A POEM BY
VASANTHADHEEPAN
Just a day make way
for Life or Death.
That which flows through your veins
_ a sense of dignity
This one rode perfectly well
that one came unleashed
but both died in the accident.
House full of child’s toys
No photos of children
In the calling bell
child’s laughter would tinkle.
From the bank the Pungai tree has grown wading through the river.
The adolescents diving into the lake-water
The tree would bless the water sprinkling flowers all over
I drew the sky birds came to fly
I drew the river fish many leapt joyously
I drew man riot exploded
The Sun swings millions of wings
The cry of Light embrace
the universe.
With tender leaf a tiny plant burst open
the seed
and come into being.
Sky stitched with blue feathers
Clouds, clusters of cotton in white pristine
The orange sun comes rolling
The ‘Kadukkan’ worn by grandpa
‘Thandatti’ dangling in grandma’s ears
As I went on seeing them
in the photograph
my surprise swelled more and more.
The cup you drank from
broke apart
I search for the one I drank from.
The drink we both were to gulp
flows as river.
The street-light is blinking.
Shivering she slowly moves away.
A dog pursues her.
தினம் தினம் செத்துப் பிழைக்காதே
ஒரே நாளில் சா அல்லது வாழ்
உன் நரம்புகளில் பாய்வது ரோசம்.
சரியாக இவன் போனான்
அவன் எதிரில் தாறுமாறாக வந்தான்
விபத்தில் செத்தது என்னவோ இருவரும்.
பொம்மைகள் நிறைந்த வீடு
குழந்தைகள் புகைப்படங்கள் எதுவுமில்லை
அழைப்புமணியில் குழந்தை சிரிக்கும்.
கரையிலிருந்து ஆற்றுக்கு ஊடாக வளர்ந்திருக்கிறது புங்கமரம்
ஏறி நீருள் சொருக்கடிக்கும் விடலைபையன்கள்
பூக்கள் தூவி வெள்ளத்தை வாழ்த்தும் மரம்.
வானத்தை வரைந்தேன் பறவைகள் பறந்தன
நதியை வரைந்தேன் மீன்கள் துள்ளின
மனிதனை வரைந்தேன் கலவரம் மூண்டது.
கோடிச் சிறகுகள் அசைக்கிறான் சூரியன்
ஒளிக்கூவல்கள் பிரபஞ்சத்தை தழுவுகின்றன
தளிர் இலையோடு சிறு செடி விதை பிளந்து
எழுகிறது.
நீலச்சிறகுகளால் தைக்கப்பட்ட வானம்
வெண் பஞ்சுப் பொதிகளான மேகங்கள்
உருண்டு வருகிறது ஆரஞ்சு சூரியன்.
தாத்தா போட்டிருந்த கடுக்கன்
பாட்டி காதில் ஆடிய தண்டட்டி
புகைப்படத்தில் பார்க்க பார்க்க அதிசயம்.
நீ குடித்த கோப்பை உடைந்து போனது
நான் குடித்த கோப்பையை தேடுகிறேன்
நாம் குடிக்கவிருந்த பானம் ஆறாக ஓடுகிறது.
தெருவிளக்கு இமை கொட்டுகிறது
அவள் நடுங்கியபடி மெல்ல நகர்கிறாள்
நாயொன்று பின் தொடர்கிறது.
No comments:
Post a Comment