INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, December 24, 2022

KAYAL. S.

 A POEM BY

KAYAL. S.

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


BIRD'S-EYE VIEW

Biting cold
All alone I am standing atop the mountain
and looking around.
The houses appear as tiny little boxes.
In the manufacture of new dwellings
carpenters running hastily and dashing against each other
are not seen
I waved from here
But no response.
Maybe I too am not visible to them.
I look above
Inadvertently I have hit a tiny cloud heading towards somewhere.
Frightened it screamed.
Now invariably
I began looking within
A sobbing little girl
calls me “Please get inside me once again”
Spreading wide my hands
I go flying
and settle upon the box where my mother sleeps.
So pleasantly warm it is.

பறவைப் பார்வை
கடுங் குளிர்.
தனியளாக
மலை உச்சியில் நின்று
சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வீடுகள் அனைத்தும் சின்னஞ்சிறு
பெட்டிகளாகத் தெரிகின்றன.
புதிய பெட்டிகளின் தயாரிப்பில்
வேகவேகமாய் ஓடி ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ளும்
தச்சர்கள் யாரும் தெரியவில்லை.
இங்கிருந்து கையசைத்தேன்.
எந்த பதிலும் இல்லை.
நானும் அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.
அண்ணாந்து பார்க்கிறேன்.
எங்கோ போய்க் கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு குட்டி மேகத்தைத் தெரியாமல் முட்டிவிட்டேன்.
பயந்து அலறிவிட்டது.
இப்போது வேறுவழியின்றி
நான் எனக்குள் பார்க்கத் தொடங்கினேன்.
தேம்பும் குரலில் ஒரு சிறுமி
மீண்டும் எனக்குள் வந்துவிடேன் என்கிறாள்.
நான் கைகளை அகல விரித்துப்
பறந்துபோய்
தோட்டத்தில்
என் அம்மா உறங்கும்
பெட்டிக்கு மேல் படுத்துக் கொண்டேன்.
அவ்வளவு கதகதப்பாக இருக்கிறது.

ANBIL PIRIYAN

 A POEM BY

ANBIL PIRIYAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The wrong committed long ago
wantonly or inadvertently
Hiding in the shadow
Minute after minute proving stinging whiplash
Anguished not knowing where to go
At a loss to know how to escape
With eyes brimming with tears
Going here there everywhere
Kneeling down in front of any and everyone
The mind getting soaked in the juice of ‘Oomathangkaai
The sin committed leaving the mind
These legs and the soul
breaking apart
Having no place to lie down for a while
Nor lap to provide solace
Staring at the photograph taken with the dead mother
with a scorching smile
proceed
the minutes of the final lap of run.

தெரிந்தோ தெரியாமலோ
எப்போதோ இழைத்த குற்றம்
நிழலுக்குள் பதுங்கி
நிமிடத்திற்கு நிமிடம்
சுளீர் கசையடிகளாகி
எங்கே போவதென அலைக்கழிந்து
எப்படி தப்பிப்பதென தெரியாது
நீர் ததும்பும் கண்களுடன்
எங்கேங்கோ யார் யாரிடமோ மண்டியிட
ஊமத்தங்காய் சாறில் சித்தம் தோய்ந்து
எக்குற்றமென மறந்தே போக
இக்கால்களும், ஆன்மாவும் முறிவதாகி
தலைசாய சிறு இடமின்றி
தாங்கிக்கொள்ள ஒரு மடியுமின்றி
இறந்த அம்மாவோடு எடுத்துக்கொண்ட
சிறுவயது புகைப்படத்தை
கன்றிய புன்னகையுடன் பார்த்தப்படியே
தொடர்கின்றன
கடைசி ஓட்டத்தின் நிமிடங்கள்.

அன்பில்பிரியன் அன்பில்பிரியன்

NESAMIGU RAJAKUMARAN

 A POEM BY

NESAMIGU RAJAKUMARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Wonder what to call a Tea master in Tamil
Let’s have it as
தேனீர் கலைஞன்
He was a North Indian
தேனீர் கலைஞன்
'Give me a cup of
வலிய தேனீர்'
I asked
He looked at my face perplexed
A Strong tea, said I
He smiled.
Sipping Tea
I asked him gesturing
‘From which place?’
‘Bihar’ said he.
The Bihar Tea that I drink in Thuraipakkam is truly அருமை, said I.
In toddlers’ Tamil He echoed அருமை
with an Indian smile!
நேசமிகு ராஜகுமாரன்
டீ மாஸ்டருக்கு
என்ன தமிழ்ப்பெயர்
சூட்டுவதென்று
தெரியவில்லை.
தேநீர்க் கலைஞர் என்று
வைத்துக் கொள்வோம்.
அவர் ஒரு
வட இந்திய
தேநீர்க் கலைஞர்.
ஒரு வலிய தேநீர் என்றேன்.
அவர் என் முகத்தைப் பார்த்தார்.
ஸ்ட்ராங் டீ என்றேன். புன்னகைத்தார்.
தேநீரை அருந்தியபடி
எந்த ஊர் என்றேன் சைகையில்.
பீகார் என்றார்.
துரைப்பாக்கத்தில் அருந்தும்
பீகார் தேநீர் அருமை என்றேன்.
குழந்தைத் தமிழில்
அருமை என்றார்
இந்தியப் புன்னகையுடன்!

YAZHINI MUNUSAMI

 A POEM BY

YAZHINI MUNUSAMI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Since the time herds of sheep
have come into being
Shepherds too have surfaced.
To the primordial herds
shouted the primordial shepherd:
I am your shepherd.
Come to me.
The herds ran to him.
After grazing the herds
the shepherd ran away.
Another shepherd came
claiming ‘I am your shepherd
The herds believed him
But he too left the scene.
The arrival of the shepherds
and their sham
do continue.
Yet herds remain in slumber
Those that defy the shepherd
are being dragged away.
Here a new shepherd calls out
and the herds run to him
in obedience absolute.

மந்தைகள் தோன்றிய நாள் முதலாய்
மேய்ப்பர்களும் தோன்றினர்
ஆதி மந்தைகளை நோக்கி
ஆதி மேய்ப்பன் கூவினான்:
நானே உங்கள் மேய்ப்பன்
என்னிடம் வாருங்கள்
மந்தைகள் ஓடின
மந்தைகளை மேய்ந்த பின்
மேய்ப்பன் ஓடிப்போனான்
பிறிதொரு மேய்ப்பன் வந்தான்
நானே உங்கள் மேய்ப்பன் என்றபடி
நம்பின மந்தைகள்
பிறகு அவனும் ஓடிப்போனான்
மேய்ப்பர்களின் வருகையும்
அவர்களின் ஏமாற்றும்
தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.
என்றாலும் மந்தைகள் விழிப்பதாயில்லை
மேய்ப்பனை எதிர்க்கும் ஆடுகள்
இழுத்துச்செல்லப்படுகின்றன
இதோ புதிதாய் ஒரு மேய்ப்பன்
அறைகூவல் விடுக்கிறான்
ஓடுகின்றன மந்தைகள்.

யாழினி முனுசாமி

SEENU RAMASAMI

TWO POEMS BY
SEENU RAMASAMY
Translated into English by Latha Ramakrishnan(*first Draft)

1.OPEN THE DOOR
Won’t there be a tiny tender ‘ Kaththiri’ flower
blossoming just for thee?

Won’t there be A drop of water
springing in the land’s eye?

Won’t there be a young man
coming to play your favourite song?

Won’t there be a pawn aiding and
accompanying you
in this game of chess called Life?

Won’t there be at least a teaspoon
coming your way
as a gift in lottery shuffle?

Won’t there be a time
when Time would grind Henna
for turning your palms crimson?

So what if there is no pathway for thee
If you keep walking
Won’t your feet create that passage
meant for thee?

My little child,
Not allowing the food to enter inside
your father and mother
and also that calf dear
of yours
this rope would tighten choking them
for ever

Release for thee
Rigorous imprisonment for them.

Untie the rope from the neck
and slowly alighting
sit in the chair.

For sure, this time
the ceiling fan above your head
would pour the very breeze

For the sake of those tears of others
That you would be wiping
Allow your hands to live on, my child.

Come on,
why don’t you open the window and see anon

Well, the wind that searches for thee
seeking thy love
would fill and swell in thee.


ஜன்னல் திற
.........................
உனக்குகென்று பிஞ்சு கத்திரிப்பூ கூட
பூக்காமலா போகும்?
உனக்கென்று
நிலத்தின் கண்ணில் ஒரு சொட்டு நீர் ஊறாமலா போகும்?
உனக்குகென்று
ஒரு யுவன் உனக்கு பிடித்த பாடலை இசைக்க வரமாட்டானா?
உனக்குகென்று இச்சதுரங்க வாழ்வில்
ஒரு சிப்பாய் துணைக்கு வராமலா போவான்?
உனக்கென்று குலுக்கல் சீட்டில் தேக்கரண்டியாவது பரிசாக விழாமலா போகும்?
உனக்கென்று உள்ளங்கை சிவக்க மருதாணியை காலம் அரைக்காமலா விட்டு விடும்?
உனக்காக பாதை இல்லாவிட்டால் என்ன மகளே
நீ நடந்தால்
உன் பாதங்கள்
ஒரு ஒற்றையடியை உருவாக்காதா?
உன் தகப்பன்
தாய்க்கு
உன்னை நேசிக்கும்
செவலை கன்னுக்
குட்டிக்கும் உணவு இறங்காதபடி
இந்த கயிறு இறுக்கி காலமெல்லாம் மூச்சு திணற வைக்கும் பாப்பா,
உனக்கு விடுதலை
அவர்களுக்கு சிறை
கயிற்றை கழுத்தில் இருந்து கழட்டி
மெதுவாக இறங்கி
நாற்காலியில்
அமர்
இம்முறை தென்றலை பொழியப்
போகிறது
உன் தலைக்கு மேல இருக்கும் மின் விசிறி..
நீ துடைக்க இருக்கும் பிறர் கண்ணீருக்கு
உன் கைகளை வாழவிடு பாப்பா
ஜன்னலை திறந்துதான் பாரேன்
உன் அன்புக்காக
உன்னை தேடும் காற்று உன்னில்
நிறையும்..


2. MARY HAD A LITTLE LAMB…..


For the little lamb wandering all alone


suffice to know the way to reach the mountain-path
That would run joyously
and accompanied by the trails of its clan
and the memory of the chorus
that it stirred
it would reach home.
In this mountain region
there is no lion nor cheetah nor red-wolf
that come in a crowd and pounce upon.
Even the mountain-hunter touches not
arrows
during winter
Just as the little girl
pursuing the green leaf
taking it to be a butterfly
the lamb had strayed away from the
path of the shepherd.
While leading the sheep into the pen
the shepherd might come to know
that a lamb had got lost in the jungle
due to its ignorance
and courage born of its adventurous disposition.
To that lighted house
where the hunting dogs during winter season
would keep wandering day and night
with the tail of gratitude severed
calling out for help the lamb proceeds.
The shepherd begins to count the sheep
getting inside the pen.
In order to help Mary kneeling down
and praying
Child Christ
born in full knowledge of the painful death
with star shining
and guiding
would put out the light
from the dogs’ eyes
and darken the passage for the lamb also
and so would turn the ordeal of its wandering
stand astounded
The shepherd’s voice is heard faraway
The dense dark jungle
echoes it.
The mother who entrusting the forest-path
of her daughter
yet to return from school
in the hands of the Divine Infant
kneeling down
knows not
That there is for all to hear
flowing from the heart of the forest
a soul-stirring prayer.

மேரியின் ஆட்டுக்குட்டி
..................................
தனித்தலையும் செம்மறிக் குட்டிக்கு அதன்
மலைப்பாதைக்கு இட்டு செல்லும் வழி தெரிந்தால்
போதுமானது.
அது குதூகலத்துடன் விரைந்து தன் இனத்தின் காலடிச்
சுவடுகளின் துணையோடும் அது தந்த சேர்ந்திசையின் நினைவோடும்
வீடடையும்.
இம்
மலைப்பிரதேசத்தில்
சிங்கமோ சிறுத்தையோ கூட்டமாக வந்து பாயும் செந்நாயோ இல்லை.
மலைவேடன் கூட
பனிக்காலத்தில்
அம்புகளை தொடுவதில்லை.
பறக்கும்
பச்சை இலை
பட்டாம்பூச்சி என்றெண்ணிப் பின் தொடர்ந்த
சிறுமியை போல மேய்ப்பனின்
பாதையிலிருந்து
விலகி விட்டது செம்மறிக்குட்டி.
ஆட்டை கிடையில் அடைக்கும் போது
மேய்ப்பனுக்கு
தெரியக்கூடும்
ஒரு குட்டி
காட்டில்
தன் அறியாமையாலும்
சாகச குணத்தின்
துணிச்சலிலும்
தொலைந்த கதை.
வேட்டை நாய்கள் பனிக்காலத்தில் கண் அயராது நன்றியின்
வால் வெட்டப்பட்டு
அலைந்தபடி இருக்கும்
விளக்கெறியும் அவ்வீட்டுக்கு
உதவிக்கு குரலெழுப்பிச் சென்று கொண்டிருக்கிறது
செம்மறிக்குட்டி.
மேய்ப்பன் கிடையில் அடைபடும் குட்டிகளை எண்ணத்
தொடங்குகிறான்.
மண்டியிட்டு ஜெபித்துக்
கொண்டிருந்த மேரிக்கு உதவ
நாய்களின் கண்களை குருடாக்கி செம்மறிக்கும்
பாதையை இருட்டாக்கி முன்னேறிச்
செல்லும்
அதன் வாதையின் திசையை திகைக்கச்
செய்வார் துயர்மிகு சாவை அறிந்தே நட்சத்திரம் ஒளிர்ந்து வழிகாட்டி
பிறந்த
சிசுபாலன்.
மேய்ப்பன் குரல்
தூரத்தில் கேட்கிறது.
இருள் நிறைந்த
காடு அதை எதிரொலிக்கிறது.
பள்ளியிலிருந்து இன்னும் வீடு வராத
மகளின்
காட்டு வழிப்பாதையை
சிசுவிடம் ஒப்புவித்து
மண்டியிட்ட
மேரிக்கு தெரியாது
காட்டில் எல்லோருக்குமாகிவிடும் ஒரு கசிந்துருகும்
ஜெபம்.
சீனு ராமசாமி.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS