INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

RAGAVAPRIYAN THEJESWI

 TWO POEMS BY

RAGAVAPRIYAN THEJESWI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
The peacock speaks to me
on a rainy day
having its clan by its side.
Pecking at the closed water tank of my terrace
Turning its head it scorns at me
Throwing the scrubby-scorpion stings
it shrieks in its own language
The deadly heat of the sun
proving unbearable to the peahen
is all for my sake it remarks
turning its long slender violet neck
leaving me wonderstruck
The howl of the peafowl
echoes in my kitchenette
hall
the patio outside
backyard
Its cry
can never enter my bedroom
as
in the luxury of AC
windows
doors
eyelids
remain shut.

Ragavapriyan Thejeswi

மயில் என்னுடன்
ஒரு மழை நாளில் பேசுகிறது
தன் கூட்டத்தை உடன்வைத்துக்கொண்டு..
என் வீட்டு மாடியின்
மூடிய தண்ணீர் தொட்டியைக் கொத்திப்பார்த்து
தலை திருப்பி என் மேல் கோபிக்கிறது..
தன் தோகையில் தூக்கிவந்த
புதர்த்தேளின் கொடுக்குகளை
போட்டுவிட்டு
அதன்மொழியில் அகவிப் போகிறது..
மயில் தாங்கமுடியா
மசான வெப்பம் தரும் வெயில்
என் பொருட்டு அடிப்பதாய்
நீள் ஊதாக் கழுத்தைத் திருப்பி
அழகாகச் சொல்கிறது..
அதன் சகிக்க முடியா அகவல்
என் சமையலறையிலும்
கூடத்திலும்
வாசல் திண்ணையிலும்
கொல்லைப்புறத்திலும்
எதிரொலிக்கிறது..
அதன் அகவல்
என் படுக்கையறையில் மட்டும்
நுழையவே முடியாது..
குளிர் சாதனச் சுகத்தில்
ஜன்னல்
கதவுகள்
இமைகள் மட்டும்
மூடியிருப்பதால்..

ராகவபிரியன்


(2)

With all the set-props required for stage
well arranged
The moment before the commencement of the play
began scattering loads of lightning rays
The viewer pulls and views each segment of the screen
one after another
The curtain brought an illusory Nandi and made it run
Taken aback
He alights off the screen…
With the moment for the Marketing Manager
of Media Promotion Wing
to swing into action
giving pre-counselling
to the viewers
springing
and the circular colour sensors
start swirling
He who sells popcorn
leap and ascend the dais.
The hungry Shiva in makeup and costumes
asking with his eyes ‘How much?”
With the nose-rope coming off
Shiva’s bull sets forth with swirling horns
the viewer, actor, popcorn
Marketing Manager journalistic ethics
trying to grab the hump of the bull in vain
go round and round on the stage
With the bell sounding
Bodhi Shiva all over the
Podium….
Shivoham…. Shivoham….
At that instant
one of the colour sensors striking work….
On the bloody red proscenium
Nandhi bangs its horns against the stage
deliriously enraged.
In order to relish a spec of popcorn
That from viewer’s hand had fallen
alights the holy bull
Actor Media
and the Morbid Moment
of morality invalidating integrity.
.
Ragavapriyan Thejeswi

நாடக
மேடைக்கான அனைத்தும்
கச்சிதமாக அமைய
மின்னல்களை வாரியிறைக்கத் தொடங்கியது
நாடகத்திற்கு முன்னான அக்கணம்...
காட்சிகளுக்கான திரைக் கட்டங்களை
தனித் தனித்தனியாக இழுத்துப் பார்க்கிறான்
பார்வையாளன்...
திரைச் சீலை பொய் நந்தியொன்றை
இழுத்து வந்து சட் டென ஓடச் செய்தது...
திடுக் கிட்டவன்
திரையை விட்டு கீழிறங்குகிறான்...
ஊடக அமைப்பு மேலாளர்
பார்வையாளர்களுக்கான முன் போதனைகள
செய்யும் கணம் மொட்டுவிட
ஓளி வண்ண மாற்றிகள்
சுழலத் தொடங்குகையில்
பாப்கார்ன் விற்பவன்
தாவலுடன் மேடையேறுகிறான்...
பசித்த சிவன் அரிதார பூச்சுடன்
எவ்வளவென கண்களால் கேட்க...
மூக்கணாங்கயிறுடைத்து கிளம்புகிறது
கொம்பு சுழற்றும் சிவகாளை..
பார்வையாளனும் நடிகனும் பாப்கார்னும்
அமைப்பு மேலாளரும் ஊடக அறமும்
ஒரு மாட்டின்
திமிளை பற்றி அடக்க முடியாமல்
மேடையைச் சுற்றத் தொடங்குகிறார்கள்...
மணி ஒலிக்க போதிசிவம் மேடையெங்கும்...
அக்கணம்
ஒளி மாற்றிகளில் ஒன்று
வேலை நிறுத்தம் செய்ய...
சிவப்பு வண்ண மேடையில்
நந்தி ஆக்ரோஷமாய் கொம்புகளை
மேடைத் தரையில் முட்டுகிறது...
பார்வையாளனின் கை நழுவிய
பாப்கார்ன் பொரியொன்றை
தின்னக் கீழிறங்குகிறது நந்தியும்
நடிகனும் ஊடகமும்
வாய்மை மறந்த
நல் அறத்தின் கொடுங்கணமும்...

ராகவபிரியன்




No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024