INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

UDUMALAI KALIDAS

 A POEM BY 

UDUMALAI KALIDAS

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE HEARTPECKER
The key of my secret casket I had entrusted with the Teacup of your house
The pages of my personal diary I have given shelter in your kitchen cupboard
Even the password of my too painful codes
Remained as bars inside the cage of the lovebirds you reared.
It was at the instant when the banks of our pond of love broke
That i came to know
That all the codes and symbols of my confidentialities, closets, sorrows have been dumped into the Dobermann shed of your house
Now, see here - my tongue caught in the hands of some
word-devouring Octopus,
wanting to converse with thee;
Pecking at it, making it bleed all the way
A Heartpecker takes it away

மனங்கொத்திப் பறவை
என் இரகசியப்பெட்டியின் திறவுகோலை உன்வீட்டு தேநீர்க் கோப்பையிடம்தான் ஒப்புக் கொடுத்திருந்தேன்...
என் அந்தரங்க நாட்குறிப்பின் பக்கங்களை உன் சமையலறை அலமாரியில்தான் அடைக்கலம் கொடுத்திருந்தேன்...
என் வலிமிகுந்த வருத்தக் குறியீடுகளின்
கடவுச்சொல்லும்கூட
நீ வளர்த்த லவ்ஃபேர்ட்ஸின் கூட்டுக்குள்தான் கம்பிகளாயிருந்தது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்...
நம் நேசக்குளத்தின் கரையுடைந்த தருணத்தில்தான் எனக்குத் தெரிந்தது;
என் அந்தரங்கங்கள், என் இரகசியங்கள்,என் வருத்தத்தின் வலிக்குறியீடுகள் யாவும் உன் வீட்டு டாபர்மேனின் கொட்டடியில் கொட்டப்பட்டிருந்ததை...
இதோ இப்போது பார்; ஏதோவொரு சொல்தின்னும் ஆக்டோபஸின் கரங்களில் சிக்கிக் கொண்டு உன்னோடு உரையாட விரும்பும் என்நாவை; குருதி வடிய கொத்திப்போகிறது
ஒரு மனங்கொத்திப் பறவை.

- *இனியவன்காளிதாஸ்*

ABDUL SATHAR

 A POEM BY

ABDUL SATHAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

During childhood

My joy was immense
More than fear
My dreams proved massive
With the whirl of Time
Life has made me shed tears
many a time.
Still...
It couldn’t remove my smile
Life has smashed my heart
Yet...
It couldn’t snatch my soul
Life has belied hopes many
But my dreams it couldn’t destroy any
Taking the Sun inside me
wherever I go
I make the spot glow.
That becomes my smile, you know....
In my living days
with strength serene
spreading the light of my love
creating an inner quietude
I provide solace to
Hearts aggrieved.
Through times that go past
Life causes changes in me
and so move on
So what...
my heart
never grows old...!
Filling the holes of bamboos
with the music of my love...
as the flower
that blooms day after day
spreading its scent all the way
and wither
I live on now and ever.

பிள்ளைப்பருவத்தில்
எனது மகிழ்ச்சி
எல்லையற்றதாக இருந்தது..
பயங்களை விட
எனது கனவுகள்
பெரிதாக இருந்தது..
காலத்தின் சுழற்சியில்
வாழ்க்கை என்னை
பல முறை கண்ணீர்
சிந்த வைத்துவிட்டது...
எனினும்..
அதனால் என் புன்னகையை
அகற்ற இயலவில்லை.
வாழ்க்கை என் இதயத்தை
உடைத்துவிட்டது..
எனினும்..
அதனால் என் ஆன்மாவை
பறிக்க இயலவில்லை…
வாழ்க்கை என்னிடமிருந்து
பல நம்பிக்கைகளைத்
பொய்ப்பித்துவிட்டது..
எனினும்
அதனால் என் கனவுகளைக்
அழிக்க முடியவில்லை..
என்னுள் ஒளிரும்
கதிரவனை
நான் செல்லும்
இடமெல்லாம்
அதன் ஒளியால்
மிளிரச்செய்கின்றேன்..
அது என் புன்னகை
என ஆகிறது..
வாழும் எனது நாட்களில்
அமைதியான ஆற்றலால்
எனது நேசத்தின் ஒளியை வீசி
ஓர் உள் மெளனத்தை
உருவாக்கி
துயருற்ற உள்ளங்களை
ஆறுதல்படுத்துகிறேன்..
கடந்து செல்லும்
காலங்கள் வழி
வாழ்க்கை என்னுள்
மாற்றங்களை நிகழ்த்தி
செல்கிறது…
ஆயினும் என்ன…
என் இதயத்திற்கு
ஒருபோதும்
வயதாவதில்லை..!
மூங்கில்களின் துளைகளில்
என் காதல் மனதின்
இசையை இசைத்து…
நித்தம் மலர்ந்து
மணம் பரப்பி
உதிர்ந்து மடியும்
மலரெனவே
வாழ்கிறேன்.

கோவை.அப்துல் சத்தார்

NOAH LAIS

 A POEM BY

NOAH LAIS 


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

At midday
a daily-wager
was sitting on the roadside.
With his face withered in the hot sun
not daring to ask for water
He glanced at me.
That look
was the plea of a century.
The silent scream:
“O World – please look at me”
I gave him the water bottle
He gulped.
In those droplets of water
His silence melted
They are not just
in house adjacent to ours
in the next street
in the next village
in the neighbouring land
but also being very near
hiding their tears
struggling with their hunger
hiding their tears
indeed there are too many
now as ever
Offer them some water
A look of care and concern
Some compassion
That is Mercy immense
of the Universe.

மதியத்தில்
ஒரு தொழிலாளி
சாலையோரம் அமர்ந்திருந்தார்
வெயிலில் வாடிய முகத்தில்
தண்ணீர் கேட்கத் தைரியமில்லாமல்
என்னைப் பார்த்தார்
அந்த பார்வை
நூற்றாண்டின் வேண்டுதல்
"உலகமே
என்னைப் பார்த்துவிடு"
என்ற அமைதியான கூக்குரல்
நான் தண்ணீர் பாட்டிலைத் தந்தேன்
அவர் குடித்தார்
அந்தச் சிறிய நீர்த்துளிகளில்
அவரது மௌனம் உருகியது
நமது பக்கத்து வீட்டில்
நமது பக்கத்து தெருவில்
நமது பக்கத்து ஊரில்
நமது பக்கத்து நாட்டில் என்றில்லை
நமது அருகில் கூட
வயிற்றை அடக்கிக் கொண்டு
கண்ணீரை மறைத்துக் கொண்டு
நிற்கும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் பார்வை
கொஞ்சம் பரிவு
அதுவே பிரபஞ்சத்தின்
பெரிய கருணை

நோவா லைஸ்

Pk SIVAKUMAR

 A POEM BY 

Pk SIVAKUMAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

What made your love with the bird end
For Vikramadityan’s query
the autumnal tree
with its roots turning thin and shrunken
began responding
‘When the bird wished
how I am to be’,
more than just being near me.’
‘What did the bird want you to be’
Annoyance _
Sarcasm _
In a tone defying
comprehension
said the Tree
‘That I am to fly, you see’.
‘Then, will the sky provide
nest for the bird and its chicks?’
_Never tiring in his efforts
Vikramadityan came out with the next.
‘Why do I get all advocates
after the case is adjudicated?
And, why is it that
not asking the plaintiff anything
they court-martial the defendant?’
the Tree shot back
‘For inquiry
the Bird is nowhere here’
_ Pat came the answer.
‘We can ask only those
to whom we have access’
Answering thus
the Tree closed its eyes
as if closing the discourse
Vikramadhityan looked up
In the sky
There were Birds
The Sky too
just as the tree
stood there – ‘simply be’

பறவையுடனான
உன் காதல்
எப்படி முறிந்தது?
விக்ரமாதித்தன் கேள்விக்கு
விடை சொல்லத் தொடங்கியது
வேர்கள்
மெலிந்து சுருங்கிவரும்
இலையுதிர்த்த மரம்
என்னுடன் இருப்பதைவிட
நான்
எப்படி இருக்க வேண்டுமென்று
பறவை
ஆசைப்பட்ட போது
நீ
எப்படி இருக்க வேண்டுமென்று
பறவை ஆசைப்பட்டது
கடுப்பா
சர்காஸமா
கண்டுபிடிக்க முடியாத
குரலில் சொன்னது மரம்
பறக்க வேண்டுமாம்
அப்புறம்
பறவைக்கும்
அதன் குஞ்சுகளுக்கும்
கூடு
வானமா தரும்
முயற்சியில் தளராத
விக்ரமாதித்தன் கேட்டான்
அடுத்த கேள்வியை
எல்லா வக்கீல்களும்
ஏன்
எனக்கு
வழக்கு முடிந்ததற்கு
அப்புறம்
கிடைக்கிறார்கள்
அவர்களும்
பிரதிவாதியைக் கேட்காமல்
வாதியைக்
குறுக்கு விசாரணை செய்கிறார்கள்
திருப்பிக் கேட்டது மரம்
கேட்பதற்குப்
பறவை இல்லையே
பதில் வந்தது
இருப்பவர்களைத் தான்
கேட்க முடியும்
பதில் சொன்ன மரம்
கண்களை மூடிக் கொண்டது
முடித்துக் கொண்டது போல
மேலே பார்த்தான்
விக்ரமாதித்தன்
ஆகாயத்தில்
பறவைகள்
ஆகாயமும்
மரத்தைப்போலவே
சும்மாதான்
நின்று கொண்டிருந்தது

- பி.கே. சிவகுமார்
- ஆகஸ்ட் 25, 2025 திங்கள்

PAAL NILAVAN

 A POEM BY 

PAAL NILAVAN


Rendered in English by Latha Ramakrishnan(*Firsr Draft)


Going into the forest
as a monk was my initial wish
and also the wish to wade through
the length and breadth of our land
as a solitary vagabond
was also there a little....
It is the modern world
preventing me from going anywhere
It gave me a call to go, understand the
society of fellowmen.
With the reminiscence of Bird
all-pervading in my room
Inside my cabin sans Television noise
prevailed the silence of the woodland.
Shelf full of books
sharing experiences invaluable
of places near and far
day-in and day-out...
The memories of the past
with days and means of livelihood
spent in different directions
dissolving
and the dreams of hope
that everything would change
drifting away.....
Yet , what at all is there to feel sad
as stuck inside
this Life of the Solitary Cabin
so heartily chosen?

ஒரு துறவியாய் காட்டிற்குள் செல்வதுதான்
ஆரம்பகால விருப்பம்....
ஒரு தனிமைப் பயணியாய்
நாட்டின் நூறாயிரம் வெளியூர்களுக்கு
பாதயாத்திரையாகச் செல்லவும்
கொஞ்சம் ஆசைகள்...
அப்படி எங்கேயும் சென்றுவிடாமல்
நவீன உலகம்தான் தடுத்து நிறுத்தியது...
சகோதர சமுதாயத்தை
புரிந்துகொள்ள அழைத்தது
பறவையின் நினைவுகள்
அறையெங்கும் நிறைந்திருக்க
தொலைக்காட்சி இரைச்சலில்லாத
எனது அறைக்குள் காட்டின் பேரமைதி...
நாட்டின் நூறாயிரம் வெளியூர் பயணங்களில்
செல்லும் அனுபவங்களை பகிர்ந்தளிக்கும்
அலமாரி நிறைய புத்தகங்கள் ...
பல்வேறு திசைகளில்
வேலையும்நாட்களும் கரைந்துசெல்ல
கடந்து வந்த நினைவுகளும்...
மாறும் எதுவும் என்ற
நம்பிக்கை கனவுகளும்...
சுதந்தரித்து சிறகை விரிக்க.....
எனில் விரும்பி ஏற்றுக்கொண்ட
இந்த தனிஅறை வாழ்க்கையில்
சிக்கிக்கொண்டதாக
வருத்தப்பட என்ன இருக்கிறது...
பால் நிலவன்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS