A POEM BY
ANTON BENI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Thought I till yesterday
That it is not so
dawned on me today.
If seen the way I was conversing with Samikannu
in the bazaar
some two days back
The one who is in the front room of this house now
is the same me… the nature too
being the same.
Not just in the terrace at the sixth floor
but from whatever height I am seen
The way I fear Srinivasan and take flight
No need to watch it all separate.
At the compound gate you should never see me
_An Alsatian
wandering with tongue stretched to the ground
biting and tearing off the children’s straying balls
with its molar teeth
Mother’s mercy in going in search of
the cup of tea or coffee or fruit juice
concealed in the kitchen
_ Even Azhagusundaram who is always with me
would have never found in me
In the bedroom
Except the two pillows I require
All other things should think of me being with her.
Or , considering me to be a lunatic
of the well of night
Should leave me.
Henceforth all my worries would be
If I am to commit a suicide
From which I should I initiate
நான் ஒரு தற்கொலை செய்வதென்றால்....
***
இந்த வீட்டிற்குள்
நான் மட்டும் இருக்கிறேன் என்றே
நேற்றுவரை நினைத்திருந்தேன்.
அப்படி இல்லை என்பது இன்றுதான் தெரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் கடைத்தெருவில்
சாமிக்கண்ணுவுடன்
பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தால்
வீட்டின் முன் அறையில் இப்போது இருப்பதும்
அதே நான்தான்.. சுபாவம் கூட அதே தான்.
ஆறாவது தளத்தின் மொட்டை மாடியில் என்றில்லை
எந்த உயரங்களில் என்னைப் பார்த்தாலும்
வழக்கமாக சீனிவாசனுக்குப் பயந்து
நான் ஓடுவதை தனியே பார்க்க வேண்டியதில்லை.
சுற்றுச் சுவர் வாசலில் என்னை நீங்கள் பார்க்கவே கூடாது
வழி தவறும் பாலகர்களின் பந்துகளை
கடவாயில் குதறி தரை தட்டும் நாவோடு அலையும்
ஆறடி அல்சேசன்
சமையலறைக்குள் ஒளிந்திருக்கும்
ஒரு கோப்பைத் தேநீர் அல்லது காஃபியை
அல்லது ஒரு குவளை பழச்சாற்றை
தேடிச் செல்லும் அம்மாவின் கருணையை
என்னுடனே திரியும் அழகுசுந்தரம் கூட
என்னில் அறிந்திருக்கமாட்டான்.
படுக்கை அறையில் எனக்குத் தேவையான
இரண்டு தலையணைகள் தவிர்த்து
மீதம் இருக்கும் அத்தனையும் அவளுடன் நான்
இருப்பதாகவே கொள்ள வேண்டும்.
அல்லது பின்னிரவுகளின் மனநோயாளி என்றே
என்னை விலக வேண்டும்.
இனி என் கவலையெல்லாம்
நான் ஒரு தற்கொலை செய்வதென்றால்
முதலில் எந்த என்னிடமிருந்து
தொடங்குவது.
…ஆண்டன் பெனி



No comments:
Post a Comment