INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 29, 2022

KANNAN VISWAGANDHI

 TWO POEMS BY

KANNAN VISWAGANDHI

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)


1. PROMOTION

Snake and Ladder Game
Whenever I am to climb on the ladder
snake biting
once again
from Square Number One
Though fulfilling the ten
you ask for the eleven
ever a new one …
Haven’t you released the White Paper?
Though toiling for the whole week
‘What were you doing at the week end ?’
With just four
can you finish the work of ten
in ten days?
How to hope for reaching the shore
having all novices by your side?
The faces of neighbours
overtakes you to savour
the dinner
Hard work
Hardly yield fruits
If Politics is a must
Why not it has no place
In our Training schedule?
You spend like hell.
Every year your treacherous silence
turns me terribly sick
I know not the nasty trick
of being in the good book….
Let me be so
so – so……

பதவி உயர்வு
பரமபத விளையாட்டு
ஏணியில் கால்வைக்கும்
போதெல்லாம்
பாம்புகடித்து
மீண்டும் முதலிருந்து
பத்தும் முடித்தாலும்
பதினொன்றாய்
புதிதாய் ஒன்று
எப்போதும் கேட்கிறீர்கள்:
வெள்ளை அறிக்கை
வெளியிட வில்லையா?
வாரம் முழுவதும்
பணி செய்யினும்
வார இறுதியில்
என்ன செய்தாய்?
நால்வரை வைத்து
பத்து பேர் வேலையை
பத்து நாட்களில்
முடியுமா?
கத்துக்குட்டிகளை வைத்து
எப்படி கரைசேர
முடியும் எப்போதும்?
பக்கத்து முகங்களே
பந்தியில் முந்துகிறது
உண்மையான உழைப்பு
ஒன்றுக்கும் உதவாது
அரசியல் அவசியமெனில்
ஏனில்லை
நமது பயிற்சித்திட்டத்தில்?
வாரியிறைக்கிறீர்
வள்ளலெனப் பெயரெடுக்க
ஒவ்வொரு ஆண்டும்
தங்களின்
கள்ள மௌனம் தான்
கலவரப்படுத்துகிறது
பிழைக்கத் தெரியவில்லை
இருந்து விட்டுப் போகிறேன்
இப்படியே.

(2) MY PET
Grateful for being fed
It would die for our sake, it seems
Due to a crack in the rectangular container
It shifted
to a small vessel
for a few days
On another day
I picked it up writhing on the floor
And put it in the water
Right before my eyes
Through the fin
Its life departed
At once it soared high
a tiny bird
and as one
ripe in life
blessing me
“Long live thee”.

வளர்ப்புப் பிராணி
உணவுண்ட நன்றிக்கு
தன்னுயிர் தருமாம்
செவ்வக விரிசலில்
இடம் மாறியது
சிறுபாத்திரத்திற்கு
சிலநாள்
பிறிதொரு நாளில்
தரையில் தவித்ததை
தண்ணீரில் விட்டேன்
கண்முன்னே
செதில்வழியே
உயிர் பிரிந்தது
விருட்டென்று
சிறுபறவையாய்
வாழ்ந்து பழுத்த
வயசாளியாய்
வாழ்த்திச் சென்றது
‘நல்லா இருங்க'

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024