INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 31, 2025

DHAMAYANTHI

 A POEM BY

DHAMAYANTHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
With shadows laying siege
She travels in the last compartment of the train
with aloneness...
The train stands quite a distance away
from the railway stations.
Nowhere has she seen the city.
The train’s whistle fills her with memories
In the rail-tracks there still remain
the containers thrown away
and the dried up urine.
The Moon that reflects the night
oozes through the window
In the fan that runs not
the blockade of rust
She finds the ticket lost by someone
wondering whether he or she would
have got down in the right place
The shadows of the Dark of Light
spreads on her now.
Swallowing the Light
She goes past the Dark..
Dhamayanthi

முற்றுகையிடும் நிழல்களோடு
பயணிக்கிறாள் ரயிலின் கடைசி பெட்டியில்
தனிமையோடு...
ரயில்நிலையங்களை விடவும்
தூரமாய் ரயில் நிற்கிறது.
நகரை எங்கும் கண்டதில்லை அவள்.
ரயிலின் விசில் நினைவுகளை நிரப்புகிறது
தண்டவாளங்களில் மீதமிருக்கு
தூர எறிந்த குவளைகளும் காய்ந்த மூத்திரமும்
இரவை பிரதிபலிக்கும் நிலா
ஜன்னல் வழி வழிகிறது
ஓடாத மின்விசிறியில் துரு அடைந்திருக்கிறது.
யாரோ தொலைத்த பயணச்சீட்டை கண்டெடுக்கிறாள்
சரியான ஊரில் அவனோ அவளோ
இறங்கியிருக்கக் கூடுமோவென்ற எண்ணத்தோடு.
வெளிச்ச இருட்டின் நிழல்கள்
அவள் மேல் படர்கின்றன இப்போது
வெளிச்சத்தை விழுங்கினபடி
இருட்டை கடக்கிறாள் அவள்....

தமயந்தி

VATHILAIPRABHA

 A POEM BY

VATHILAIPRABHA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FATHER’S FINGER

In my palm remains secure
still
With its warmth intact -
Your Finger!
It is that warmth
that keeps me still
when I roll on the other side
and when I am tossed upside down
When both my sons
come along holding my finger
on both sides
calling me “Daddy”
I go on holding your finger!
Whenever I fall
I hold your finger and rise!
Whenever I rise so
I hold your finger and shed tears!
The finger that you held fast
I keep holding to the last
Never leaving it at all!
You gave me the tool of a fisherman!
You told me the way to escape from the black magic of a trickster!
Having told me great grand tales
You gave me your fingers and departed!
I never ever let go
Your fingers, Father!

VathilaiPraba

அப்பாவின் விரல்
----------------------------------
என் உள்ளங்கையில்
இப்போதும் பத்திரமாய் இருக்கிறது
சற்றும் வெதுவெதுப்புக் குறையாமல்
உங்கள் விரல்!
அந்தக் கதகதப்புதான்
புரண்டு படுக்கும்போதும்,
புரட்டிப் போடும்போதும்
இருக்க வைக்கிறது!
"அப்பா" என
என் இருபக்கமும்
என் பிள்ளைகள்
என் விரல் பிடித்து வரும்போது
நான் உங்கள் விரல் பிடித்து வருகிறேன்!
விழும்போதெல்லாம்
உங்கள் விரல் பிடித்து எழுகிறேன்!
அப்படி எழும்போதெல்லாம்
உங்கள் விரல் பிடித்து அழுகிறேன்!
நீங்கள் அழுந்திப் பிடித்த விரலை
ஒருபோதும் விட்டுவிடவில்லை.
நானும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன்..
ஒரு மீனின் பசியாற்றும் பொறியைத்
தந்தீர்கள்!
ஒரு தந்திரக்காரனின் சூன்யத்திலிருந்து
தப்பிக்க வழி சொன்னீர்கள்!
பெரும் கதைகளை சொல்லிச் சென்றபோதும்,
உங்கள் விரல்களை தந்து சென்றீர்கள்!
நான் ஒருபொழுதும் கை விடுவதில்லை
உங்கள் விரல்களை!

V.N.GIRITHARAN

 TWO POEMS BY

V.N.GIRITHARAN

1. THE DREAM OF A LIBRARY AND THE REMINISCENCES THEREIN!
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
This magnificent Blue-hued planet
Wherever I see
Is on flame by rifts and riots
You are dashing against each other in the outer space
I see the river of blood flowing
Children, women, elderly ones
You care for none.
I can very well realize it
Your acts frenzied devoid of reason
Makes me feel ashamed of thee.
The way you dance deliriously
as if you are the head of this universe
I can’t help laughing seeing it all
The grand expanse of this great space
lies well beyond thee
seeing you buried in the ever expanding
intense silence
watching you all alone
I can’t help pitying you.
You who ance like a devil outise
How come you are sitting here
So quietly side by side
Surprising indeed.
O Ye dictators! O ye Revolutionists
O Ye the elite people of the upper rung
O ye those of the upper clan of ‘Varnaa’
O ye the courageous! O Ye the cowards!
Sand gender-difference
O ye – my fellowbeings
The multi-faceted ones
You all are seated here
Side by side – so close, so near
This understanding, this camaraderie
This supreme culture
If only you adhere to these
Even outside
How nice it would be
I keep thinking
I keep dreaming
How would be this planet called earth
If my dream is realized
Into this everlasting dream I lie immersed
ஒரு நூலகத்தின் கனவும், எண்ணத்தோய்தலும்! -
- வ.ந.கிரிதரன் -
11 ஏப்ரல் 2025
இந்த அற்புதமான நீலவண்ணக் கோள்
எந்தத்திக்கினை நோக்கினும்
மோதல்களினால் பற்றி எரிகின்றதைப் பார்க்கின்றேன்.
நீங்கள் வெளியில் ஒருவருக்கொருவர்
முட்டி மோதிக்கொண்டிருக்கின்றீர்கள்.
இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுகிறதைப்
பார்க்கின்றேன்.
குழந்தைகள், பெண்கள், ,முதியவர் எவருமே
உங்களுக்கு ஒரு பொருட்டல்ல
என்பதையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது
வெளியில் நீங்கள் போடும் வெறியாட்டம்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன்.
நீங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் தலைவர் என்பதுபோல்
உங்கள் கூத்திருக்கின்றதைப் பார்த்து நகைக்கின்றேன்.
உங்களுக்கு வெளியில் விரிந்து கிடக்கின்றது
பெரு வெளி.
விரி பெரு மெளனத்தில் புதைந்து கிடக்கும்
உங்களைப் பார்க்கையில்
உங்கள் தனிமையைக் கவனிக்கையில்
எனக்கு உங்கள் மேல் பரிதாபம்தான் வருகின்றது.
வெளியில் பேயாட்டம் ஆடும் நீங்கள்
எவ்விதம் இங்கே மெளனமாக,
எவ்வித மோதல்களுமற்று
அருகருகே அமர்ந்திருக்கின்றீர்கள்?
ஆச்சரியம்தான்.
சர்வாதிகாரிகளே! புரட்சிவாதிகளே!
வர்க்கத்தின் மேற்தட்டு மாந்தரே!
வர்ணத்தின் உயர் குடியினரே!
வீரரே! கோழைகளே!
பால் வேறுபாடற்று,
பல் ஆளுமை மிக்க மாந்தரே
நீங்கள் அனைவரும் அருகருகே
அமர்ந்திருக்கின்றீர்கள்
இங்கே.
உங்களுக்கிடையில் இருக்கும் இந்தப்புரிந்துணர்வு,
இந்த நட்பு,
இந்தப் பண்பு
இவற்றை நீங்கள் வெளியிலும் கைக்கொண்டால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என்றுநான் சிந்திக்கின்றேண்.
என்று நான் கனவுகள் காண்கின்றேன்.
என் கனவு நிறைவேறினால்
எப்படியிருக்கும் இப்பூவுலகு என்ற
எண்ணத்தில் தோய்ந்துகிடக்கின்றேன்.

(2)
MY GRANDMA LIVING ALL ALONE!
You are my Grandma’s Home
It was from this house that my Grandma
was preparing Vadai
Why is she making Vadai from there –
I asked Mother.
Mother responded saying
“She used to make Vadai from here only
As crows more and more began troubling her all the more
She is now making Vadai from there.
Now she is not troubled by the crows – Yes, my Dear!
I could realize the fairness of her argument.
It was valid; logical alright.
“Brainy Grandma!” said I
“Like You” said Mother.
I felt happy to hear that.
“O, Mother Dear” _ I fondly said.
My Mother turned the happiest.
At those instants I would invariably think of
Grandma’s Aloneness.
‘I would go there and give her company
listening to her tales I would go to sleep’ -
So I would think at those instants.
Grandma continues to prepare Vadai
even now
being all alone
And I , being here still
keep thinking of her every now and then.
‘The house where Grandma lives all by herself -
I would surely go there one day
and be of help to her’ -
So I keep thinking
even now.
தனித்து வாழும் என் பாட்டி! -
வ.ந.கிரிதரன் –

பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத் துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.
இப்பொழுதும் பாட்டி அங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்.
தனிமையில் வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்.
நானும் இன்னும் இங்கிருந்தவாறு
அவளைப்பற்றி அவ்வப்போது சிந்தித்துக்
கொண்டுதானிருக்கின்றேன்.
பாட்டி தனித்து வசிக்கும் இல்லத்திற்கு
ஒரு நாள் நான் நிச்சயம் செல்வேன்.
அவளுக்கு
ஒத்தாசையாக இருப்பேன்
என்று
இப்போதும் நான்
எண்ணிக்கொண்டுதான்
இருக்கின்றேன்.

MOHAMED BATCHA

 A POEM BY

MOHAMED BATCHA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Please don’t write this Quiet as Peace
The air is still blowing upon the simmering cinders
For retrieving the lost sky
the birds would always fly
The musical strains of flute
heard far away
would go flying slowly
and with the wind rumbling
set aflame the bamboo forest
some day and search for light.
That End never ends
none comprehends.
Need to plough real deep.
Till that time
He who keeps watering even the weed
is Peasant Perfect indeed.
Mohamed Batcha

இந்த அமைதியைச்
சமாதானம் என்று எழுதிவிடாதீர்கள்.
குமைந்துகொண்டிருக்கும்
கங்குகளில் இன்னும்
காற்று ஊதிக்கொண்டுதான் இருக்கிறது.
தொலைத்த வானத்தை
மீட்டுவிட,
பறவைகள் எப்போதும்
பறந்துகொண்டுதான் இருக்கும்.
எங்கேயோ கேட்கும்
புல்லாங்குழலின் இசை மெல்லிதாகப் பறந்து,
காற்றுக் குமைய
மூங்கில் வனத்தை எரித்து என்றாவது
வெளிச்சம் தேடலாம்.
முடிவு என்பது
என்றுமே முடிவுக்கு வராதது என்பது,
யாருக்கும் விளங்குவதில்லை.
ஆழமாக உழ வேண்டியிருக்கிறது
அதுவரை களைகளுக்கும்
நீர் பாய்ச்சிக்கொண்டிருப்பவன் சரியான உழவன்.
.
முகமது பாட்சா

M.M.BYSEL

 A POEM BY

M.M.BYSEL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
He alone knows
What Hunger is
He keeps waiting too long
for a slice of bread
Nations that shower
bombs numerous
care not to fill his stomach.
Losing his Mother
Losing his Father
Losing his Land
He stands there
Staring at the sky
Hoping for a slice of bread
to come floating as feather

பட்டினிப் பற்றி
அவனுக்குதான்
தெரியும்
ஒரு ரொட்டித்
துண்டுக்காக நெடுநேரம் காத்திருப்பவன்
குண்டுகளை
வாரி இறைக்கும்
நாடுகள்
அவனுடைய
இரைப்பையை
நிரப்புவதில்லை
தாயை இழந்து
தந்தையை இழந்து
நாடிழந்து நிற்கும்
அவன்
வானத்தையேப்
பார்த்துக்
கொண்டிருக்கிறான்
சிறகாக
அசைந்து
ஒரு ரொட்டி வருமென்று
BYSAL


INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS