THREE POEMS BY
KAVIDHAIKAARAN ELANGO
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
CORRECT INCORRECT
The monkey with a fruit in hand knew not
of the worms that have originated inside and begun eating their source the fruit itself
Fruit is but a shape
Its taste reminding of its shape
Moreover
the seeds turning into worms and writhing
eats away the body.
The monkey that allows not in its consciousness
the blossoming of taste-buds
starts believing all the more
that the fruit in hand is indeed a fruit
just as it believes the monkey
to be a monkey
சரியற்றே ஒரு சரி..
*
கையில் பழமுள்ள குரங்கு அறியவில்லை
அதனுள் முளைத்து அதனையே தின்னத் தொடங்கியிருக்கும்
புழுக்கள் பற்றி
பழம் என்பது ஒரு வடிவம்
வடிவத்தின் நினைவாக அதன் சுவை
மட்டுமன்றி
புழுவாக மாறி நெளியும்
விதைகள்
உண்கின்றன உடலை
சுவை மொட்டு மலர்தலை
பிரக்ஞையில் அனுமதிக்காத குரங்கு
மேலும்
நம்பத் தொடங்குகிறது
கையிலிருக்கும் பழத்தை
பழமென
குரங்கை
குரங்கென்றே நம்புவதைப் போல
***
-இளங்கோ
of the worms that have originated inside and begun eating their source the fruit itself
Fruit is but a shape
Its taste reminding of its shape
Moreover
the seeds turning into worms and writhing
eats away the body.
The monkey that allows not in its consciousness
the blossoming of taste-buds
starts believing all the more
that the fruit in hand is indeed a fruit
just as it believes the monkey
to be a monkey
சரியற்றே ஒரு சரி..
*
கையில் பழமுள்ள குரங்கு அறியவில்லை
அதனுள் முளைத்து அதனையே தின்னத் தொடங்கியிருக்கும்
புழுக்கள் பற்றி
பழம் என்பது ஒரு வடிவம்
வடிவத்தின் நினைவாக அதன் சுவை
மட்டுமன்றி
புழுவாக மாறி நெளியும்
விதைகள்
உண்கின்றன உடலை
சுவை மொட்டு மலர்தலை
பிரக்ஞையில் அனுமதிக்காத குரங்கு
மேலும்
நம்பத் தொடங்குகிறது
கையிலிருக்கும் பழத்தை
பழமென
குரங்கை
குரங்கென்றே நம்புவதைப் போல
***
-இளங்கோ
He is the shadow of an insanity
The detested untimely time of the grand space of Time.
His Sun is supremely chill
His Moon
would burn as fire the whole night
Inside your walls
Inside your moral codes of conduct
In the keyholes of your doors
He never fits
You keep on banging at him at him
He never opens himself
From time immemorial
You have been voicing your complaint
If only you can lend your ears to his music
a little more patiently
If only you can
feel his aloneness
a little more boundlessly
If only you can get closer to his breath
a little more caringly
You can find out
that he is just a threshold
He has no doors
Why should one and all in unison
understand a poet
For he knows to wander as the shadow of
Your external world’s insanities
இரவெல்லாம் அனலாய் எரியும் நிலவு
---------------------------------------------------------
ஒரு கவிஞனை
ஏன் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்
அவன் ஒரு பைத்தியத்தின் நிழல்
காலப்பெருவெளியின்
விரும்பப்படாத அகாலம்
அவனுடைய சூரியன்
ரொம்பவும் குளிர்ச்சி மிகுந்தது
அவனுடைய நிலவு
இரவெல்லாம் அனலாய் எரியக்கூடியது
உங்கள் சுவர்களுக்குள்
உங்கள் ஒழுக்க விதிகளுக்குள்
உங்கள் கதவுகளின் சாவித்துவரங்களில்
அவன் என்றுமே பொருந்திப் போவதில்லை
நீங்கள் தொடர்ந்து
அவனைத் தட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்
அவன் தன்னைத் திறப்பதேயில்லை
காலங்காலமாக
உங்கள் புகாரை நீங்கள் உச்ச்சரிதுக்கொண்டே நிற்கிறீர்கள்
உங்களால்
இன்னும் கொஞ்சம் பொறுமையாக
அவனது இசையை கேட்க முடியுமென்றால்
இன்னும் கொஞ்சம் அளவற்று
அவனது தனிமையை உணர முடியுமென்றால்
இன்னும் கொஞ்சம் வாஞ்சையோடு
அவனது சுவாசத்தை நெருங்க உங்களால் முடியுமென்றால்
நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்
அவன் ஒரு வாசல் மட்டுமே
அவனிடம் கதவுகளேதுமில்லை
ஒரு கவிஞனை ஏன் எல்லோரும் ஒருமித்து
புரிந்துக்கொள்ளவேண்டும்
அவன்
உங்கள் புற உலகப் பைத்தியங்களின்
நிழலாக
உலவத் தெரிந்தவன்
-இளங்கோ
(3)
I have emailed to thee.
When we met you said that
the 13th Note
was your favourite.
Digits circled for identification
turning into God of Worship
is something unstoppable in all eons.
13வது குறிப்பு
------------------------
உனது அழகைப் பற்றிய துண்டுக் குறிப்புகளை
உனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்
நேரில் சந்தித்தபோது சொன்னாய்
பட்டியலில் இடம்பெற்றிருந்த
13வது குறிப்பு
மிகவும் பிடித்தமானதென்று
ஓர் அடையாளத்துக்காக சுழியிடப்படும் எண்கள்
வழிப்பாட்டுக்குரிய கடவுளாக மாறுவதை
எந்த யுகத்திலும் நிறுத்த முடிவதில்லை.
_ இளங்கோ
No comments:
Post a Comment