A POEM BY
MULLAI AMUTHAN
We have cast away the nest
with venom unleashed.
Yet
the voice of the Koel
filled with anguish and despair
hovers over the nest
shattered beyond repair.
This is how I carried him
who went as witness for my sake
Mother said: Be silent….
Write not a word…
Don’t turn enraged
This is how one should press the
cartridges
said my friend …
The shot missed the target
Comrades bear the burden……
The burden of burial ground
weighed in the tears of everyone…
Tell now, isn’t the Koel’s voice of
anguish and despair
reverberating in the graveyard too,
everywhere…..
கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..
ஆனாலும்
குயிலின் ஈனக்குரல்
இன்னும்
சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது.
எனக்காக
அவன் சாட்சியாய்ப் போனவனை
இப்படித்தான்
சுமந்தேன்.
அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..
எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே..
வில்லைகளை
இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..
குறி பிசகியது..
தோழர்கள் சுமக்கிறார்கள்.
இடுகாட்டின் கனதி அனைவரின் கண்ணீரில் தெரிந்தது..
இப்போது சொல்..
குயிலின் ஈனக்குரல் இடுகாட்டிலும் ஒலிக்கிறது..
முல்லைஅமுதன்



No comments:
Post a Comment