INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 31, 2025

VATHILAIPRABHA

 A POEM BY

VATHILAIPRABHA

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

FATHER’S FINGER

In my palm remains secure
still
With its warmth intact -
Your Finger!
It is that warmth
that keeps me still
when I roll on the other side
and when I am tossed upside down
When both my sons
come along holding my finger
on both sides
calling me “Daddy”
I go on holding your finger!
Whenever I fall
I hold your finger and rise!
Whenever I rise so
I hold your finger and shed tears!
The finger that you held fast
I keep holding to the last
Never leaving it at all!
You gave me the tool of a fisherman!
You told me the way to escape from the black magic of a trickster!
Having told me great grand tales
You gave me your fingers and departed!
I never ever let go
Your fingers, Father!

VathilaiPraba

அப்பாவின் விரல்
----------------------------------
என் உள்ளங்கையில்
இப்போதும் பத்திரமாய் இருக்கிறது
சற்றும் வெதுவெதுப்புக் குறையாமல்
உங்கள் விரல்!
அந்தக் கதகதப்புதான்
புரண்டு படுக்கும்போதும்,
புரட்டிப் போடும்போதும்
இருக்க வைக்கிறது!
"அப்பா" என
என் இருபக்கமும்
என் பிள்ளைகள்
என் விரல் பிடித்து வரும்போது
நான் உங்கள் விரல் பிடித்து வருகிறேன்!
விழும்போதெல்லாம்
உங்கள் விரல் பிடித்து எழுகிறேன்!
அப்படி எழும்போதெல்லாம்
உங்கள் விரல் பிடித்து அழுகிறேன்!
நீங்கள் அழுந்திப் பிடித்த விரலை
ஒருபோதும் விட்டுவிடவில்லை.
நானும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன்..
ஒரு மீனின் பசியாற்றும் பொறியைத்
தந்தீர்கள்!
ஒரு தந்திரக்காரனின் சூன்யத்திலிருந்து
தப்பிக்க வழி சொன்னீர்கள்!
பெரும் கதைகளை சொல்லிச் சென்றபோதும்,
உங்கள் விரல்களை தந்து சென்றீர்கள்!
நான் ஒருபொழுதும் கை விடுவதில்லை
உங்கள் விரல்களை!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS