TWO POEMS BY
MA.KALIDAS
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
For the music strung by thee
You alone are the accompaniment
You alone are the singer
You alone are the aficionado
You alone are the critic
You alone are the screen.
Just take a little break
The ticket for your next show
Is yet to be printed, you know.
நீ மீட்டும் இசைக்கு
நீயே கருவி
நீயே பாடகன்
நீயே ரசிகன்
நீயே விமர்சகன்
நீயே திரை.
சற்று ஓய்வெடு
உன் அடுத்த காட்சிக்கான
நுழைவுச்சீட்டு இன்னும் அச்சாகவில்லை.
(2)
Someone has broken the lock
allowing one and all to peep and see what is inside.
Everything is lying there wide-open
In the sudden downpour
drenching had taken place as much as being eaten off
by the white ants.
Fungus everywhere
Worms too.
The stench of that wasted away
getting scorched in the sun pervading.
The leftovers of food unwashed
have turned all too sticky
that it has to be rubbed real hard to be removed
Losing its self for pitch darkness and excess radiance
it starts to rot.
In the ‘Manjanathi’ flower bloomed in the cleft
the crow-poop remains frozen.
The tears here and there
roll over in the air.
As if implying that there remains something still
for pilfering
a soft sarcastic smile
is heard all too often.
பூட்டை யாரோ உடைத்துவிட்டார்கள்.
என்ன இருக்கிறது என
எட்டிப் பார்க்கும்படி
எல்லாமே திறந்து கிடக்கிறது.
திடீர் மழையில் கரையான் அரிக்குமளவு நனைதல் நிகழ்ந்திருக்கிறது.
பூசணம் பூத்திருக்கிறது
புழு வைத்திருக்கிறது.
வீணே வெயிலில்
கருகும் வாசனை வேறு.
தின்றதைக் கழுவாதது
சுரண்டி எடுக்கும்படி காய்ந்திருக்கிறது.
கும்மிருட்டுக்கும் அதீத ஒளிக்கும்
சுயமிழந்து பாழடையத் தொடங்குகிறது.
இடுக்கில் முளைத்திருக்கும் மஞ்சணத்தியில்
காக்கை எச்சம் உறைந்திருக்கிறது.
ஆங்காங்கே கிடக்கும் கிழிசல்கள்
காற்றுக்குப் புரண்டு படுக்கிறது.
திருடுவதற்கு
இன்னும் ஏதோ மிச்சம் இருக்கிறது
என உணர்த்தும்படி
சன்னமான நக்கல் சிரிப்பொலி
அடிக்கடி ஒலிக்கிறது.
மா.காளிதாஸ்
No comments:
Post a Comment