TWO POEMS BY
SATHIYARAJ RAMAKRISHNAN
A lone strand of feather seen
in a landscape filled with
luscious green
must have come crossing
lands bereft of joy
Stroking oneself with bird’s feather
is a kind of serene quietude.
Stirring the content of a bottle of balm
with a strand of feather
and applying the mix on pain
is a reconciliation
The Velvette of a feather
is so very soothing.
For the heart to gain it
it should receive
thousand embraces and above
My Love….
Sathiyaraj Ramakrishnan
பசுமை நிறைந்த நிலக் காட்சியில்
காணக்கிடைக்கும் ஓர் இறகு
மகிழ்ச்சி இல்லாத நிலப்பரப்புகளைக்
கடந்துதான் வந்திருக்க வேண்டும்.
பறவை இறகால் வருடிக் கொள்வது
ஒருவகை சாந்தம்.
தைலப் புட்டியினுள் ஓர் இறகால் துழாவி
வலியின் மேல் பூசுகையில்
அது ஒரு சமரசம்.
ஒரு இறகின் அந்த வெல்வெட்
இதமானது.
மனம் இதை அடைய ஆயிரம் தழுவலைப்
பெற வேண்டும் அன்பே.
(2)
so very lovely
Just as bird’s feathers
keep your mind and heart well cushioned
When you fly
Only when you fly
use them.
Celebrate them as fireworks brilliant.
Don’t imagine yourself
to be fluttering
and turn emotional
Don’t claim the bird your own
and try to shape its life
declaring that from the moment it came
into your view
you have fallen in love with it.
Flying and wandering is what a bird is
all about, My Dear
If your heart had grown shrunken
and after experiences intense
If you want to resurrect it
Go wandering like a bird
for a while
and return
Becoming a bird is but
the heart’s desire to renew itself.
Near the Moon parrots soar on and on
with no dead-end lanes.
இந்த மாலையை அழகாக்கியது கிளிகள் தான்.
ஒரு பறவை இறகுகள் போல
இதயத்தையும் மனதையும் மூடி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பறந்தால்
பறக்கும் போதும் மட்டுமே
பயன்படுத்துங்கள்.
வான வேடிக்கைகள் என இதை கொண்டாடிச் செல்லுங்கள்.
நீங்கள் பறப்பதுபோல உள் வாங்கி
உணர்ச்சி வசப் படாதீர்கள்.
பார்த்த உடனேயே எனக்கு பிடித்து போயிற்று என அதை
உங்களுடனே வளர்க்க நினைக்காதீர்கள்.
அலைந்து திரிதலே பறவை அன்பே.
மனம் முடங்கி நீண்ட அனுபவங்களுக்கு பிறகு மனதை புதுப்பிக்க விரும்பினால்
பறவையாக சற்று அலைந்து பின்
திரும்புங்கள்.
மனம் புதுப்பித்தலை தேடும் ஒரு நிலையே பறவையாதல்.
நிலவுக்கருகே கிளிகள் பறக்கிறது முட்டுச் சந்துகளற்று.
#
சத்யா
No comments:
Post a Comment