THREE POEMS BY
THEEPIKA THEEPA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Only now do I see
amidst the cracked heels of father
lying in the hospital cot
like a withered leaf
so very thinly oozed and dried _
the wounds caused along the Way
to the Cross
which he had always concealed.
Alas, why unlike mother
he never revealed
all these myriad drops of
love wholesome
brimming in the inflexible Father-bowl
is the child’s query of my teardrops
breaking and falling apart.
பிள்ளைக் கேள்வி
--------------------------
இப்போது தான் பார்க்கிறேன்.
காய்ந்த சருகு போல
மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கும்
அப்பாவின்
குதிக்கால் வெடிப்புக்களுக்கிடையே
மிக மெல்லிதாய்
கசிந்து காய்ந்து கிடக்கிறது
அவர்
ஒரு போதும்
சொல்லாமலேயே மறைத்துவிட்ட
சிலுவைப் பாதைகளின் காயங்கள்.
ஒர் இறுக்கமான
தந்தைக் கிண்ணத்துக்குள் நிரம்பியிருந்த
இத்தனை அன்பின் துளிகளையும்
அம்மாவைப் போல
அப்பா ஏன் காட்டிக் கொள்ளவேயில்லை?
ஒரு போதும் என்பது தான்
இப்போது உடைந்து விழுகிற
என் கண்ணீர்த் துளிகளின் பிள்ளைக் கேள்வி.
(2). GARBAGE MOUND
This is the place for dumping garbage.
You are free to dump all your rubbish here
No need to obtain prior permission of any sort.
No fee, absolutely free.
Then
You can prod and dig the wastes dumped thus
Collect them
Haul them and scatter all around.
Throw at each other and
make merry.
This is your garbage mound
Here you are blessed with
Prosperity aplenty.
Theepika Theepa
•
குப்பைமேடு
--------------------
இது
குப்பை கொட்டுமிடம்.
தாராளமாக உங்கள் குப்பைகளை
நீங்கள் கொட்டிக் கொள்ளலாம்.
எந்தவித
முன்னனுமதியும் பெறவேண்டியதில்லை.
இலவசம் தான்.
பிறகு ...
கொட்டிய குப்பைகளைக் கிளறலாம்.
பொறுக்கலாம்.
அள்ளித் தூற்றலாம்.
ஆளாளுக்கு மாறி மாறி
எறிந்து விளையாடலாம்.
இது உங்களது குப்பைமேடு.
சகல செளபாக்கியங்களும்
இங்கு உங்களுக்கு இருக்கிறது.
- தீபிகா-
You are free to dump all your rubbish here
No need to obtain prior permission of any sort.
No fee, absolutely free.
Then
You can prod and dig the wastes dumped thus
Collect them
Haul them and scatter all around.
Throw at each other and
make merry.
This is your garbage mound
Here you are blessed with
Prosperity aplenty.
Theepika Theepa
•
குப்பைமேடு
--------------------
இது
குப்பை கொட்டுமிடம்.
தாராளமாக உங்கள் குப்பைகளை
நீங்கள் கொட்டிக் கொள்ளலாம்.
எந்தவித
முன்னனுமதியும் பெறவேண்டியதில்லை.
இலவசம் தான்.
பிறகு ...
கொட்டிய குப்பைகளைக் கிளறலாம்.
பொறுக்கலாம்.
அள்ளித் தூற்றலாம்.
ஆளாளுக்கு மாறி மாறி
எறிந்து விளையாடலாம்.
இது உங்களது குப்பைமேடு.
சகல செளபாக்கியங்களும்
இங்கு உங்களுக்கு இருக்கிறது.
- தீபிகா-
in his early days
loved kisses always
The gloom of culture and tradition
never allowed him to give and take
candidly.
When the box was about to be closed
from nowhere
a butterfly appears
sits upon his forehead’s bare temple
and wings off _
for the sake of all of us.
Theepika Theepa
•
முத்தங்களுக்கு ஏங்கியவன்
-----------------------------------------------
எப்போதும்
முத்தங்களை அதிகம் நேசித்தான்.
சிறுவயதில்
தாய் முத்தங்களைப் பறி கொடுத்தவன்.
ஒளிவு மறைவின்றிக்
கொடுக்கவும், வாங்கவும்
அவனை அனுமதிக்கவேயில்லை
கலாச்சார இருள்.
பெட்டி மூடுகிற நேரத்தில்
எங்கிருந்தோ பறந்து வந்து
அவனது
வெறுமையான நெற்றிப் பொட்டில்
உட்கார்ந்து பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி.
எங்கள் எல்லோருக்காகவும்.
--- தீபிகா----
No comments:
Post a Comment