INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 29, 2022

ABDUL HAQ LAREENA

 TWO POEMS BY

ABDUL HAQ LAREENA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

That became a bamboo forest
Expectations of rain belied
Despite burning umpteen number of times
and sprouting again
It remained the same.
Word was everything
Dreams about Life
it had strung in words
well-knit.
Awareness of the mysteries of
the wastelands within
turned into not by Hope.
The breeze had brought along
Word pleasantly cool
It was ever unleashed.
Always on the move
The desire to have it exclusively one’s own
in chains
is rather unfair
Fastening the legs of Dos and DON’Ts
to wind
is rather unkind
Fully aware of the possibility of
burning and turning into ash
sprouting as Bamboo forest
yet again
the heart sang along the course of wind.
Wind wafts in Music
Music merges with wind.
Abdul Haq Lareena

ஒரு மூங்கிற் காடாயிற்று
மழை பற்றிய எதிர்பார்ப்புகள் பொய்த்து
இதற்கு முன்பும் பலமுறை
எரிந்தெரிந்து துளிர்த்திருந்தும்
அது அதுவாகவே கிளைத்திருந்தது
சொல்லே எல்லாமாயிருந்தது
வாழ்தல் பற்றிய கனவுகளை
வெற்றுச் சொற்களுக்குள் மட்டுமே
கோத்துக் கோத்துக் கட்டியிருந்தது
அதற்குள்ளான சூன்யப் பிரதேசங்களின்
மர்மங்கள் குறித்த விழிப்புணர்வை
நம்பிக்கை காவுகொண்டிருந்தது.
குளிர்ந்த சொல்லைச் சுமந்து வந்திருந்தது
காற்று
அது கட்டற்றது, ஓரிடம் நில்லாதது
தனக்கேயானதாய்க் கொள்ளும் வேட்கை
நியாயமற்றதுதான்
நிபந்தனைகளின் கால்களைக் காற்றுக்குப் பொருத்துதல்
நியாயமே அற்றதுதான்.
எரிந்துகருகும் எல்லாச் சாத்தியப்பாடுகளையும்
அறிந்திருக்கும் நிலையிலும்
ஒரு மூங்கிற் காடாகவே
மறுபடியும் துளிர்த்து காற்றுவெளியிடை இசைபாடிற்று
மனசு.
இசையில் மிதக்கிறது காற்று
காற்றில் கலக்கிறது இசை.

(2)
QUINTESSENCE

As two lines have I written
the sorrow unbearable
It became a highway
Now it is along that same road
You are travelling
The secret of the trees in thick clusters
flourishing with plenty of flowers
along the entire stretch between two ends
so far as you regard those who come along
as co-travellers _
the wind wouldn’t have disclosed to you
as yet
I hope.

சூட்சுமம்
=========
கடக்க முடியாத துயரை
இரு வரிகளாய் எழுதினேன்
ஒரு நெடுஞ்சாலையாய் மாறிற்று
இப்போது நீங்கள்
அதில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்
உடன் வருபவர்களைச் சகபயணிகளாய்
ஏற்று நீங்கள் மதிக்குந்தோறும்
இரு அந்தங்கள் நெடுகிலும்
பூக்கள் சுமந்து அடர்மரங்கள் தழைக்கும் ரகசியத்தை
காற்று உங்களுக்கு இன்னும் சொல்லியிருக்காது
என்று நம்புகின்றேன்.
ABDUL HAQ LAREENA

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE