INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

MALINI MALA

 A POEM BY

MALINI MALA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The rain commencing from the evening itself
so pleasantly cool
even at this time when
taking the night in its hands
and bathing it thoroughly
fails not to tap at my window
and invite me to go dance with it.
With all the interest in joining hands with it
and playing to my heart’s content
dried up and gone,
these days
I can’t dance in rain
with the leftovers in me being
the burning summer
and the hard rocks of remembrance.
Rubbing the rocks against each other
we can heat the rain.
In that the Rain might get roasted
and destroyed
Or
casting aside its dance-par- excellence
It might seethe and explode
No need for those two at this night.
I can do one more thing
If wanted
upon that which flood along the road
as swelling river
I can float boats tearing off the empty pages
of the Book of Life lying at my feet.
And till the heart gets thoroughly soaked
in dreams of climbing inside
and voyaging
reaching the shore on the other side
and living there least once
with Rain,
revelling in its company
and so reborn _
With such dreams,
mostly
ere this night breaks into dawn
writing a poem that climbs not ashore
in paper boats
I might gift it to Rain.

Malini Mala

மாலையிலேயே
சிலுசிலுக்கத் தொடங்கிய மழை
இரவினைச் சுவீகரித்து
கனதியாகக் குளிப்பாட்டும்
இந்நேரத்திலும் மறக்காமல்
வழமை போலென்
சாளரத்தில் தட்டி
ஆடவாவென
அழைக்கத் தவறவில்லை.
.
இப்போதெல்லாம்
அதனுடன்
கலந்தாடும் ஆர்வங்கள்
வற்றிப்போன என்னிடம்
எஞ்சிக்கிடக்கும்
கடுங்கோடை
ஞாபகபாறைகளைச் சுமந்து கொண்டு
மழையாட முடியாது.. ,
பாறையை உரசி உரசி
மழையை வெப்பமூட்டலாம்
அதில்
மழை வெந்து போகவும் கூடும்
அல்லது,
தன் ஒயிலாட்டத்தைப் புறக்கணித்து
குமுறி வெடிக்கலாம்.
இரண்டுமே
இந்த இரவில் வேண்டியதில்லை.
வேண்டுமானால் நான்
இன்னொன்றும் செய்யலாம்.
வீதிமேவி ஆறெனப்பாயும்
அதன் மீது - என்
காலடியிற் கிடக்கும்
வாழ்க்கைப்புத்தகத்தின்
வெற்றுப் பக்கங்களைக் கிழித்து
கப்பல் செய்து விடலாம்.
அதன் மீதேறிப் பயணித்து
மறுகரையேறி
ஒரே முறையேனும்
மழையோடாடி வாழலாம்
என்ற கனவுகளுடன்
மனதாறும் வரை
மழையாடலாம்.
அப்படியான கனவுகளோடு
அனேகமாக,
இன்றைய இரவு
விடிவதற்குள்
காகிதக் கப்பல்களால்,
கரையேறாத ஒரு
கவிதையை வரைந்து நான்
மழைக்குப் பரிசளிக்கக்கூடும்.


PRADHABA RUDRAN

 A POEM BY

PRADHABA RUDRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


FREEDOM ESTRANGED
As the alarm set by someone unknown
_ hordes of words
following no line-alignment
nor the sequence of Time
keep sounding and hiding
on the screen
Waves keep roaring incessantly
inside the head
Decayed empty words crowding
turn alien from this point
For handing over
their Freedom
none there
in truth
any more.

அந்நியமாகிய விடுதலை

யாரோ
செட் செய்து வைத்த
அலாரமென
வார்த்தைக் கூட்டங்கள்
வரிசைமுறையோ
காலமுறையோ
பின்பற்றாது
எண்ணத்திரையில்
ஒலித்துக்கொண்டும்
ஒளித்துக்கொண்டும்
இருக்கிறது.
மண்டைக்குள்
அலையடித்துக்கொண்டே
இருக்கிறது
உணர்வற்ற
வெற்று
வார்த்தைக் கூட்டங்கள்
இங்கிருந்து
அந்நியமாகிறது
அதன் விடுதலை
கையளிக்க
யாரும் அங்கு
நிஜத்தில்
இல்லை.

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

 A POEM BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Kneeling down and praying
the candle would be lit
Chanting manthras
ghee-lamp, camphor incense sticks would be lit
Moments ecstatic
quivering worshipping
shedding tears
with bodies burnt
as sheer glow
and thus smell also
this is how
“the smells of death of things neuter
are sown and grown in the forms of hues.
So used to do that
we go past
the smells of “tyres”
and those rolled in “polythene covers”
and set afire.
Thirugnanasampanthan Lalithakopan

முழங்காலிட்டு செபித்து ஏற்றப்படும்
மெழுகுவர்த்தி;
பிரார்த்தனைகளுடன் ஏற்றப்படும்
நெய்தீபம்,கற்பூரம்,ஊதுபத்தி.
சிலிர்த்து வணங்கி
நீர் உகுத்து;
பரவசமாகும் கணங்கள்.
உடலங்கள் கருகி
ஒளியாயும்;
வாசமாயும்.
இப்படித்தான்
"அ,ஃ றிணைகளின் மரணத்தின்
வாசனைகள்" நிறமூர்த்தங்களில்
பயிரிடப்படுகின்றன.
பழக்க தோசத்தில்
கடந்து செல்கிறோம்;
"டயர்களின்"வாசனைகளையும்
"பொலித்தீன் உறைகளில்"
சுற்றப்பட்டு தகனிக்கப்படுவோரையும்.
-லலித்தா-

DINA. K.

 A POEM BY

DINA. K.

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Initially I thought he was insane
Only on observing keenly i could see
that he was conversing with a tree.
I was surprised
Hiding my astonishment I stood unseen
and watched
The tree complained to him of the birds
not paying the balance rent of days bygone
and the noise caused by the Mynas
sitting on the electric wires
Also
it expressed regret
for being stationed there
from start to finish.
It would be maddening.
What can he do
Poor he….
So he kept quiet
At last while leaving
‘I want a ripe leaf’, said he.
Smiling the tree shed one for his sake.
Long after he had gone
I approached the tree
with a handful of sand.
In the meanwhile
I had memorized the tree’s language.
It told me
the same complaints
the same grievances
I asked playfully.
But just as the ripe leaf
it gave me the roots too.
After that
carrying the root in a handful of soil
I approached the next tree.
Thus
I have fashioned a
desert..
Dina K

முதலில் அவரை
பைத்தியம் என்று
நினைத்தேன்
உற்றுப் பார்த்தபோது தான்
தெரிந்தது அவர்
மரத்துடன் மிகச்சாதரணமாக
பேசிக் கொண்டிருந்தார்
ஆச்சரியமாக இருந்தது
ஆச்சரியத்தை
மறைவாக நின்று
கவனித்தேன்
பறவைகள் பழைய வாடகை
பாக்கி கொடுக்காதது குறித்தும்
மின்சாரக் கம்பியில்
அமரும் மைனாக்களின்
இரைச்சலைக் குறித்தும்
அவரிடம்
புகார்களை தெரிவித்தது மரம்
மேலும்
பிறந்ததிலிருந்து
ஒரே இடத்தில்
வாழ்வது
குறித்து மிகவும் வருத்தப்பட்டது
பாவம்
பைத்தியம் பிடித்தது போல இருக்கும்
அவரால் என்ன செய்துவிட முடியும்
அமைதியாக இருந்தார்
கடைசியாகப் போகும் போது
எனக்கொரு பழுத்த இலை வேண்டும் என்றார்
மரம் சிரித்தபடி அவருக்காக உதிர்த்துக் கொடுத்தது
அவர் சென்றபின்
வெகுநேரம் கழித்து
ஒரு பிடி மண்ணுடன்
மரத்திடம் சென்றேன்
அதற்குள் மரத்தின் மொழியை
மனனம் செய்திருந்தேன்
அதே புகார்களை
அதே வருத்தத்தை
என்னிடமும் தெரிவித்தது
விளையாட்டாகத் தான்
கேட்டேன்
பழுத்த இலையைப் போலவே
கேட்டதும் வேரைத்
தந்துவிட்டது மரம்
அதன்பிறகு
பிடி மண்ணில் வேரைச்
சுமந்தபடி அடுத்த மரத்திடம்
சென்றேன்
இப்படியாக
நான் ஒரு
பாலைவனத்தை
உருவாக்கினேன்

PAALAINILAVAN

 A POEM BY

PAALAINILAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


INJUSTICE

The spotlight on the dead one
Didn’t come into being all of a sudden
The halo of the dead
has been enduring right till now.
In hunger and tears it is woven.
In love and kiss
it wanders dnon-stop.
When the Dead was alive
why didn’t we realize
the Messaiah in him
Bringing the Cross and making him lie on it
Day-in and day-out
Oh, why do we keep appraising him
on a daily basis
More than of the one alive
the radiance of the dead
is divinity personified.
Wounded
Humiliated
and died in illumination
Renouncing his bodily semblance
Has resurrected for ever
In his wounds.
We cannot interfere with the glow of the dead.
We
Don’t turn one into a Messiah.
Even the Messengers of God cannot do it.
He
Came as a Messiah
strewn his torso
as a slice of bread
and
tearing off his body
as an attire
and resurrected in form anew
gained eternity in words.
Despite our beating and torturing him
He remained a Messiah
Rrght till the end.
His blood
is pristine.
The stain in our hands
Is but injustice
meted out to him by us.
Paalainilavan Nilavan
அநீதி
இறந்தவர்
மீதான வெளிச்சம்
திடீரென உதிக்கவில்லை
இறந்தவரின் ஒளி
இதுகாறும் சாசுவதமானது
பசியிலும்
கண்ணீரிலும் அது ஊடுபாவியுள்ளது
காதலிலும் முத்தத்திலும்
அலைந்த திரிந்தது
இறந்தவர்
இருந்த போது
நாம் ஏன்
அவரை
மெசியாவென்று அறியவில்லை
சிலுவைக் கொண்டுவந்து
அதில்
அவரை படுக்க வைத்து
ஏன் தினமும்
அளவெடுத்துக்கொண்டிருந்தோம்
உயிரோடு இருப்பவரைவிட
இறந்தவரின் ஒளி
தெய்வீகத்தில் நிறைந்துள்ளது
காயங்கள் பட்டு
அவமதிக்கப்பட்டு
ஒளியில்
மரணித்தவர்
தன் சொந்த சரீர சாயலை துறந்து
தன் காயங்களில்
என்றென்றைக்குமாக
மறு ரூபப்பட்டுள்ளார்
இறந்தவரின்
ஜோதியில் நாம் குறிக்கீடேதும்
நிகத்த வியலாது
நாம்
ஒருவரை மெசியாவாக ஆக்கவில்லை
அது தேவதூதர்களாலும் இயலாது
அவர்
மெசியாவாக வந்தார்
தன் உடலை
ஒரு ரொட்டித் துண்டாகப் பீய்த்துப்போட்டார்
உடலை
ஒரு உடையாக கிழித்தெறிந்து
மறுரூபப்பட்டு
சொற்களில் நித்தியத்துவம் பெற்றார்
நாம்
அவரை அடித்துத் துன்புறுத்தியும்
அவர்
முடிவு பரியந்தம்
மெசியாவாகவே இருந்தார்
அவருடைய ரத்தம்
குற்றமில்லாதது
நமது கைகளின் கறை
நாம் அவருக்குச் செய்த அநீதி.

S.J.BABIYAN

 A POEM BY

S.J.BABIYAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ONLINE EDUCATION
She tried, sitting
Also tried, standing
And also tried leaning against the wall
Except her image
nothing else could be seen!
At last the video appeared
But, alas, no audio
The way my little daughter suffers
in the name of online education
is indescribable; unbearable.
My heart yearns to cast it away
as a façade of teaching and learning.
With Cell-phone held on both hands
and laptop on the table
struggling for hours together
Dialogue and Airtel
Mobytel and Hatsi
melting away what little money we have
fail to provide ‘coverage’.
Seeing the way she suffers
with her legs bearing the brunt
my heart grows burdensome.

மெய்நிகர் கல்வி
குந்தியிருந்து பார்த்தாள்.
எழும்பி நின்றும் பார்த்தாள்.
சுவரிலே சாய்ந்திருந்தும் பார்த்தாள்.
அவள் விம்பத்தை தவிர
வேறொன்றும் தெரியவில்லை. !
நிழல் வந்தும் ஒலியில்லை
மெய்நிகர் கற்றலுக்காய்
என் மகள் படும் துன்பத்தை
என்னவென்பேன்.?
பொய்யான கற்ற லென்றே
புறந்தள்ள நினைக்கிறது
என் மனம்.
கை யிண்டில் கைப்பேசியும்
மேசையில் லப்டொப்பும்
பல நேரம் மெனக்கெட்டும்
டயலொக்கும் எயார்டெலும்
மொபிடெலும் ஹட்சியும்
காசை கரைத்ததே தவிர
கவரேஜ் தரவில்லை.
கால் கடுக்க அவள் படும்
கஷ்டத்தை கண்டு
கனக்கிறது மனம்.

செ.ஜெ பபியான்

ADHEEDHAN SUREN

 A POEM BY

ADHEEDHAN SUREN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


HONOURABLE OFFICER


Has retired from service just recently
As he is a staunch believer of God
He can go to the temple daily.
He who has been doing the walking exercises
inside the apartment campus all these days
can henceforth go to the nearby park
sit and chitchat about global issues
with his fellow-pensioners.
It would indeed be satisfying to be
just like all others
watching news and cricket matches
in TV
and enjoying them to the hilt.
Of course, now and then
he can go out
for buying vegetables and for meeting old friends.
Yet
He keeps venting out his grievance
of the fear gripping him
of the prospect of spending the
rest of his life
in searching for another chair
similar to the one
which had held his bums
for more than a quarter century.

மேதகு அதிகாரி
மிகச் சமீபத்தில்தான்
பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்
தீவிர கடவுள் பக்தி உடையரவராகையால்
தினந்தோரும் தவறாமல்
கோவிலுக்குச் செல்லலாம்
அடுக்கக வளாகத்திற்குள்ளேயே
இதுவரை காலையில்
நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்
இனி மாலை நேரங்களில்
அருகிலிருக்கும் சிறு பூங்காவில்
சக ஓய்வூதியக்காரர்களுடன்
உலக விஷயங்களைப் பேசுவதில்
எவ்விதத் தடையும் இருக்காது
மற்றெல்லோரையும் போலவே
தொலைக்காட்சியில் செய்திகளையும்
கிரிக்கெட் போட்டிகளையும் கண்டு களிப்பதில்
திருப்திதான்
அவ்வப்போது காய்கறிகள் வாங்கவும்
பழைய நண்பர்களைப் பார்க்கவும்
வெளியில் போய்வரலாம்தான்
ஆனாலும்
கால்நூற்றாண்டுக்கும் மேலாக
புட்டத்தைத் தாங்கிப் பிடித்திருந்த
அந்த நாற்காலியைப் போல்
வேறொன்றைத் தேடிக் களைப்பதிலேயே
மீதமிருக்கும் வாழ்நாள் கழிந்துவிடுமோ
என்கிற ஐயம்
தன்னை வாட்டிக் கொண்டிருப்பதாக
அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்...
அதீதன் சுரேன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS