INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, April 22, 2021

RIYAS QURANA

 A POEM BY

RIYAS QURANA

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)

SOCIAL WORKER
Imagine yourself to be a very committed social worker.
After that
in case you stand shell-shocked in a deserted street
not knowing what to do
this might help you.
Through the leaves the air wanders everywhere
As a lame person
with the major portion of the wind
lying in the atmosphere
the birds that bathed jumping into it and returning
sit on the branches.
Failing to catch hold of the leaf that falls by mistake
the wind wails.
As the leaf fell off
a passerby collects it and drops it into the trash-bin.
The wind stirs his attires.
He who came hurriedly on some errand
goes away in haste.
At his back wind swirls now and then and sways.
For the leaves in the trash-bin to be eaten
I keep waiting for a little lamp
Leaves keep falling.
Hence, considering this as an opportunity
if you bring a little lamb from somewhere
You would be commencing the first act of
exemplary social service.
The one who went inside the poem
just before
in great haste
is also a social worker.

சமூக சேவகர்

நீங்கள் தீவிரமான
ஒரு சமூக சேவையாளராக
கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அதன் பிறகு,
ஆளரவமற்ற ஒரு தெருவில்
ஏதும் செய்வதறியாது
திகைத்துப்போய் நிற்பீர்களானால்
இது உதவக் கூடும்.
இலைகளின் நடுவே
ஒரு நொண்டியைப்போல
காற்று நடந்து திரிகிறது
காற்றின் பெரும்பகுதி
மரத்தைச் சுற்றி
அந்தரத்தில் கிடக்க
அதற்குள் குதித்து நீந்திவிட்டு
திரும்பி வந்து பறவைகள்
கிளைகளில் அமருகின்றன.
தவறிவிழும் ஒரு இலையை
பிடிக்க முடியாமல் காற்று இரைகிறது
நிலத்தில் வீழ்ந்ததும்,
பொறுக்கி குப்பைக் கூடையில்
இடுகிறார்
தெருவில் சென்றவர்.
காற்று அவரின் ஆடைகளை அசைக்கிறது.
ஏதோ ஒரு வேலை நிமித்தம்
அவசரமாக வந்த அவர்
விரைகிறார்.
அவரின் பின்னே காற்று
இடையிடையே சுழித்து அசைகிறது.
குப்பைக்கூடையிலுள்ள இலைகளைத்
தின்ன ஒரு ஆட்டுக் குட்டியை
வெகு நேரமாக காத்திருக்கிறேன்.
இலைகள் விழுந்தபடி உள்ளன.
எனவே, இதை வாய்ப்பாக கருதி
ஒரு ஆட்டுக் குட்டியை
எங்கிருந்தாவது கூட்டி வந்தால்
மகத்தான சமூகசேவையின்
முதலாவது பணியை தொடங்கிவிடுவீர்கள்.
கவிதையினுள் சற்று முன்
அவசரமாக விரைந்து சென்றவரும்
ஒரு சமூக சேவகர்தான்.



No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE