INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 27, 2022

THEEPIKA THEEPA

 TWO POEMS BY

THEEPIKA THEEPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1. THE FEAST THAT WAS NOT
Sour, Bitter taste all over the table
Acid of treason brimming in the mug
Bones of spite in the plate
Smile of venom fill the countenances
Feet of snake beneath
Who has organized this
Peace Design
In the eyes of sorcerers
bringing along foxes unleashed
a mammoth erroneous jungle.
In the daggers planted
deep into the back
blood is oozing still.
Even he victorious in the battle-field
is defeated in dramas staged
Go away
Just don’t be go anywhere near
this demonic wilderness
It is where all things righteous
are butchered and buried.

பொய் விருந்து
-------------------------
மேசையெங்கும் கசப்பின் நெடி.
குவளையில் துரோகத்தின் அமிலம்
தட்டில் காழ்ப்பின் எலும்புகள்.
முகங்களில் நஞ்சின் புன்னகை.
கீழே பாம்பின் கால்கள்.
இந்தச் சமாதானத்தை
யார் ஒழுங்கு படுத்தியது?
நரிகளை அவிழ்த்துக் கொண்டு வரும்
சூனியக்காரரின் விழிகளில்
மாபெரும் பொய்க் காடு.
முதுகில் ஆழ இறக்கிய கத்திகளில்
இன்னமும்
இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது.
போரில் வெல்கிறவன் கூட
நாடகங்களில் தோற்கடிக்கப்படுகிறான்.
இந்தப்
பேய்க் காட்டை அண்டாதே!
அறத்தைப் புதைக்கிற கொல்லிடமது.
---- xxx -----
தீபிகா

(2)
Upon meticulous precision sits
the giant rock
a tiny egg
rolls on the tip of knife
As long as it doesn’t break
well and good
the doors not opened
turn into list of assets
The violin strings
not played
weigh heavy
prove suffocating
some fish are destined to become
‘Karuvaadu’.
Paintings incomprehensible
Are pregnant with meaning.
Leave it.
Let it be.

Theepika Theepa
ஒரு நுணுக்கத்தின் மீது
உட்கார்ந்திருக்கிறது பெரும் பாறை.
கத்தியின் விளிம்பில் உருள்கிறது
சிறு முட்டை.
உடையாத வரை நிம்மதி.
திறக்காத கதவுகள் தோம்பாகின்றன.
வாசிக்கப்படாத
வயலின் கம்பிகளின் கனத்தில்
மூச்சு முட்டுகிறது.
சில மீன்கள்
கருவாடாகுவதே விதி.
புரியாத சித்திரங்களுக்கு
பொருள் அதிகம்.
விட்டு விடு. இருக்கட்டும்.

- தீபிகா-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE