TWO POEMS BY
LEENA MANIMEKALAI
Instead of touching me
You are caressing its words with your eyes.
The room is dim lit
In the glow of the residual cigarette seeping through the fingers
The lines of your forehead are seen
I do know
You are reading this poem now
The train that usually allows you in now goes past
In the journey you deliberately miss the places
where you have to alight
you watch so curiously
the way lines twist and curve
in the cluster of rays dancing in the air.
You turn your face away from the poem
towards faraway.
The quiet of poem
goes up and down your larynx
I know
You are reading this poem now
Reclining on the steps at the river side
You become engrossed in the direction
where the ‘Kiluvai’ leaves are dropping
You murmur the line
‘Heart spreads like a plant-root’
Between bitterness and hope
the poem smiles.
I know
You are reading this poem now
You have switched off the lights
Books resonating all over the bed
Nocturnal insects are yet to subside
You let the mobile sparkle
Enlarging each letter and colouring it
You spray them all over the firmament
as star-dust
நீ இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கிறாய்
என்னை தொடுவதற்குப் பதிலாக
அதன் வார்த்தைகளை உன் பார்வையால் வருடிக்கொண்டிருக்கிறாய்
அறையில் வெளிச்சம் குறைவாய் இருக்கிறது
விரல்களில் கசிந்துக்கொண்டிருக்கும் சிகரெட் துண்டின் ஒளியில்
உன் நெற்றி சுருக்கங்கள் தெரிகின்றன
எனக்குத் தெரியும்
நீ இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கிறாய்
வழக்கமாய் உன்னை ஏற்றிச் செல்லும் ரயில் உன்னைக் கடந்து செல்கிறது
பயணத்தில் இறங்கும் இடத்தை தெரிந்தே தவற விடுகிறாய்
காற்றில் நடனமிடும் ஒளிக்கற்றைகளில் வரிகள் நெளிவதை
ஆர்வமுடன் கவனிக்கிறாய்
கவிதையிலிருந்து முகத்தை
தொலை தூரத்தை நோக்கி திருப்பிக் கொள்கிறாய்
உன் தொண்டைக் குழியில் ஏறி இறங்குகிறது
கவிதையின் மௌனம்
எனக்குத் தெரியும்
நீ இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கிறாய்
நதிக்கரையின் படிக்கட்டுகளில் சாய்ந்து
கிளுவை இலைகள் விழும் திசையில் லயிக்கிறாய்
இதயம் ஒரு கொடிவேர் போல பரவுகிறது
என்று எழுதப்பட்டிருந்த வரியை முணுமுணுக்கிறாய்
கசப்புக்கும் நம்பிக்கைக்கும் இடையே
கவிதை புன்னகைக்கிறது
எனக்குத் தெரியும்
நீ இப்போது இந்த கவிதையை வாசித்துக்கொண்டிருக்கிறாய்
விளக்குகளை அணைத்துவிட்டாய்
படுக்கை முழுதும் இரைந்திருக்கும் புத்தகங்கள்
இரவுப் பூச்சிகள் இன்னும் அடங்கவில்லை
கைபேசியை ஒளிரவிடுகிறாய்
ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக்கி வண்ணமடித்து
வெளியெங்கும் நிறைக்கிறாய்
நட்சத்திர தூசியாய்
No comments:
Post a Comment