INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, June 23, 2026

MADHUSUDHAN SUKUMARAN

 A POEM BY

MADHUSUDHAN SUKUMARAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
I am an animal
The identity of my being
Is not lost
the flesh charred and burnt
by the Forest Fire
is not what I require
nor am I a species
feeding on the leftovers.
Smelling blood
And tearing flesh
In uncompromising hunt
Is what I am used to
Throbbing nerves
Trembling and turning still
Gives me intense thrill.
I am an artist-par-excellence
Who enjoys the sound of death
Asmusic divine.
With the primordial flame of my hunger
raging
leaving the jungle
I entered the city
Thousands of animals there
With the striking resemblance of my bloody venom
Thousands of animals there
Everywhere.


நானொரு மிருகம்.
என் இருப்பின் அடையாளம்
தொலைந்து போகவில்லை.
காட்டுத்தீ பொசுக்கிய
கருகிய மாமிசமல்ல என் தேவை.
மிஞ்சியது போதுமென ஏற்கும்
எச்சில் மிருகமுமல்ல நான்.
சமரசமற்ற வேட்டையில்
குருதி முகர்ந்து
நகங்கள் பதித்து
தசை கிழிக்கும் பழக்கம் எனக்கு.
துடிக்கும் நரம்புகள்
நடுங்கி அடங்குவது
நிரம்பப் பிடிக்கும்
மரணத்தின் ஓசையை
இசையென ரசிக்கும்
மகாக்கலைஞன் நான்.
என் பசியின் ஆதி தழல்
கனன்றெரிய
வனம் நீங்கி நகர் புகுந்தேன்
என் குரூரம் கொப்பளிக்கும்
அதே சாயலில் ஆயிரம் மிருகங்கள்.
*****

மதுசூதன் சுகுமாரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

MULLAI AMUTHAN

  A POEM BY MULLAI AMUTHAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) We have cast away the nest with venom unleashed. Yet the ...