TWO POEMS BY
PON ILAVENIL B
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
falling on the floor and bouncing up
again and again
is being heard
Someone who wants to relish that noise
is banging it against the floor
It is as if my note
denote
its racing pulse.
To which particular ears
the noise of its sinking and leaping
want in particular to transfer
its pain severe
_ I wonder……
As the lines I aspired to pen
for someone
the sound rolls inside me
as agitation intense.
I know not for whom it is
but it makes me feel ill at ease..
I too keep tumbling in Here and Now _
managing to rise somehow.
பிளாஸ்டிக் பந்து
தரையில் வீழ்ந்து வீழ்ந்து எழும்
சத்தம் கேட்கிறது
அதன் சத்தத்தை ருசிக்க
யாரோ அதை
தரையில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதன் துடிப்பை
எனக்கு குறிப்பு உண்ர்த்துவதைப் போல இருக்கிறது
அதன் சத்தமும் அமிழ்தலும்
எத்தனை செவிகளுக்கு தம் வலியை
குறிப்பாய்க் கொண்டுபோக நினைத்தது என்று
தெரியவில்லை
பகலில் யாருக்கோ எழுத நினைத்த
வரிகளைப் போல
சத்தம் பதட்டத்துடன்
எனக்குள் உருளுகிறது
அது யாருக்கானதோ தெரியவில்லை
என்னை தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது
நானும் தான் பந்தைப்போல
இன்றில் விழுந்து விழுந்து
எழுந்துகொண்டிருக்கிறேன்
பொன் இளவேனில்
(நுண்மொழிக் காஞ்சி தொகுப்பிலிருந்து)
2
Just as inserting the thread into a needle
too strenuous it is
to find out a formula
Can voices that sound washed-out
as torn footwear
impart wisdom?
Indeed it is the idiots
Who can’t even put up a good show of pretense
Who are the pastimes of wisdom
Even if we fasten
in thousands
tomfooleries
can the wheel of intelligence
move even one bit ahead?
Still it is the game of fools
that offers comic-relief
non-stop to relish
அறிவுச்சக்கரம்
தையல் ஊசியில்
நூல் கோர்ப்பதைப்போல
சிரமப்பட வேண்டியிருக்கிறது
ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடிக்க
அறுந்த செருப்புகளென
தேய்ந்த குரல்கள்
ஞானத்தையா ஊட்டும்
ஒழுங்காக ஒப்பனைகளைக்
கூடச் செய்யத் தெரியாத
மக்குகள்தான்
ஞானத்தின் பொழுதுபோக்கு
ஓராயிரம் மடத்தனத்தைப் பூட்டினாலும்
அறிவுச்சக்கரம்
துளி நகருமா
ஆனாலும் ரசிக்க ரசிக்க
மக்குகளின் ஆட்டத்தில்தான்
அளவற்ற நகைச்சுவை
பொன் இளவேனில்
(நுண்மொழிக் காஞ்சி தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment