INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, June 23, 2026

DEEN GAFOOR

 A POEM BY

DEEN GAFOOR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
TODAY A THRESHOLD I AM
Today I stand as a threshold.
Inside, days bygone
go on shrinking
and are sleeping inside an
earthen pot.
Outside, new roads
going beyond my legs
are running somewhere.
A crow
sitting on my shoulder
has forgotten the story of yesterday
entirely.
The rain tried to pour down
but the sky stood still today
i tried to speak
words inside my mouth
turned into dust
One and all
go past me.
None remembers
the threshold
But
Only at night
an old shadow come
and opening me
leaves in silence.
At that time
I am no human
Nor poetry
I become a memory
Left behind.

இன்று நான் ஒரு வாசல்
•••
இன்று நான் ஒரு
வாசலாக நின்றிருக்கிறேன்.
உள்ளே பழைய நாட்கள்
சுருங்கி சுருங்கி
ஒரு மண்சட்டியில் உறங்குகின்றன.
வெளியே புதிய வீதிகள்
என் கால்களைத் தாண்டி
எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஒரு காகம் என் தோளில் அமர்ந்து
நேற்றைய கதையை
முழுதாக மறந்துவிட்டது.
மழை பெய்ய முயன்றது
ஆனால் வானம் இன்று
அசைவற்று இருந்தது.
நான் பேச முயன்றேன்
சொற்கள் என் வாய்க்குள்
தூசியாக மாறின.
என்னைக் கடந்து
எல்லோரும் செல்கிறார்கள்.
யாரும் வாசலை
நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
ஆனால்
இரவில் மட்டும்
ஒரு பழைய நிழல் வந்து
என்னைத் திறந்து பார்த்து
மௌனமாகப் போகிறது.
அப்பொழுது
நான் மனிதன் அல்ல
கவிதை அல்ல
விட்டுச் செல்லப்பட்ட
ஒரு நினைவாக மாறுகிறேன்.
•••
டீன் கபூர்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

MULLAI AMUTHAN

  A POEM BY MULLAI AMUTHAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) We have cast away the nest with venom unleashed. Yet the ...