TWO POEMS BY
SOORAPPALLATHAN VEERAMANI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
houses as blossoms
on both sides of our place
The yellow van
hauls the children
coming in row after row
marching towards the town nearby
and goes away.
As pond with banks breached
remains the school in our place
Please build the ridge
We do need a school
At least to serve as voting booth
Don’t we?
Soorappallathan Veeramani
•
கதம்ப பூச்சரத்தின்
நார் போல நீளும் ஊர்ச்சாலையின்
இருபக்கமும் பூக்களாய் வீடுகள்
அருகமைந்த நகரத்திற்கு
அணிஅணியாய் படையெடுக்கும் பிள்ளைகளை
அள்ளிக்கொண்டு போகிறது
அந்த மஞ்சள் வண்ண வண்டி
உடைப்பெடுத்த குளமாய்
ஊர்ப் பள்ளிக்கூடம்
வறளும் குளத்தின்
வரப்பைக் கட்டுங்கள்
வாக்குச் சாவடிக்காகவது
வேண்டுமே ஒரு பள்ளிக்கூடம்
(2)
day after day
the mosque reminds me of Friday.
The hapless lady in a black purdah
holding a small baby
The brother maimed
having a dark scar in his forehead
The aged mother covering her head
with her worn-out soiled sari
and those some more
huddled beneath the Minar shade
begging _
The Creator who has caused them
Knows only too well
That being a Creator is not an easy task
at all.
.
Soorappallathan Veeramani
நாள்தோறும் நண்பகலில்
கடக்கும் அதே தெருதான் எனினும்
வெள்ளிக்கிழமையை
ஞாபகமூட்டுகிறது பள்ளிவாசல்
கைக்குழந்தையுடன் கறுப்பு பர்தாவில் மடியேந்தும் தாய்
நெற்றியில் கறுத்த தழும்புடன் கையேந்தும் காலொடிந்த தமையன்
அழுக்கேறிய சேலையை முக்காடிட்ட
வயதான ஆத்தாள்
மினார் நிழலில் ஒதுங்கி
இரந்து நிற்கும் இன்னும் சிலரையும்
படைத்த இறைவனுக்குத்தான் தெரியும்
இறைவனாயிருப்பது
அவ்வளவு எளிதான வேலையல்ல என்று.
No comments:
Post a Comment