INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, June 25, 2022

KANIAMUDHU AMUTHAMOZHI

 THREE POEMS BY

KANIAMUDHU AMUTHAMOZHI

Translated into English by Latha Ramakrishnan(*first Draft)
(*with the correction suggested by the poet duly incorporated)

1. THE ROLLING DICE OF LIFE


Just as rolling the dice
and playing
You encase my feelings and emotions
in your palms
And rubbing them animatedly
with heat pervading
You fling them on the floor.
In my countenance that
revelling in it getting immersed
reeling under a spell and then
regaining clarity as well _
passion pervades
as patches of clouds crimson
the music enthralling of the
moment of bliss
that melting me lock stock and barrel
pouring it into your self
fills my cabin
In the feel of your eyes
experiencing divinity in a trice
my world turns topsy-turvy.
Smiling ecstatically
I stand wide-stretched
in sheer bliss
Panting and gasping
when I rolled
that which came to be –
was it the one you’ve asked for
or that which I have offered.
The total sum of the two dices
fallen with their faces on the ground
ere I could glance at it
was Twelve
Moving your coin you
sever me
and throw me away
I lay scattered
as pearls
that can neither be assembled
nor strung _
right there
where you have
won over me ._

பன்னிரெண்டு
தாயக்கட்டைகளை
உருட்டி விளையாடுவது
போலவே
என் உணர்வுகளை
கைகளுக்குள் பொதித்து
சூடு பறக்க
தேய்த்து உருட்டி
விடுகிறாய்
அதில் திளைத்து
தெளியும்
என் முகத்திலோ
செம்மேகத்திட்டுகளாய்
மோகப்பரவல்
என் உயிரை உருக்கி
உன்னுள் வார்த்த
தருணத்தின்
மோகனப்பண்
அறை நிறைக்கிறது
உன்
கண் ஸ்பரிசத்தில்
கிரங்குகிறது
என் உலகம்
மந்தகாசப்
புன்னகை சூடி
பேரானந்தத்தில்
விகசித்து
நிற்கிறேன்
மூச்சிரைக்க
உருட்டியதும்
விழுந்தது
நீ கேட்டதா
நான் தந்ததா
பார்க்கும் முன்
குப்புற கவிழந்த
கட்டைகளின்
மதிப்பு பன்னிரெண்டு
காய் நகர்த்தி வெட்டி
தூக்கி வீசுகிறாய்
என்னை.
எடுக்கவோ
கோர்க்கவோ.....
இயலாத
முத்துக்களாய்
சிதறிக் கிடக்கிறேன்
நீ
வீழத்திய இடத்தில்

2. FORM UNIVERSAL
The heat of love’s cinder

remains seething

in heart’s cranny.

The soul’s splashes
and sorrow horrendous
of the sobbing heart
swell and overflow.
The eyes keep sketching pictures
Sorrowful ever and
droop in despair.
Those which are pulled
fall on the lap by the law of gravity
is but natural
But for one Life attaching itself to another
Is this magnet that pulls iron
It is the mesmeric pull of Life
The magnetism of
Life drawing Life unto it.
An exclusive allure it owns
The toxin drop of elixir churned
Lust poison-filled cocktail
Love _ Form Colossal of Shortfall.


காதல் கங்கின் கனல் கனன்று கொண்டிருக்கிறது
மன இடுக்கில்
உயிரின் தெறிப்புகளும்
உள்ள விசும்பலின் சோகமும்
நிறைந்து வழிகிறது
கண்கள் சதா துயரப் படம் வரைந்து வரைந்து
சோர்ந்து கவிழ்கிறது.
இழுபட்டவை புவியீர்ப்பின்
விசையில் மடி வீழ்தல்
இயற்கை
ஆனால் உயிரோடு உயிர் ஒட்டிக்கொள்ள
இது என்ன இரும்பையிழுக்கும் காந்தமா
உயிர் காந்த இழுவை
உயிரை உயிர் ஈர்க்கும் ஆகர்ஷணம்
இதற்கு தனி வசீகரம்
அமுத கடைசலின் துளி விஷம்
நஞ்சுண்ட காமம்
நிறைவின்மையின் விஸ்வரூபம் காதல்

(3)

THAT WE ARE FOREVER BEING
SOMEONE UNKNOWN (TO US)
IS CRUCIFIXION ;
BEARING THE CROWN OF THORN.
THAT WE ARE FOREVER BEING
OUR OWN SELF
IS
SPREADING WINGS
IN SPACE INFINITE.


எப்போதும்
யாராகவோ
இருக்கிறோம்
என்பது
முள் முடி #ஏந்தல்
எப்பொழுதும்
நாமாக
இருக்கிறோம்
என்பது
கட்டற்ற வெளியில்
சிறகு விரித்தல்.

Friday, June 24, 2022

RAMESH KANNAN

A POEM BY

RAMESH KANNAN

 Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 That I have nothing to offer

You are able to realize

as child that understands

that the father returning from night shift

is but empty-handed.

Now

droplets of water become unfettered.

Your body turns into a laboratory

where words are liquefied.

The sari- ‘pallu’ is the beauty of he

who cleans the tables in a hotel

doing it again and again

feeling desolate

In a textile showroom

when the sari is being spread and shown

its body and ‘mundhaanai’ portions

_Tears we never ever imagine.

 

Ramesh Kannan

 என்னிடம் கொடுப்பதற்கு

ஏதுமில்லை உனக்கு என்பதை உன்னால்

ஷிப்ட் முடிந்து வரும் தகப்பனிடமிருப்பது வெறுங்கைகள் மட்டுமே

என்பதை ஒரு குழந்தையைப் போலக் கண்டறிந்து விட முடிகிறது

இப்போது

நீர்த்திவலைகளுக்கென ஒரு சுதந்திரம்

சொற்கள் திரவமாக மாறும்

ஓர் ஆய்வகமாகி விடுகிறது உனதுடல்

ஓர் உணவு விடுதியில் மேசையைத் துடைப்பவன் சலிப்பில் மீண்டும் மீண்டும் நேர்த்தி செய்கிற அழகு தான் முந்தானை

ஒரு துணிக்கடையில் இது உடம்பு இது முந்தானை என விரித்துக் காட்டுகிற போது

நாம் ஒருபோதும் கண்ணீரைக் கற்பனை செய்து கொள்வதில்லை

 குறிப்பு: நம் மண்ணுக்கே உரித்தான உடையை அதன் பாகங்களை ஆங்கிலத்தில் சரியாகக் கொண்டு வர இயலவில்லை. ஆங்கிலத்தில் pallu என்று போடுவது பரவலாகக் கையாளப்படும் மொழி பெயர்ப்பு என்றாலும் அது தமிழ் வார்த்தையில் லாதபோது முந்தானை என்ற சொல்லையே பயன்படுத்த லாமே என்று தோன்றியது. தவிர, முந்தானை என்ற சொல்லுக்கு புடவையைத் தாண்டிய குடும்பஞ் சார் அர்த்தப்பரிமாணங் களும் உண்டு என்பதும் நினைவில் வந்து கொண்டேயிருந்தது. சரியென்று இரண்டு சொற்களையும் பயன்படுத்திவிட் டேன். Translation is bilingual, bi-cultural என்பார்கள். கலாச் சாரச் சூழல் சார்ந்த சொல்லாடல்கள் மொழிபெயர்க்கவே இயலாமல் போய்விடும் இடங்கள் நிறையவே.

 Note: Translating a work poses quite a number of problems or challenges or difficulties - pertaining to language and culture of the source language as well as the target language. Sari is an attire almost exclusively worn by Indian women and may be women of some East-Asian countries. Hence, I couldn't find an equivalent term in english for the Tamil word Mundhaanai. I know Pallu is generally used. And so I used it in one place. But, the fact that it is not a Tamil word(or, is it?) and also that the term Mundhaanai in Tamil has more than one meaning, I mean the implied one, and especially its association with domestic life compelled me to use the Tamil word as it is in my English translation of the poem. _ Translator

 


KADANGANERIYAN THAMIZHNAADU

 A POEM BY

KADANGANERIYAN THAMIZHNAADU

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
For the grand old lady banging against the soil
and surfacing
while the feet walk along the primordial crematoriums
a handful of words are there
to offer
In return
She points at the direction and course meant for me.
Hearing the noise
a black-naped hare runs away in terrible haste
and falls a prey
to the hound accompanying the shepherd
When there is a reckoning that
at that time, at that spot
blood has to spill somehow
without fail
whoever gives it – does it matter at all
Land or Lady –
suffice to have the face aglow
The twilight sky applies yellow
nothing more can be done
save going to have a bath anon.

ஆதிச் சுடுகாடுகளில் பாதங்கள் நடைபயிலும் போது
மண்ணை முட்டியெழும் கிழவிக்கு கையளிக்க சொற்கள் கொஞ்சம் கைவசம் இருக்கின்றன
பதிலாக
எனக்கான திசைவழியை கை காட்டுகிறாள்
அரவம் கேட்டு குழி முயலொன்று தலைதெறிக்க ஓடி
மேய்ப்பனோடு காவலுக்கு வந்த நாய்க்கு இரையாகிறது
அந்த நேரத்தில் அந்த இடத்தில்
ரத்தம் சிந்தியாக வேண்டுமென கணக்கிருக்கும் போது
யார் கொடுத்தால் என்ன
மண்ணோ / பெண்ணோ முகம் சிவந்தால் போதாதா
அந்தி வானம் வேறு மஞ்சளைப் பூசுகிறது
இதற்கு மேல் நான் செய்வதற்கொன்றுமில்லை
நீராடுவதைத் தவிர...

SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Whenever I take the old Seiko clock
that starting from ten
ticking late by twenty minutes
to Salim Bai
'You won’t get one like this
even if you wish' says he.
Father also said the same
when I was seven year old
'Now it would run -
for, the repair is done'
says Salim Bai
Blissfully happy to hear it
'Exact time now
would be royally installed on my table'
I thought thus, but alas
the very next morn
twenty minutes were lost.
Holding it close to the ear when I listened
the clock’s rhythm was in tact
Once again I took it to Salim Bai’s shop
Opening the clock
and fixing a small magnifying glass
in one eye
He observed keenly
and said _'
No big deal, sir.
Suffice to repair it a bit
Come in the evening
'Will it be worthwhile to spend on it' I asked
'You wouldn’t have keyed it properly' said he
I have opened the Seiko
in slightly faded golden hue
kept in a compact leather box
and seen
it is in good condition
since morning correct time is being shown
here, have it', said he.
Giving him the fee for repairing
When I returned home
my better half smiling in a new fashion
avoiding the clock
eyed me.
With the time of keying the previous day
in tact
I have keyed it fully.
Thought of keeping it in the box
for two days.
Now it is running ten minutes late.
Salim Bai would open his shop at nine-thirty.
Nothing would happen
if I keep it closed till that time.
For me Seiko watch is prime
more than the time
On telling Salim Bai
that the clock was running
ten minutes behind time
'It was running perfectly well here
a little repair would do
let it be here for two days
you can’t get this model even in Moor Market
it would be, sir, a little ahead or behind,
Insha Allah henceforth it would be fine
he opined.
Shanmugam Subramaniam

ஒவ்வொருமுறையும் பத்தில் துவங்கி
இருபது நிமிடங்கள் தாமதாமாக ஒடும்
பழைய சீக்கோ அலாரம் கடிகாரத்தை
சலீம் பாயிடம் எடுத்துச் செல்லும் போதெல்லாம்
இப்போது விரும்பினாலும் கிடைக்காது என்கிறார்
அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்
அடுத்த நாள் காலையில் இருபது நிமிடங்கள் தொலைந்துவிட்டிருந்தன
காதருகில் வைத்து கேட்கும்போது
கடிகாரத்தின் ஓட்டலயம் தப்பவில்லை
மீண்டும் எடுத்துச் சென்றேன்
கடிகாரத்தை திறந்து ஒருகண்ணில்
சின்ன பூதக்கண்ணாடியைப் பொருத்திக் கொண்டு
கூர்ந்து பார்த்துவிட்டு
ஒன்றுமில்லை சார்
சின்னதாக சரிபார்த்தால் போதும்
மாலை வாருங்கள் என்ற சலீம்பாயிடம்
இதற்கு செலவிடுவது பிரயோஜனமாக இருக்குமா என்றேன்
சாவிசரியா கொடுத்திருக்க மாட்டீர்கள் என்றார்
தங்கமுலாம் லேசாக மங்கி
சிறுசதுர தோல்பெட்டிக்குள்
கையடக்கமாக இருக்கும் சீக்கோவைத்
திறந்து பார்த்துவிட்டேன் நன்றாகத்தான் உள்ளது
காலைமுதல் இங்கு நேரம் மாறவில்லை
இந்தாருங்கள் என்றார்
அவருக்கான பழுதுநீக்கும் கட்டணத்தைத் தந்துவிட்டு
இல்லம் திரும்பியதும்
துணைவி புதுவிதமாக சிரித்தபடியே
கடிகாரத்தைத் தவிர்த்துவிட்டு என்னைப் பார்கிறார்
நேற்று சாவிகொடுத்த அதே நேரம் தவறாது
முழுசாவியும் கொடுத்தாயிற்று
இரண்டு நாட்கள் பெட்டிக்குள் மூடிவைத்துவிட
எண்ணினேன்
இப்போது பத்துநிமிடம் தாமதமாகிவிட்டிருந்தது
சலீம்பாய் ஒன்பதரை மணிக்குதான் கடைதிறப்பார்
அதுவரை மூடிவைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை
எனக்கு நேரத்தைவிட
சீகோ கடிகாரம் முக்கியம்
சலீம்பாயிடம் பத்து நிமிடம் தாமதமாக
நேரத்தை காண்பிக்கிறதே என்றதும்
இங்கு நன்றாகத்தான் ஒடியது
சின்னதாக சரிபார்த்தால் சரியாகிவிடும்
இரண்டு நாட்கள் இருக்கட்டும்
இந்த மாடல் சீக்கோ மூர்மார்க்கட்டில்கூட
கிடைக்காது
கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான்
இருக்கும் சார்
இன்ஷா அல்லாஹ் இனி சரியா ஓடும்
வாங்க என்றார்.

- எஸ். சண்முகம் -

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS