INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 28, 2022

MOHAMED BATCHA

 A POEM BY

MOHAMED BATCHA

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)


We were discussing about WarOut of the bodies King Asoka had sliced
to his heart’s content
how many trees would have sprouted?
When whose life agonized
Alexander the Great would have thought
that this world would not
infinitely last
After shooting and relishing which life
the child’s heart in Hitler
would’ve changed colour?
I feel like doing away with Robert Omen Hyber
In a single cut
Hiroshima, Nagasaki!
For Taliban’s blood thirst
How can Almighty be their own
benign One!
Iraq’s blood
_ American tongue’s Fascist twists
In the Srilanka’s ethnic massacre
Would Buddha have celebrated
the Festival of Bodhi tree?
The European countries see to it
that the weapons don’t rust
That NATO is
the congregation of Arms dealers
_ Does Jelensky know this?
Though for self-protection
That which Russia is building upon blood
is but the never dying stench of blood.
What my friend told last
Proved woefully unsettling:
Only till humans turn into Zombies
There will be War …..
Mohamed Batcha

போரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்
அசோகன் வெட்டித் தீர்த்த உடம்புகளிலிருந்து
எத்தனை மரங்கள் முளைத்திருக்கும்!
எந்த உயிர் துடித்தபோது
அலெக்ஸாண்டர் நினைத்திருப்பான் இந்த உலகம்
நிலையானது இல்லையென்று?
ஹிட்லருக்குள் இருந்த குழந்தை மனம்
எந்த உயிரைச் சுட்டு ருசித்துப் பின் நிறம் மாறியிருக்கும்?
ராபர்ட் ஓமன் ஹைபரை ஒரே வெட்டில்
வெட்டி வீழ்த்தி விட வேண்டும் போல் இருக்கிறது
ஹீரோஷீமா, நாகசாகி!
தாலிபான்களின் இரத்த ருசிக்கு....
இறைவன் எப்படி இவர்களின் கருணையாளன்?
ஈராக்கின் இரத்தம்
அமெரிக்க நாவின் பாசிச முத்திரைகள்,!
இலங்கை இனப் படுகொலையில்
புத்தன் போதி மரத்து விழாவா கொண்டாடியிருப்பான்?
ஐரோப்பிய நாடுகள்,
ஆயுதங்களைத் துருப்பிடித்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன!
நேட்டோ என்பது
ஆயுத வியாபாரிகளின் கூட்டமைப்பு என்பதை
ஜெலன்ஸ்க்கி அறிவாரா?
தற்காப்புக்கென்றாலும் உதிரத்தின் மீது ருஷ்யா கட்டமைப்பது
தீராத இரத்த வாடை!
இறுதியாக நண்பன் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது
மக்கள் ஜாம்பிகளாக மாறும் வரைதான்
போர் என்பது....
.
முகமது பாட்சா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024