INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 24, 2021

MARIMUTHU KALIDAS

 A POEM BY

MARIMUTHU KALIDAS


Translated into English by Latha Ramakrish nan(*First Draft)

Upon the terrible sorrow that stretches on and on
spreads
the shadow of night.
In the heart desolate as the daytime deprived of the stars
Memory-bubbles make their exit gradually.
Woes and miseries that grip you hard
as the cruel claws of’Sarabam’, _
the mythical eight-legged bird _
and are devouring you
are but the leftovers of birth previous.
Eating away all words in secrecy
the trails of silence flourish.
In reminiscences that burn circling thee
despite knowing fully well that it is all a big zero
ponderings so deeply meditative
do find a place without fail.
Succor from your soothing words that
being trapped in the black hole and
remaining unseen
and the fingers’ fondly caressing the hair
might be reclaimed
in a few days
or in several Light-years.
Till that time
except burying the face between the window-bars
and going hand in hand with the void seen outside
no other choice for me
with eyes lost.

Marimuthu Kalidas

உடைபடாமல்
நீண்டுகொண்டிருக்கும்
பெருந்துனியின்
மேல் படர்கிறது.,
இரவின் நிழல்.
பஞ்சிதங்களைத் தொலைத்த பகல்பொழுதாய்
வெறிச்சோடிய மனதுக்குள் மெதுமெதுவாய் வெளியேறுகின்றன.,
ஞாபகக் குமிழ்கள்.
சரபத்தின் கொடுநகங்களாய்
அழுந்தப் பற்றி
விழுங்கிக் கொண்டிருக்கும்
வருத்தங்கள்.,
பூர்வத்தின் மிச்சம்.
உலர்ந்த உதடுகளின்
வார்த்தைகள்
யாவற்றையும்
யாருமறியா வண்ணம் தின்று கொழுக்கின்றன.,
மௌனத்தின் தடங்கள்.
சுழியமென அறிந்தும்
உனைச் சுற்றியே
எரிந்திடும் நினைவுக்குறிப்புகளில்
நீங்காமல் இடம்பெறுகின்றன.,
ஆழ்நிலை தவங்கள்.
கருந்துளைக்குள்
அடைபட்டு காணமுடியாமலே
போன உன்
ஆதுரச் சொற்களின் ஆசுவாசமும்,
அங்குலிகளின் சிகைகோதலும்
மீட்கப்படலாம்.,
ஒருசில நாளில்.,
அல்லது சில ஒளியாண்டுகளில்.
அதுவரைக்கும் .,
சன்னல் கம்பிகளுக்கிடையே
முகம்புதைத்து வெளியே தெரியும்
எல்லையற்ற வெறுமையோடு
கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.,
விழி தொலைத்த எனக்கு.

- இனியவன் காளிதாஸ்.

*பொருள்:
துனி- துன்பம்,வலி
பஞ்சிதம்-விண்மீன்
சரபம்- சிங்கத்தையே எதிர்க்கும் எண்காலுடைய பறவை
கருந்துளை- பேரண்டங்களுக்கிடையிலான இடைவெளி,உள் நுழைந்தால் ஒன்றுமில்லாமல் போகும் மாயம்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024