A POEM BY
PON ILAVENIL B
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Memories
goes on moving ahead
The deadly quiet of the ground
that holds the
word that defies reading
fills the heart.
Angst swaying and gripping
wanders in the air
Memories that turned affection
as the fragrance of happiness unmatched
and made you relish and savour
So relieving you of hunger
are flying in front
as the portrait of bus.
It is in the light
that has got lost into the distance
afar
the residual visuals and journeys
hereafter
வாசிக்க முடியாத சொல்
_________
நினைவுகளைக்
கொண்டு செல்லும் பேருந்து
முந்திச் செல்கிறது
யாராலும் வாசிக்க முடியாத
சொல்லை ஏந்தி நிற்கும்
மைதானத்தின் அமைதி
உள்ளத்தில் படர்கிறது
அசைந்து பற்றிக் கொண்ட
துயர் காற்றில் அலைகிறது
ஆனந்தத்திற்கு பிரியத்தை
வாசனையாக நுகரவிட்டு
பசி ஆற்றி திசைகளுக்குள்
மறைந்து போன நினைவுகள்
பேருந்துச் சித்திரமாக
முன்னே பறக்கிறது
தூரத்திற்குள் தொலைந்து
மஞ்சளாகிப்போன
வெளிச்சத்தில் தான் மிச்ச
காட்சிகளும் பயணங்களும்
பொன் இளவேனில்



No comments:
Post a Comment