INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

AYYAVOO PERAMANATHAN

 TWO POEMS BY

AYYAVOO PERAMANATHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(*With corrections suggested by the poet duly incorporated)

(1)

At the propitious hour before dawn
pouring that day into the milk-can
He boils it in the sun-oven.
Having one hand close to the sky
and the other near earth
as he swings the container
up and down
there springs
the cascade of Tea.
His smile filling and brimming
inside the mass of foam
breaking open into steam
and spreads fragrance supreme.
Measuring the gloom of
customers’ countenances in the teaspoon
mixing it and serving in pleasant warmth
is the epitome of aroma _
the taste buds revels as fish drenched in rain.
Each mouthful gulped
Entering inside and soaking the exhaustion
Tranquility ascends on moment magical and glides
The heart of this alchemist
bestowing the boon
of taste enchanting
which engulfs the very core
of our being
God must have designed
in the shape of Tea-leaf.

பின்சாமத்தில் அன்றைய தினத்தை பால்சட்டியில் ஊற்றி
சூரிய அடுப்பில் கொதிக்க வைக்கிறான்
ஒரு கை வானம் அருகிலும்
மறு கை பூமிக்குபக்கத்திலும்
வைத்து மேலும் கீழுமாக சுழற்ற
உள்ளங்கைக்குள்ளிருந்து
ஊற்றெடுக்கிறது
தேநீர் அருவி
குவளை
நுரைத்திரள்களுக்குள்
நிரம்பி ததும்பும்
அவன் புன்னகை உடைந்து ஆவியாகி சுகந்தம் பரப்புகிறது
வாடிக்கைகளின் முகவாட்டத்தை தேக்கரண்டியில் அளந்து
கலந்து தரும் இளஞ்சூடு நறுமணத்தின் பரிபூரணம்
மழையில் நனைந்த மீனைப்போல் திளைக்கிறது
சுவை மொக்குகள்
பருகும்
ஒவ்வொரு துளி மிடறும்
உள்ளிறங்கி அயர்ச்சியை நனைக்கையில் அற்புத தருணத்தின் மீதேறி மிதக்கிறது ஆசுவாசம்
உயிரின் ஆழத்தில் விரவும்
இன்சுவை ரசவாதம் தருபவனின்
இதயத்தை மட்டும் படைத்திருக்க கூடும் கடவுள்
தேயிலை இலை வடிவத்தில்

அய்யாவு பிரமநாதன்

(2)
The buzzard signal fly
tumbled down upon the street lamp
Emitting light
Prods its legs in the air and tries to
regain normalcy
The floating beetle
acutely feels the wind’s volume
in the pain of its legs
The images seen upside down
spreading as hallucinations
prove an eyesore.
The pain proving morbid
is being watched
by an owl, all amused
in absolute quietude.
A few ants rolling sideways
that which lay on its back
spreadeagled
the beetle ascended the wind
To those ants also
flying along the course of the
buzzard signal fly
Wings spring by and by
From the eyes of the flying ants
the minuscule globe
slowly slid.

ஒளி உமிழும்
தெரு விளக்கில் இடறி விழுந்த பெருவண்டு
கால்களை காற்றில் துழாவி இயல்புக்கு மீள எத்தனிக்கிறது
ரீங்காரமிட்டு
மிதக்கும் வண்டு
காற்றின் அடர்த்தியை கால்களின் வலியில் உணர்கிறது
தலைகீழாக தெரியும் பிம்பங்கள் கண்களில்
காட்சிப் பிழையாக படர்ந்து உறுத்துகிறது
நோகும் உயிர் வலியை
வேடிக்கைப் பார்க்கிறது
நிசப்தமாய் ஒரு கூகை
மல்லாந்து பரத்திக்கொண்டு கிடந்ததை
சில எறும்புகள் ஒருக்களித்துவிட வண்டு
காற்றின் மீதேறியது
வண்டின் திசைவழியில்
பறக்கும் எறும்புகளுக்கும்
சிறகுகள் முளைக்கிறது
பறக்கும் எறும்புகளின் கண்களிலிருந்து
மெல்ல நழுவியது
மீச்சிறு பூமி

அய்யாவு பிரமநாதன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024