INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, April 27, 2022

IBNU ASUMATH

 TWO POEMS BY

IBNU ASUMATH

Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)


I
I the Myself not We the Ourself
I, just the I, I alone,
I attempt to make into We
Claiming that the I, Myself
knows all and more
I myself write poem
and the foreword
and the review
and I myself reading
and I myself speaking about it
to some
I myself creating a prize
I myself bestowing it on myself
In spaces where I am not
I without I surfacing
do I attempt to insert I
Without I, no We, say I
But, even without We,
I am
I be
I _
am my very own
I am
Ibnu Asumath

நான்!
-------
நானேயான நாமல்லாத
நானேயான நான் மட்டுமேயான
நானை நான் நாம் படுத்த முயல்கிறேன் ....
நானேயான நானுக்கு நான்கும் தெரியுமென
நானே கவி எழுதி
நானே முன்னுரையும் எழுதி
நானே அதற்கு விமர்சனமும் எழுதி
நானே படித்துக் கொண்டு
நானே நான்கு பேருக்கு சொல்லிக் கொண்டு
நானே பரிசு தயாரித்து
நானே நானுக்குக் கொடுத்துக் கொண்டு ...
நானில்லாத எந்தவொரு வெளியிலும்
நானை நான் நுழைப்பதற்கு
நானில்லாதவாறு நானே முயல்கிறேன் ...
நானில்லையேல் நாமில்லை என்கிறேன்
நாமில்லையென்றாலும்
நான் இருக்கிறேன்.
நான் -
நானே நான் !

- இப்னு அஸூமத்


2.ON A DAY SOME DAY!

Attires not seen on those lot
from whom hues have come apart
Can’t say they are nude
Everything looked like sainthood
One climbed on another
So as to prevent him from falling
another held him
All the three tumbled together
Well done applauded others
One had the face of fox
He searched his face in Facebook
Many faces remained empty spaces
In one of them he fixed his face
He got maximum Likes
In his comment one had mentioned
“Wow- beautiful! Wonderful!’
They danced
in slush
From somewhere afar
a ‘Kapiringa’ song
heard from the grove
where koels have breathed their last
the buffalo that crossed them
looked at its own reflection
in the stream
On a day
when the sky turned dark
and the land parched
with hours going nowhere
I am eager to see their dance
once more.
IBNU ASUMATH

ஒரு நாளில் ஒரு நாள்!
-----------------------------
நிறம் பிரிந்த அவர்களிடமிருந்து
ஆடைகளைக் காணவில்லை
அம்மணம் என்றும் சொல்வதற்கில்லை
துறவறம் போலிருந்தன எல்லாம் ...
ஒருவன் இன்னொருவன் மேல் ஏறினான்
அவன் விழாதிருக்க
இன்னொருவனைப் பிடித்துக் கொண்டான்
மூவரும் சேர்ந்து விழுந்தனர்
அது சரியென ஏனையோர் பாராட்டினர்!
ஒருவனுக்கு நரி முகம்
முக நூலில் தன் முகத்தைத் தேடினான்
பல முகங்கள் வெற்றிடங்களாக இருந்தன
அதில் ஒன்றில் தன் முகத்தைப் பொருத்தினான்
அவனுக்கு அதிகபட்ச விருப்புகள் கிடைத்தன
அவனுக்கு இட்ட பின்னூட்டத்தில் ஒருவன்
'அழகு! அற்புதம்!' என குறிப்பிட்டிருந்தான் ...
அவர்கள் ஆடினார்கள்
சகதிக்குள்
எங்கிருந்தோ ஒரு கபிரிஞ்ஞா பாடல்
குயில்கள் இறந்த தோப்புக்குள்ளிருந்த கேட்டது
அவர்களைக் கடந்து போன ஓர் எருமை
ஓடை நீரில்
ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டது
வானம் இருண்ட
பூமி வறண்ட
பொழுதுகள் போக்கற்றுப் போன
ஒரு நாளில்
அவர்களது ஆட்டத்தை மீண்டும் காண
நான் ஆவலாய் உள்ளேன்.

- இப்னு அஸூமத்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE