The priest on the other
In the scream of the whip
there is Lightning
Hunger in one
Rain in another.
Nothing hurts
none.
Listening to Appeals and Prayers
simultaneously
there remains Karuppasaami
standing between
the Circus Tent
and Temple Mandap.
"ஒரே சாட்டை"
வித்தைக்காரன்
ஒருபக்கம்
பூசாரி
மற்றொருபக்கம்
சாட்டையின் அலறலில்
மின்னல் தெரிகிறது.
ஒன்றில் பசி,
மற்றொன்றில் மழை.
யாரையும்
காயப்படுத்தவில்லை
எதுவும்.
ஒரே நேரத்தில்
வேண்டுதலையும்
பிரார்த்தனையையும்
கேட்டுக்கொண்டிருக்கிறார்
கருப்பசாமி.
சர்க்கஸ் கூடாரத்திற்கும்
கோயில் மண்டபத்திற்கும்
நடுவே நின்றபடி.
அனந்தன் ராஜபுத்ரன்
2.THE SILENCE OF VIOLIN
On one side
Words as veritable rope
drag me along.
At that time
Music is but
the silent violin
hanging on the wall.
On the other side
when Music gets into me
as river perennial
Words as footwear
left on the shore
lie there
with no use whatsoever
"மௌன வயலின்"
ஒரு பக்கம்
வார்த்தைகள்
என் உள்ளத்தை
கயிறுபோல் இழுத்துச் செல்கின்றன.
அப்போது
இசை என்பது
சுவரில் தொங்கும்
மௌன வயலின்.
மற்றொரு பக்கம்
இசை
என் உடலுக்குள்
நதியாய் இறங்கும் போது,
வார்த்தைகள்
கரையில் கழற்றிவிட்ட
செருப்புகள் போல
அவசியமின்றி கிடக்கின்றன.
அனந்தன் ராஜபுத்ரன்




No comments:
Post a Comment