INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

FATHIMA NALEERA

 TWO POEMS BY

FATHIMA NALEERA


Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

(1)


Adam’s children – are those who always
drawing two lines and live, I know
these very same lifelines
running cross-cross
in my palms
In order to see these people
who collect
some miracles in the dark
and some dictates in the light
I need not wade through
a great distance
and get lost
nor stand on the mountain-peaks
and scale the length and breath
of the ocean
or to go to the wilderness and
steal the silent quietude…..
They scripting some hell
and say that it would burn
or paint a paradise just like that
and pretend to drink milky-rivers
therein
I need no such fallacies.
Suffice to come across
a pure soul
in the jostling crowd
along the way I go…
Then, I am the one of
Tomorrow.

ஆதாமின் மக்கள் --எப்போதும்
இரண்டு கோடுகள்
போட்டு வாழ்பவர்கள் --என்பது
எனக்குத் தெரியும்.....
எனது உள்ளங்கையிலும்
அந்த ரேகைகள் தான்
ஓடிக் கொண்டிருக்கின்றன
இருட்டில் சில அதிசயங்களையும்
வெளிச்சத்தில் சில விதிகளையும்
பொறுக்கிக் கொள்ளும்
இவர்களை நான் பார்ப்பதற்காக
நெடுந்துாரம் போய் தொலைந்துவிடவோ
மலைமுகடுகளில் நின்று
சமுத்திரத்தை அளந்துவிடவோ
வனாந்திரத்தில் போய்
நிசப்தமான மௌனத்தை
அபகரித்துக் கொள்ளவோ தேவையில்லை...
இவர்கள்
ஏதோ ஒரு நரகத்தை எழுதிவிட்டு
அது சுடுமென்றோ
சும்மா ஒரு சுவர்க்கத்தை
வரைந்துவிட்டு --அதில்
பாலாறுகளை பருகி கொள்ளும்
பாசாங்கோ அதுவும் எனக்குத் தேவையில்லை...
நான் செல்லும் திசையில்
நெருக்கமான சனசந்தடியில் --ஒரு
துாய்மையான ஆன்மாவை
சந்தித்துக் கொண்டால்....
நானே நாளைய மனிதன்
--பாத்திமா நளீரா--

(2)


I kept the bird

caged inside the cabin

But it was flying outside the

window

Only now I could realize

that what was caged inside the cabin

was not the bird

but my own self….


பறவையை --நான்
அறையினுள்ளே
அடைத்து வைத்திருந்தேன்...
அதுவோ
ஜன்னலுக்கு வெளியே
பறந்துக் கொண்டிருந்தது...
இப்போதுதான் புரிந்தது
நான் அடைத்து வைத்தது
பறவையையல்ல
என்னை....

--பாத்திமா நளீரா--

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024