relieve you of all ailments
are available there.
Herbal plants with leaves secreting balms
that relieve you of all worries
are available there
The abode is an air-conditioner
That operates accordingly
to suit your varying temperatures
A living shadow is there.
A shadow that changes
as suits your whims and fancies.
In the all too dark interior room
With aloneness aplenty
Where none can seek entry
You eat
In the entire world
It is in that abode
That makes you feel utmost secure.
I know
It is there you are
But it is in the address you give
that you live
So this world foolishly believes.

உன் வீடு
-----------------
எனக்குத் தெரியும்
உனக்கொரு வீடு இருக்கிறது
அது
நீயே நீ
உனக்கே உனக்காக
கட்டிக் கொண்டது
வரைபடங்கள் வரையவுமில்லை
அனுமதிகள் பெறவுமில்லை
உன் சவுகரியங்களால் வனையப்பட்டது
மிக வசதியான இடத்தில்
வாசல் வைத்திருக்கிறாய்
மிக விருப்பமான இடங்களில்
ஜன்னல்கள் வைத்திருக்கிறாய்
உன் நோவுகள் போக்கும்
தானியங்கி ஒத்தடங்கள் அங்குண்டு
உன் கவலைகளை ஐதாக்கும்
தைலம் சுரக்கும்
தாவர இலைகள் உண்டு
உன் மனதின்
தட்ப வெப்பங்களுக்கேற்ப
தன்னை இயக்கும் குளிரூட்டி அது
உன் எண்ணத்தை புரிந்து கொண்டு
தன்னைத் தானே
உருமாற்றிக் கொண்டிருக்கும்
அங்கு ஓர்
உயிருள்ள நிழல் உண்டு
நீ
நினைப்பது போலெல்லாம்
மாறும் நிழல்
யாருமே வந்து விட முடியாத
கொழுத்த தனிமை நிறைந்திருக்கும்
இருண்ட உள் அறைக்குள்
நீ புசிக்கிறாய்
உலகிலேயே
அந்த வீடுதான்
மிகப் பத்திரமானது உனக்கு

எனக்குத் தெரியும்
நீ
அங்குதான் இருக்கிறாய்
ஆனால்
நீ கொடுக்கும்
முகவரியில் இருக்கிறாய் என்று
நம்பிக்கொண்டு இருக்கிறது
இந்த உலகம்

RIYAS QURANA

 A POEM BY 

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


A ‘MUST SEE’ MOVIE

That a stallion stood here
how can they afford to forget?
A soaring lawn
An illusory deer there
Circling its neck
a serpentine
Next to it
an arrow mark pointing downwards
Can’t ignore
Should observe keenly
While drawing close
the scene changes
Turning topsy-turvy
we should view it
While viewing thus
upon woman’s body
a baby sleeps
It was in full view of all
that she fell off the horse
with the child
Let’s go on watching.
In that movie
while coming to the mountain region
for spending the vacation
the horrible incident would surely happen.
The illusory deer is lilting and leaping.
This is how
the first scene
opens.

பார்க்க வேண்டிய படம்
இங்கே ஒரு குதிரை நின்றதை
அவர்கள் எப்படி மறக்க முடியும்
உயரமான புல்வெளி
அதிலே ஒரு பொய்மான்
அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பாம்பு
அதற்கு அருகில்
கீழ் நோக்கிக் குறிக்கும் ஒரு அம்புக்குறி
புறக்கணித்துவிட முடியாது
கவனித்தே ஆக வேண்டும்.
நெருங்கும்போது காட்சி மாறுகிறது
தலை கீழாக புரண்டு
அந்தக் காட்சியை பார்க்க வேண்டும்
பார்க்கும்போது,
ஒரு பெண்ணின் உடலில்
குழந்தையொன்று உறங்குகிறது
அனைவரும் பாத்திருக்கும்போதுதான்
குதிரையிலிருந்து குழந்தையோடு விழுந்தாள்
இன்னும் பார்க்கலாம்
அந்த திரைப்படத்தில், விடுமுறையைக் கழிக்க
மலைப் பிரதேசத்திற்கு வரும்போது
நிச்சயமாக இந்த கோரச் சம்பவம்
நடக்கும்.
பொய்மான் துள்ளிக் கொண்டிருக்கிறது
இப்படித்தான்,
படத்தின் முதலாவது காட்சி
ஆரம்பிக்கிறது

ரியாஸ் குரானா


AYYAAVU PIRAMANATHAN

 A POEM BY

AYYAAVU PIRAMANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The snake’s word goes creeping along, twisting and turning amidst a handful of persons
Between the wide-opened two hands
sliding along thigh’s solidity it wades through slickly
In the drawn-out description of clothing the ‘Ulakkai’ with the peeled skin
the time-immemorial deadly venom ‘Aalakaalam’
gushes out of the mouth
as a torrential stream
That in the trail lost its name was creeping
eyes two wink the tension
Escaping fortunately from the thick stick with a small wound
the fury coiled and hatched
raging and raising the hood would sting – rings the voice of ‘Magudi’ in the ear.
Flying off Shiva’s neck and swallowing the moon falling down
with a thud
into the snake-hole and turning into goddess Snake-Mound Amman
– so a deadly voice says in the manner of soothsayer.
Not being able to run escaping anywhere,
in the stinging touch of the poisonous tongues
turning blue all over
now lays coiled dead
the snake’s Word.

நான்கைந்து பேர்களின் நடுவில் வளைந்து நெளிந்து ஊர்ந்து கொண்டிருக்கிறது அரவத்தின் சொல்
அகல விரித்த இரு கைகளுக்கு இடையில்
தொடையின் கனத்தில் வழுவழுப்பாக நகர்ந்து ஓடுகிறது
தோலுரித்த சட்டையை
உலக்கைக்கு அணிந்துவிடலாம் என்ற நீள விவரணையில் வாயிலிருந்து ஆலகாலம் ஊற்றாய் கொப்பளிக்கிறது
தவற விட்டுச் சென்ற தடத்தில் அதன் பெயர் ஊர்ந்து கொண்டிருந்ததாக கண்கள் இரண்டு படபடப்பை சிமிட்டுகிறது
தடிக் கம்பிலிருந்து நல் வாய்ப்பாக சிறு காயத்துடன் உயிர் மீண்டு சுருட்டிவைத்து அடைகாத்த சினம்
சீறிப் படமெடுத்து கொத்துமென காதுக்குள் ஊதுகிறது மகுடிக் குரல்
சிவன் கழுத்திலிருந்து பறந்து சந்திரனை விழுங்கி பொத்தென்று புற்றுக்குள் விழுந்து புற்றடி அம்மனானதாக கோடாங்கியைப்போல்
குறி சொல்கிறது ஓர் அபாயக் குரல்
எத்திசையிலும் தப்பித்தோட இயலாமல் விஷ நாவுகளின் தீண்டலில் உடலெங்கும் நீலம் பாரித்து மரித்து சுருண்டு கிடக்கிறது இப்போது
அரவத்தின் சொல்.

அய்யாவு பிரமநாதன்

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Just as seeing an elephant across a narrow street
most unexpectedly
and growing terror-stricken
At least two hours to go for the early night to commence
As if straightaway it has begun
Someone knocks at the door. Could it be some familiar hands
As opening the very wall before opening the door
being excitement-driven.
As for observing and drawing the flying butterfly
both flying and drawing one should excel in
As the rain that keeps watching me
through the glass window closed from within
I spoke to he walking along with sagging wings
just this and nothing more:
Have you read my five lines written earlier
Or will read them at least hereafter

குறுகலான வீதியின் குறுக்கே எதிர்பாராமல் ஒரு
யானையைப் பார்த்து பயந்தது போல
முன்னிரவு துவங்க இன்னும் இரண்டு நாழிகையாவது
நகர வேண்டும். அது இப்போதே துவங்கினது போல
யாரோ கதவைத் தட்டுகிறார்கள். தெரிந்த கைகளாக இருக்குமோ
ஆர்வத்தில் கதவைத் திறக்கு முன்
சுவற்றையே திறந்தது போல
பறந்துகொண்டே யிருக்கும் வண்ணத்துப்பூவைப்
பார்த்து வரைய பறக்கவும் வரையவும் தெரிந்திருக்கணும் போல
மூடின கண்ணாடி சன்னலின் வழியே என்னையே
பார்த்துக்கொண்டிருக்கும் மழை போல
தளர்ந்த சிறகுகளோடு நடந்துபோய்க்
கொண்டிருந்தவரிடம் சொன்னேன் முந்தின என் ஐந்து
வரிகளைப்படித்திருக்கிறீர்களா இனியாவது படிப்பீர்களா
என்றுதான்.

JEYADEVAN

 A POEM BY

JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

When a circle becomes a circle

Its journey becomes complete
It is only from yet another dot
a circle or square can start.
There are no rims upon rims
On the already one sticking out
another nose cannot sprout
Words on words there can’t be for sure
Each word is a closure
The lamb goes towards the goat inside it
Then the goat breathes its last
Babies children
again little ones young ones
Inside eggs too eggs and eggs alone
Even the Sun
is dying anon.
There is no second Sun.
For eggplant called brinjal
the unripe one is the fruit as known
Silence is but Mother
Mothers don’t become mothers again
The world for all
has everything
It condenses everything
then enlarges them
Umbrella is not for keeping in the hand
it is to unfold and hold above the head
After doing so
rain wouldn’t be there
anymore.
Each droplet of rain in a way
is a death, so to say.

ஒரு வட்டம் வட்டமானவுடன்
முடிந்துவிடுகிறது அதன் பயணம்
இன்னொரு புள்ளியிலிருந்துதான்
இன்னொரு வட்டமோ சதுரமோ
விளிம்புகளுக்கு மேல்
விளிம்புகள் கிடையாது
மூக்கின் மேல் மூக்கு முளைத்திட முடியாது
சொற்களுக்கு மேல் சொற்கள் இல்லை
ஒவ்வொரு சொல்லும் ஒரு முடிவு
ஆட்டுக்குட்டி அதற்குள் இருக்கும்
ஆட்டை நோக்கிப் போகிறது
பின் ஆடு இறந்துவிடுகிறது
குட்டிகள் மீண்டும் மீண்டும்
குட்டிகள்
முட்டைக்குள்ளும் முட்டைகள்தான்
சூரியன்கூட செத்துக்கொண்டிருக்கிறான்
சூரியனுக்கு அடுத்து ஒரு சூரியன் இல்லை
கத்தரிக்கு காய்தான் பழம்
மெளனத்தின் தாய்
எதுவும் இல்லை
மெளனமே தாய்தான்
தாய்கள் மீண்டும் தாய்
ஆவதில்லை
எல்லாவற்றிற்குமான உலகம்
எல்லாவற்றையும் வைத்துள்ளது
எல்லாவற்றையும் சுருக்கிக்
கொள்கிறது
பின் விரித்துக் கொள்கிறது
கைக்குடை என்பது கையில்
வைப்பதற்கு அல்ல
விரிப்பதற்கு
விரித்தபின் அங்கே இருக்காது மழை
ஒவ்வொரு மழைத்துளியும் கூட
ஒரு மரணம்தான்
------------
ஜெயதேவன்

MOHAMED ATHEEK - SOLAIKILI

 A POEM BY 

MOHAMED ATHEEK - SOLAIKILI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MY YOUNGER BROTHER IS A CONJURER

Coins of trivial denominations
are little boys
if tumble down
they would writhe in pain
tiny ones specs of grains
hiding them inside the piggybanks
if the son breaks it open and pour it all down
those battalions of coins would laugh merrily
When the coins roll on
not knowing where to go
they would proceed somewhere
This place is ours
The coins of no significance and we
can go hand in hand.
Coins are the flying plates of
Kids no-good
They would come flying in these
and alighting would swarm the shops.
Those cursed mosquitoes
are coin-lovers
They are the goblins
burying deep the coins.
I too had been a goblin
in my box
I used to bury the coins
under the book.
Just as the conjurer
dug deep for treasure
my younger brother
would have dug and accessed my treasure.
The coins always have a smiling face
Give me the face of coins
I pray to God.
I want not a face
as an unsmiling huge ‘currency note
with a face turned frozen
offering donation
Let the note stay inside the case.
Let the coins scatter all over the face.
Mohamed Atheek - Solaikili

என் தம்பி மந்திரவாதி
------------------------------
சில்லறைகள்
சிறார்கள்
விழுந்தால்
துடிக்கும்
குஞ்சுகள் குறுனல்கள்
உண்டியலுக்குள் பதுக்கிவைத்து
பிள்ளை
உடைத்து
கொட்டினால்
கலகலக்கும்
காசுப் பட்டாளங்கள்
சில்லறைகள்
உருண்டோடும்போது
எங்கு போவதென்று தெரியாமல்
எங்காவது போகும்
இந்த இடம் நமது இடம்
நமக்கும் சில்லறைக்கும்
சரி வரும்
சில்லறைகள்
கழிசன்காறக் குழந்தைகளின்
பறக்கும் தட்டுகள்
இவற்றில் பறந்து இறங்கி
கடைகளை மொய்ப்பார்கள்
கழிசன் கொசுக்கள்
சில்லறைப் பிரியர்கள்
அவர்கள் சில்லறைகளை தோண்டிப் புதைக்கும்
பூதங்கள்
நானும் ஒரு பூதமாக
இருந்திருக்கிறேன்
எனது பெட்டிக்குள்
புத்தகத்தின் கீழே
சில்லறைகள் புதைப்பேன்
எனது தம்பி
மந்திரவாதி
புதையல் தோண்டியதைப்போல
என் புதையலை எடுத்தும் இருப்பான்
சில்லறைக்கு எப்போதும்
சிரித்த முகம்
எனக்கு சில்லறை முகம் தா இறைவா என்று
பிரார்த்திக்கிறேன்
பெரிய நோட்டுப்போன்ற புன்னகை பூக்காத
தானத்தால் முகம் விறைத்த
ஒரு முகம் வேண்டாம்

நோட்டு பைக்குள் இருக்கட்டும்
சில்லறை முகத்தில் தெறிக்கட்டும்

K.MOHANARANGAN

 A POEM BY

K.MOHANARANGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


CEASE TO BE OF USE

As
a piece of paper
Torn footwear
Worn-out attire
Withered leaf
Broken glass
No – not like that
For a good poem
Examples such as these
Outmoded
Exhausted
However beautifully they are aligned
As they obstruct space and sense
They are redundant
Irrelevant
How so ever close an association be
When it turns useless
Even love is superfluous
Just as high-quality perfume
which after using the lid not shut
We should turn dry with nothing left.


உபயோகமற்றுப்போதல்
______________________________
ஒரு
கிழிந்த காகிதம் போல,
அறுந்த செருப்பு போல,
நைந்த உடுப்பு போல,
உதிர்ந்த இலை போல,
உடைந்த கண்ணாடி போல
அல்ல...
நல்ல கவிதைக்கு -
தேய்வழக்காகி
தீர்ந்துபோன
இவ்வாறான உவமைகள்
எவ்வளவு அழகாக அடுக்கப்பட்டிருந்தாலும்,
இடத்தையும்
பொருளையும்
அடைத்துக்கொண்டு நிற்பதால்,
அநாவசியமானவையே.
உயிரணைய
உறவேயாயினும்,
உபயோகமற்றுப் போகையில்
அன்பும் மிகைதான்.
உபயோகித்தபின்
மூடிவைக்க மறந்துவிட்ட
உயர்தர வாசனைத் திரவியம்
ஒன்றினைப் போல,
துளியும் மீதமின்றி
உலர்ந்துபோய்விட வேண்டும்
இருந்த தடயமேதுமில்லாமல்.

க. மோகனரங்கன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS