INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, April 29, 2022

RAHEEMA FAIZAL

 A POEM BY

RAHEEMA FAIZAL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


EASTER SUNDAY APRIL 2019

Vacation time
We were staying in Nuwara Elia
brimming with foamy chill-smoke
mounts in thick clusters
Easter massacre
Resembling an English movie
exploded here there everywhere
as breaking news.
Words of curse and abuse aimed at us
proved more painful than
having to return home
hastily from happy journey.
While travelling
In our workplaces
Eyes glancing at us with intense wrath
burning well over 1000 °C
That day
Hands of love
abandoned us
Hope shattered
Our choice of food and dress
were worst hit
In the circles of our attires
wheels were seen
We were imprisoned
Kitchen knife seemed
deadly weapons
We were put behind bars
Media vomited news
as suited their whims and fancies
Nauseating stench all over
Hearts shell-shocked
Curses falling upon us in heaps
proving unbearable
salty lines of tears
sliced us to the core
We remained broken to the core
Everything was stage-managed
One and all knew
Those who remained dumb
Not being able to speak aloud
exposing the acts of treason
_ We called them our leaders
And the leaders occupied the seats of Power
Well-cushioned
with their patriotism gone with the wind
றஹீமா பைஸல்

உயிர்த்த ஞாயிறு ஏப்ரல் 2019
——————————————-
விடுமுறைக் காலம்
குளிர் புகை மலைகள் நுரைத்து நிறைந்த
நுவரெலியாவில் தங்கியிருந்தோம்
ஈஸ்டர் தாக்குதல்
ஆங்கிலத் திரைப்படத்தின் சாயலில்
ஆங்காங்கே செய்தியாகி வெடிக்கிறது
பயணத்தின் இடை நடுவில் வீடு திரும்பும்
வலியை விடக் கொடுமையாய் இருந்தது
எங்கள் தலைவிதியின் மீது விழுந்த பலிச்சொற்கள்
பயணங்களில்
பணியிடங்களில்
பார்க்கிற பார்வைகளில் வெறுப்பின் நெருப்பு
ஆயிரம் செல்சியசிலும் அதி உக்கிரமாய் கருகச்செய்கிறது
அன்றைய நாளில்
நம் மீதான
அன்பின் கரங்கள் விலக்கப்பட்டன
நம்பிக்கையின் சங்கிலிகள் சில்லு சில்லாய்ச் சிதறின
உடைகளின் தேர்விலும்
உணவு தேர்விலும்
அடிமேல் அடி விழுந்தது
ஆடையில் இருக்கும்
வட்டங்களில் சக்கரங்கள் தெரிந்தன
சிறையிடப்பட்டோம்
சமையலறை கத்திகள் எல்லாம்
ஆயுதங்களாய்த் தெரிந்தன
சிறையிடப்பட்டோம்
ஊடகங்கள் செய்திகளை
கண்டபடி வாந்தியெடுத்தன
நாறிக்கிடந்தது
அதிர்ச்சியில் உறைந்த இதயங்களையும்
தலைவிதியில் விழுந்த பலிச்சொற்களையும்
தாளமாட்டாமல்
கண்ணீரின் உப்புக் கோடுகள்
இதயத்தை உடைகின்றன
உடைந்திருந்தோம்
எல்லாம் நாடகம் என
எல்லோருக்கும் தெரியும்
சதி வலைகளைக் கிழித்துப் பேசமுடியாத படி
ஊமையாகிக் கிடந்தவர்கள் எல்லாம்
நம்மை ஆண்ட தலைவர்கள் என்றோம்
தலைவர்கள் தேசப்பற்றை அடகு வைத்து
கதிரைகளில் அமர்ந்தார்கள்.

-றஹீமா பைஸல்-

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024