A POEM BY
PON ILAVENIL B
turn the same into investments
They keep filling things incredulous
With air just like balloons.
They fly high things amazing
Incredulity is not a big game
it is something nuanced.
They are but mere pastime business.
Those who decorate things incredulous
keep multiplying.
For the readymade things incredulous
the manufacturers keep infusing life.
In truth things incredulous are
but dropping withered leaves
or ‘jigina’ sheets.
பிரமிப்புகள்
______
பிரமிப்புகளை விதைப்பவர்கள்
அதையே மூலதனமாக்குகிறார்கள்
பிரமிப்புகளுக்கு
பலூனைப் போல இறங்காது
காற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்
பிரமிப்புகளை உயரத்தில்
பறக்க விடுகிறார்கள்
பிரமிப்புகள் என்பது
பெரிய விளையாட்டு இல்லை
நுண்மையான விளையாட்டு
அவைவெறும் பொழுது போக்கான
வியாபாரம்
பிரமிப்புகளுக்கு
அலங்காரம் செய்பவர்கள்
கூடிக் கொண்டிருக்கிறார்கள்
தயாரிக்கப்பட்ட பிரமிப்புகளுக்கு விற்பனையாளர்கள்
உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
உண்மையில் பிரமிப்புகள் என்பது
உதிர்ந்து கொண்டிருக்கும் சருகுகள்
அல்லது ஜிகினா காகிதங்கள்
பொன் இளவேனில்
No comments:
Post a Comment