TWO POEMS BY
PRADHABA RUDRAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
As the thudding hoofs sans rhythm
the mind wanders
directionless
compass gone faulty
Ship crashing into shore
Linking the dots of bonding
that you have placed
creating countenances alien
destroying the mindscape sketch
inch by inch
With Space and Time
merging into one
Beyond eons remains
the Mind-Stallion.
மனக்குதிரை
திசை திருப்ப கடிவாளம்
இருந்தும்
ரிதமற்ற குளம்படிச் சத்தமென
திக்கற்றுத் திரிகிறது
மனம்
பழுதடைந்த திசைகாட்டி
தரைதட்டிய கப்பல்
நீ வைத்த உறவுப்புள்ளிகளை
சரீரம் கொண்டு இணைத்து
அந்நிய பாவனையில்
முகங்களை சிருஷ்டித்து
உள் சித்திரத்தை
அணுஅணுவாய்
சிதைக்கிறது
இடமும் பொருளும்
ஒன்றெனச் சங்கமித்து
காலத்தை கடந்து நிற்கிறது
மனக்குதிரை
(பிரதாப ருத்ரன்
மழை மியூசியம் தொகுப்பிலிருந்து)
2. BODY BREEZE MUSIC
Body
Breeze
Music
Solitude
Night
You
Touch
Spell
Shiver euphoric
The river
Rustling
gravels
I gathered the Moon
resembling thoughts
In the droplets dispersed
One
became Hundred
anon
தேகம் தென்றல் இசை
தேகம்
தென்றல்
மனம்
இசை
தனிமை
இரவு
நான்
நீ
ஸ்பரிசம்
மோனம்
சிலிர்ப்பு
ஆறு
சரளைகள்
சலசலக்க
எண்ணங்களைப் போலவே
தெரிந்த நிலவினை
கையிலெடுத்தேன்
சிதறிய துளிகளில்
ஒன்று
நூறானது.
No comments:
Post a Comment