A POEM BY
RAHEEMA FAIZAL
Life turns dense black and frightens
Current cut for hours
Returns to normalcy
Not in the hour announced
But somewhat delayed
In the glow of star and moon
people perceive each other.
From the air oozing out of the
severed and dried up water pipes
I wash my face with my hands.
The heat of sun
mercilessly pours down
bearing the terrible fire
of the unlit stove
holding it as torches
people stand in the streets
Fire
burns in the same shade
Fire
burns intensely.
It is just that this time
it rages
with the direction changed
towards your heads
that have ignited.
Raheema Faizal
•
தலைமுறைக்கு தீ வைத்தவர்கள்
———————————————-
இருண்ட இரவுகளில் வாழ்க்கை
இன்னும் அடர் கருப்பாகி அச்சமூட்டுகிறது
மணிக்கணக்காய் துண்டிக்கப்பட்ட மின்சாரம்
முன் அறிவித்தலில் சொல்லப்பட்ட நேரம் அல்ல
கொஞ்சம் தாமதமாகத்தான்
வழமைக்குத் திரும்புகிறது…
நட்சத்திர நிலவு வெளிச்சங்களில்
மனிதர்கள் முகம் பார்க்கிறார்கள்
துண்டிக்கப்பட்ட உலர்ந்த
தண்ணீர்க்குழாய்களில் இருந்து வழியும்
காற்றால் கைகளால்
முகத்தைக் கழுவிக்கொள்கிறேன்
வெயிலின் கடுமை
இன்றைய பொழுதில்
இரக்கமற்றுப் பெய்கிறது
எரியாத அடுப்பின் பெரு நெருப்பை
அடிவயிறுகளில் சுமந்தபடி
தீப்பந்தங்களாய் ஏந்தியபடி
மக்கள்
தெருக்களில் நிற்கிறார்கள்
தீ
அதே நிறத்தில் எரிகிறது
தீ
அதி உக்கிரமாய் எரிகிறது
ஆனால் இம்முறை
திசை மாறி எரிகிறது
அவ்வளவுதான்
மூட்டிய உங்கள் தலைகளை நோக்கி.
றஹீமா பைஸல்
No comments:
Post a Comment