TWO POEMS BY
M.D.MUTHUKUMARASWAMY
Translated into English by Latha Ramakrishnan
(*With corrections by the Poet duly incorporated)
(1)
Straight ahead
the sanctum-sanctorum of God
At the backside
a space completely void
There on the left
dining hall for pilgrims
On the right
wave-lashing sea
A map for all
_ the temple mandap
For me too
He mutters to himself
Etched in the memory are nameless faces
shrunk in scorching heat
with scars like dried grass
_ What to make of it ?
In the cloth bag lying beside
some more attires ,
tiny containers of homeopathy medicine,
a paltry sum
Who have placed them here
so neatly
Weren’t they very much here
when he was fast asleep
Why aren’t they now?
With weak muscles
when his hands and legs tremble
on his palm
as henna smeared by someone unknown
twilight in tinge crimson
M.D.Muthukumaraswamy
நேராகச் சென்றால்
தெய்வத்தின் சந்நிதி
பின்னால் சென்றால்
அத்துவான வெளி
இடது புறம் சென்றால்
அன்னதானசத்திரம்
யாத்ரீகர்களுக்கான ஓய்வறைகள்
வலதுபுறம் சென்றால்
அலையடிக்கும் கடல்
எல்லோருக்குமான வரைபடம்தான்
கோவில்மண்டபம்
எனக்கும் என முணுமுணுத்துக்கொண்டார்
பெயர்களற்ற நினைவிலுள்ள முகங்கள்
அவற்றில் வெயிலுக்கு
காய்ந்து போன அருகம்புல்
தழும்புகள் - என்ன செய்ய?
அருகிலிருந்த துணிப்பையில்
மாற்றுத்துணிகளும் ஹோமியோபதி
மருந்து குப்பிகளும் சொற்ப பணமும்
யார் இவ்வளவு நேர்த்தியாக வைத்தார்கள்
அவர்கள் அவர்
அசந்து தூங்கும்போது இங்கேதானே
இருந்தார்கள் இப்போது ஏனில்லை
தளர்ந்த தசைகளினால் கை கால்
நடுங்குகையில் அவர் உள்ளங்கையில்
யாரோ இழுவிய மருதாணி சிவப்பு போல
அஸ்தமனத்தின் செவ்வொளி
..M.D.MUTHUKUMARASWAMY
(2)
On a summer noon
when clarity and precision came perfectly
like the resonance of Veena strung and tuned
by the flicking finger
felt like calculating the age of mother
if she were to be alive now
but when there is nothing as self
how would the wheel sans teeth
count?
Which navel would it touch
and wade through a long passage
arriving at this void of palm
crossing the faraway distance
When the finger-tip once again
flicks the string of Veena
the resonance born
is mother
I am here
Mother Son Veena
always
ageing split second
சுண்டி சரிபார்த்த
அம்மாவின்
வீணையின் சுருதி போல
தெளிவு கூடி வந்த
கோடை மதியத்தில்
அம்மா இப்போதிருந்திருந்தால்
என்ன வயதாகியிருக்கும்
எனக் கணக்கிடத் தோன்றியது ஆனால்
நான் என்று ஏதுமில்லை
எனும்போது அம்மாவின்
வயதை எப்படி எந்த பற்பிடிப்புமற்ற
சக்கரம் கணக்கிடும்?
எந்த உந்திச்சுழி தொட்டு
நெடு வழி தாண்டி
இந்த உள்ளங்கை வெறுமைக்கு
வந்து சேரும் தொலை தூரம்
மீண்டும் வீணையின் தந்தியை
விரல் நுனி
தீண்டும் நொடியில்
பிறக்கும் ரீங்காரம்
அம்மா இதோ நான்
அம்மாவும் பிள்ளையும் வீணையும்
எப்போதும்
அரை நொடி வயதில்
M.D.முத்துகுமாரஸ்வாமி
No comments:
Post a Comment