INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

KALIYA MURTHY

A POEM BY 

KALIYA MURTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


A tiny little puppy

is all alone

Moreover

Hungry

In the crowded Tea-shop

when it fondly strokes feet unfamiliar

it gets kicked.

Whining in pain

when it beseeches without losing hope

The shopkeeper’s benevolence

splashes hot water at it

Screaming

when it runs to the highway and groans

it searches for the meaning of love and mercy

in vain

Just for a while

The moment it sees a lone footwear

forsaken just like its own self

It sets out to play with it.

It appears like

two sorrows all abandoned

providing solace to each other.

I had been the puppy

And the footwear

Only after learning to

Play with the world

Viewing it as a ball

And kicking it to my heart’s content

I have now entered into a dream

of world sans hunger.

Kaliya Murthy


ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி

தனித்திருக்கிறது

மேலும்

பசித்திருக்கிறது

கூட்டம் நிரம்பிய தேநீர்க்கடையில்

ஒரு விள்ளல் ரொட்டிக்காக

அறிமுகமற்ற கால்களை அது

கொஞ்சும்போது

எட்டி உதைக்கப்படுகிறது

முனகலைப்போல் அது அழுதபடியே

நம்பிக்கை இழக்காமல் இறைஞ்சும்பொழுது

கொதிக்கும் வெந்நீரை வீசுகிறது

கடைக்காரனின் கருணை

வீல்வீல் என்று கதறியபடியே

சாலைக்கு ஓடி

முனகும்போது

அன்பு கருணை என்பதற்கெல்லாம்

அர்த்தம் என்னவென்று தேடுகிறது

கொஞ்சநேரம்தான் யாவும்

தன்னைப்போலவே கைவிடப்பட்ட

ஒற்றைச்செருப்பைப் பார்த்தவுடனே

விளையாடத்தொடங்குகிறது

அதனோடு

கைவிடப்பட்ட இரண்டு துயரங்கள்

ஒன்றுக்கொன்று ஆறுதல் சொல்லிக்கொள்வதாய் இருக்கிறது

அவ்விளையாட்டு

நான் நாய்க்குட்டியாகவும் இருந்திருக்கிறேன்

செருப்பாகவும் கிடந்திருக்கிறேன்

பூமியையே பந்தாக உதைத்து

விளையாடப் பழகியபிறகே

பசியற்ற உலகுபற்றிக்

கனவொன்றில் நுழைந்திருக்கிறேன்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024