INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 28, 2022

RAMESH KANNAN

 A POEM BY

RAMESH KANNAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


In the buzzing jam-packed highways
Flyovers are required.
The tall structures that were frightening me till that time
turning so tiny
come into view
as to a child lifted by the father in a festival
for showing the god.
As its lower portion
turns into the dining room of a house
for their sake
some Lion’s club water the place
and grow flowers.
At night the same change into an open theatre.
Just imagine, if this flyover is not here
How could we cross all these statues
this place without this flyover.
The fly over is
the green light forever glowing
in the middle of the road
Anytime you can climb up and alight
This is how it turns the entire stretch
of a road
into a park
And the city’s insane ones
safeguard all the bridges and flyovers
taking turns.

நெருக்கடி மிகுந்த பரபரப்பான சாலைகளில் மேம்பாலங்கள் தேவைப்படுகின்றன
அதுவரை எனை மிரட்டிய வானாளவிய கட்டிடங்கள் எவ்வளவு சிறிதாகி
ஒரு தகப்பன் திருவிழாவில் தலைமேலுயுர்த்தி சாமி காட்டியதைப் போலக் காணக்கிடைக்கிறது
அதன் கீழ்ப்பகுதி
ஒரு வீட்டின் சாப்பாட்டு அறையாக மாறிக் கொண்டதும்
அவர்களின் பொருட்டு
ஏதோவொரு
அரிமா சங்கம் நீர்பாய்ச்சி
பூ வளர்க்கிறது
இரவில் அதுவே ஒரு திறந்தவெளி திரையரங்கமாகிறது
இந்தப் பாலம் மட்டும் இல்லையெனில் நினைத்துப் பாருங்கள்
இத்தனை சிலைகளை நாம் எப்படி கடப்பது
பாலம்
எப்போதும் முச்சந்தியில் எரிந்து கொண்டிருக்கும் பச்சை விளக்கு
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏறலாம் இறங்கலாம்
இப்படித்தான் ஒரு முழு நீளத்தெருவைத் தன் பங்கிற்கு
ஒரு பூங்காவாக்கி விடுகிறது
மேலும்
எல்லாப் பாலங்களையும் அந்த நகரத்தின் பைத்தியக்காரர்கள் சுழற்சி முறையில் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.





No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE