A POEM BY
ATHMAJIV
Not drawing wings
drew a huge tree
Wingless bird and myself
were merely looking around
bemused
It was indeed a gigantic tree
The racing pulse of the bird
unable to fly
echoed in my heart
She finished drawing a variety of fruits
in the same tree
The bird and myself
watched it
wonderstruck
Looking at me watching it all
spellbound
clicking her tongue and winking
she smiled.
Sketching a lovely nest
for the bird to rest
she offered it wings.
The bird she drew
flew
circling a lone tree
in which the fruits of the entire jungle
dangled.
•
ஒரு வனத்தின் பழங்கள்
பறவை ஒன்றை வரைந்தவள்
சிறகுகளை வரையாமல்
பெரிய மரமொன்றை வரைந்தாள்
சிறகுகளற்ற பறவையும் நானும்
வெறுமனே வேடிக்கைப் பார்த்தோம்
மிகப் பெரிய மரம்தான் அது
பறக்க இயலாத பறவையின் துடிப்பு
என் இதயத்தில் எதிரொலித்தது
பலவிதமான பழவகைகளை
வரைந்து முடித்தாள் அவள்
ஒரே மரத்தில்
அதிசயமாகப் பார்த்தோம்
நானும் பறவையும்
வியந்து பார்த்த என்னை
உச்” கொட்டி கண்களை சிமிட்டி
புன்னகைத்தாள்
பறவை தங்குவதற்கொரு
அழகான கூட்டை வரைந்து விட்டு
பறவைக்கு சிறகுகளைத் தந்தாள்
ஒரு வனத்தின் பழங்கள்
காய்த்து தொங்கிய
ஒற்றை மரத்தை சுற்றிப் பறந்தது
அவள் வரைந்த பறவை
ஆத்மாஜீவ்
No comments:
Post a Comment