INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 28, 2022

PAARVAIATTRAVAN

 A POEM BY

PAARVAIATTRAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Toiling hard throughout the day
Contemplating all through the night
Focussing
Channelizing thoughts without digressing
Choosing words
Painting in colours myriad
thoughts flooding
I would send her
a poem so unique.....
The very next instant
She would send me one
which
Whitman, Shelley,
Kamban, Ilango
Manushyaputhran Yavaniika Sriram
Perundevi including
Poets the world over
in unison
can’t hope to pen
“What does this mean?”

பகலெல்லாம் பாடுபட்டு
இரவெல்லாம் யோசித்து
மனதை ஒருமுகப்படுத்தி
சிந்தனையை சீராக செலுத்தி
வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து
எண்ணங்களை வண்ணமாக்கி
அற்புத கவிதை ஒன்றை
அவளுக்கு அனுப்பிடுவேன்...
விட்மனும் செல்லியும்
கம்பனும் இளங்கோவும்
மனுஷ்யபுத்திரனும் யவனிகா ஸ்ரீராமும்
பெருந்தேவி உட்பட பெருந்திரளான கவிஞர்கள் என
தமிழ்நாட்டு கவிஞர்கள் முதல்
தரணியிலுள்ள கவிஞர்களெல்லாம்
இணைந்து புனைந்தாலும்
இயற்ற இயலா கவிதையொன்றை
அடுத்த நொடியே
எனக்கு அனுப்பிடுவாள்...
"இதற்கு என்ன அர்த்தம்?"

_ பார்வையற்றவன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE