INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 27, 2022

YUGA YUGAN

 A POEM BY

YUGA YUGAN

(Rengarajan Veerasamy)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The expertise gained

sacrificing one’s own life
trickles out as milk poured
in the mouth of the departed.
The firewood of he who wanders
carrying the sun in his tiny cloth-bag
waits
for a lone matchstick.
In the nest of the baby birds
that open not their tender mouths
when their mother returns
with its beak bearing no grains
there prevails the silence of
the dense shadow of burial ground.
In the bloated corpse of the town
where the springs have gone dry
and the soul wanders as ghost
the worms that relish and revel
glitter all the more.
The ‘Veliparuthi’ _ Pergularia daemia Seeds
that burst and scatter
flying along the wind’s course
land not on the roots.
He turning ecstatic on seeing
the new leaf of Pipal tree
sprouting upon his roof
is insane to thee
but in every sense
the very God to me

Yuga Yugan

வாழ்வைத் தின்னக் கொடுத்து
கைக்கொண்ட வித்தை
நாவறண்டுச் செத்தவனிவன்
வாயில் ஊற்றப்படும் பால் போல வழிகிறது
சுருக்குப்பையில்
சூரியனைச் சுமந்தலைபவனின் உலையடுப்புச்சுள்ளி
காத்திருக்கிறது
ஒற்றைத் தீக்குச்சிக்காக
அலகில் தானியமற்றுத் திரும்பும்
தாய்ப்பறவையின் வருகைக்கு
வாய்பிளக்காத குஞ்சுகளின் கூட்டில் கவிகிறது
கல்லறையின் கரிய நிழல் நிசப்தம்
ஊருணிகள் செத்து விட்ட
ஆன்மா பேயாய் அலையும் ஊரின்
ஊதிப் பருத்த பிணத்தில்
திளைத்து நெளியும் புழுக்கள் மின்னுகின்றன
கண்காணா காற்றின் திசைகளில்
வெடித்துப் பறக்கும்
வேலிப்பருத்தி விதைகள்
வேர்களில் வீழ்வதில்லை
தன் வீட்டு கூரையில் முளைத்த
அரசங்கன்றின் புதிய தளிருக்கு
பரவசப்படுபவனை
பைத்தியமென்கிறீர்கள் நீங்கள்
கடவுள் என்கிறேன் நான்.
-யுகயுகன்
01/04/2022

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024