INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

S.J.BABIYAN

 A POEM BY 

S.J.BABIYAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

APPARELS


These days
Attires cause fright
Colours cause strife
Red, Blue, Black, White
Love, Refuge, Revolt, Purity
None in them - nowhere
Facebook
breaking mask
Taking photographs in WhatApp
Causing uproar in the senses
The fear caused by anxiety
is not known to the one causing it
Even cautions get lost
in sarcasm at large

ஆடைகள்

இப்போதெல்லாம்
ஆடைகள் குறித்து அச்சம்
நிறங்கள் குறித்து நிம்மதியில்லை.
சிவப்பு, நீலம், கருப்பு, வெள்ளை
அன்போ அபயமோ எதிர்ப்போ தூய்மையோ
அவற்றில் எங்கும் இல்லை.
மனிதச் சாக்கடைகள்
சட்டைகளுக்குள் மறைந்து
சரீரத்தின் எடை அளக்கின்றன.
முகப்புத்தகம்,
முகத்திரையை உடைத்து
புலனத்தில் புகைப்படமெடுத்து
புலன்களில் சத்தம் எழுப்புகிறது.
சலனத்தின் பயம்
சலனப்படுத்துபவர்களுக்கு தெரியாது.
எச்சரிக்கைகள் கூட
ஏளனத்தின் நிழலில் தொலைந்துவிடுகின்றன.

- S.J.பபியான்
s

V.N.GIRITHARAN

 A POEM BY

V.N.GIRITHARAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
SURRENDERING MYSELF AT THE HANDS OF WINTER
Winter Season is round the corner
For years I have been living in Canada
Still my hatred towards wintry season prevails as ever
As usual, with memories of Winter
as associated ideas I remember snow, fog frost and more.
The thought of how am I going to face them this time
fills my mind.
I have tried many a time
‘Let me this time at least strike a friendly deal with Winter
and so be Peaceful ‘
All such thoughts would go hide themselves
when the Winter Season stretches its hands
towards me shrouding me.
At least in the next year
I should come to terms with it
But, will it be possible?
With such apprehensions surging
I avoid shaking hands with it
and prepare myself for fighting it.
Many a decade I have been living in Toronto
Winter seasons arrive
Winter Seasons depart
My apprehensions about Winter Season too
come and go
‘Rules and norms cannot be changed’ _
So at those times I would console myself
You may call it my abject surrender
to Winter
I am not going to argue against.

குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.
நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.
அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.
பல தசாம்சங்களாக நான் டொரோண்டொவில்
வாழ்ந்து வருகின்றேன்.
குளிர்காலங்கள் வருகின்றன.
குளிர்காலங்கள் போகின்றன.
குளிர்காலம் பற்றிய என் மனச்சஞ்சலங்களும்
வருகின்றன.
போகின்றன.
நியதிகள் மாற்ற முடியாதவை என்று
அப்போதெல்லாம் என்னையே நான்
சமாதானப்படுத்திக்கொள்கின்றேன்.
இதைக் குளிர்காலத்துடனான என்
சரணாகதி என்று நீங்கள் கூறக்கூடும்.
அதை நான் மறுத்துரைக்கப்போவதில்லை.

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY 

RAGAVAPRIYAN THEJESWI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

I planned to steal Pournami, the Full Moon

stretching my hands a little I touched the sky...
The rays oozing and the secret spot revealed
Fear made me shiver
Holding it with both my hands
I kept it inside my shirt.
Just one day is enough...
That day none could have ‘Nilaachoeru’.
None could peep inside the wells
and haul the Moon in bucket.
Even the ‘Alli’ flowers would postpone their
blossoming by a day...
No need for those coming to the Kaveri bank
in the early hours of morning
to attend to the Nature’s call
to go searching for bushes.
The fortune-teller would excavate the skull
of the eldest born
without apprehension
While scaling the wall of the small house
and jumping on the other side
no need for the headgear towel.
Just for a day let this Full Moon
be with me.... Why not
Oh what _
Someone is inserting their hand into my shirt pocket...
How to shrink the stretched hand...?

ஒரு பெளர்ணமியைத் திருடத் திட்டமிட்டேன்..
என் கைகளைக் கொஞ்சம் நீட்டி
வானம் தொட்டேன்..
கிரணங்கள் வழிந்து மறைவிடம் தெரிய
பயம் நடுக்கம் தந்தது...
இரண்டு கைகளாலும் சேர்த்துப்பிடித்து
சட்டைக்குள் வைத்துக்கொண்டேன்
ஓர் நாள் போதும்..
அன்று யாராலும் நிலாச்சோறு சாப்பிட முடியாது...
கிணறுகளை எட்டிப்பார்த்து
வாளியில் நிலாவை அள்ள முடியாது..
அல்லி மலர்கள் மலரும் வேலையை ஒரு நாள் ஒத்திப்போடுவதைக் காணலாம்..
கருக்கலில் காவிரிக்கரையில்
மலம் கழிக்க வருபவர்கள்
புதர்கள் தேடியலைய வேண்டிய தில்லை.
நிமித்தக் காரன் தலைச்சன் பிள்ளைமண்டையோட்டை
பயமின்றி தோண்டியெடுக்கலாம்..
சுவர் தாண்டி சின்ன வீட்டின் சுவரேறிக் குதிக்கையில்
முண்டாசுக்காண துண்டு தேவையில்லை..
ஒரே ஒரு நாள் மட்டும்
அந்தப் பெளர்ணமி என்னோடு
இருந்துவிட்டுப் போகட்டுமே..
அட என்ன இது...
என் சட்டைப் பைக்குள்
யாரோ கையை விடுகிறார்கள்....
நீட்டிய கையை எப்படிச் சுருக்குவது...?

ராகவபிரியன்


ATHMAJIV

 A POEM BY

ATHMAJIV


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


It had dawned then.
That three year old child kept on watching the sunlight
that had faded the radiance of all streetlights.
Mother was sleeping
She was a little indisposed.
Father had gone to work
so soon at dawn
The child turning a little
kissed her mother’s cheek.
Waking up in the feel of the baby’s soft lips
She hugged the child
with a kiss in return.
The little girl once again looked at the
luminous sky
seen through the window
fixing her mother’s eyes on her own.
Taking her feeding bottle with a little milk left
she inserted into her mother’s mouth
the simulated nipple.
Now Motherhood had
changed places.


அப்பொழுது விடிந்திருந்தது.
தெருவிளக்கின் எல்லா விளக்குகளையும்
மங்கச் செய்து விட்ட கதிரொளியை
கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
அந்த மூன்று வயது குழந்தை.
அம்மா உறங்கிக் கொண்டிருந்தாள்
உடல்நிலை சற்று சரியில்லை அவளுக்கு.
அப்பா வேலைக்குச் சென்று விட்டிருந்தார்
விடியற்காலையிலேயே,
குழந்தை சற்றுத் திரும்பி
அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டது.
மழலை உதடுகளின் ஸ்பரிசத்தில் விழித்தவள்
சட்டென்று அணைத்துக் கொண்டாள்
பதிலுக்குத் தந்த முத்தத்துடன்.
குழந்தை மீண்டும் சன்னல் வழியாக தெரிந்த
ஒளிமிகுந்த வானத்தைப் பார்த்தாள்
அம்மாவின் கண்களைப் பொருத்திக் கொண்டு.
மிச்சமிருந்த தன் புட்டிப் பாலையெடுத்து
அம்மாவின் வாயில் திணித்தாள்
அதன் செயற்கைக் காம்பை.
இடம் மாறியிருந்தது இப்பொழுது
தாய்மை.

ஆத்மாஜீவ்


MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

BUDDHA’S ANGST
Rain Raging Sun Chill Snow....
Buddha remained deep in meditation
He remained plunged
Pushing aside Yasodhara, Kith and kin
Desires
So as to turn him into a Siddha.
Before witnessing the joys and sorrows of domestic life
Seeing the transient nature of worldly life...
He started meditating.
Not being able to join hands with the world
which is sunk in sorrow not knowing
the meaning of life
Buddha stood alone.
Then,
Realizing that it would be impossible
To bring together humanity
divided in differences
he attained Samaadhi.
Eventually
Would He who gifted his sermons to the world
Now being made a pawn in the political game
once again turn into a king
a humanbeing.......

புத்தனின் துயரம்.
மழை வெயில் குளிர் பனி ...
தியானத்துள் இருந்தான் புத்தன்.
யசோதரையை உறவுகளை
ஆசைகளை
புறம் தள்ளி தன்னை சித்தனாக்கிக்கொள்ள
மூழ்கி கிடந்தான்.
இல்லற இன்ப துன்பத்தை காணும் முன்...
உலக நிலையாமைக்
கண்டு... தவமிருந்தான்.
உலக வாழ்வின் அர்த்தம் புரியாமல்
துன்பத்துள் மூழ்கி வதையுறும் உலகோடு ஒன்றிணைய இயலாது நின்றான் புத்தன்.
பிறகு பேதங்களால் பிளவுரும் மனித குலத்தை
ஒன்றிணைக்க முடியாதென
சமாதியானான் .

முடிவு-
தன் போதனைகளை
உலகிற்கு பரிசளித்தவன்
தன்னை
அரசியல் பகடை சிலையாக்குவதால்
மீண்டும் அரசனாக
மனிதனாயிடுவானோ..?
~~~~~~~~
மாரிமுத்து சிவகுமார்


KADANGANERIYAN ARIHARASUTHAN

 TWO POEMS BY 

KADANGANERIYAN RIHARASUTHAN

Rendered in English by Latha Ramakrishnan(*first Draft)

1.HOSPITAL NOTES



1
The tears rolling down the eyes of the doctor
forsaking the patient after hours of struggle
have the hue of God’s blood

2

Between the room waiting to see daughter’s newborn
and the delivery room
have to cross the distance of a generation

3

Confirming the first pregnancy
and coming out of the doctor’s room
the wife’s eyes bear the poem unwritten
which the husband begins to read.

4

For getting inside
and going out
separate entrances.

5

No great distance between
Labour Room
and Mortuary.

6.

He who keeps listening to his manager’s abusive words
Jerked by the voice of nurse saying “Sir, you are next”
In that split-second turning oblivious of everything
The medical rep sells his own self.

7.

Behind the language of a doctor’s prescription which is legible to a particular pharmacist alone
there stands a medical representative.

மருத்துவமனைக் குறிப்புகள்:
1. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு
நோயாளியை கைவிடும் மருத்துவரின் கண்களிலிருந்து கசியும் கண்ணீருக்கு
கடவுளுடைய குருதியின் நிறம்.
2.
மகளுக்கு பிறந்த குழந்தையை பார்க்க
காத்திருக்கும் அறையிலிருந்து பிரசவ அறைக்கு இடையே
ஒரு தலைமுறைக்கான தூரத்தை கடக்க வேண்டியதிருக்கிறது.
3.
முதல் கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு
மருத்துவருடைய அறையிலிருந்து வெளியே வரும் மனைவியின் கண்களில் குடியிருக்கும் எழுதப்படாத கவிதையை வாசிக்கத் துவங்குகிறான் கணவன்
4.
உள்ளேகவும்
வெளியேறவும் வெவ்வேறு வாசல்கள்
5. பிரசவ அறைக்கும்
பிணவறைக்கும்
வெகுதூரமில்லை'.
6.
தொலைபேசியில் மேலாளரின் வசைக்கு செவி கொடுத்த படியிருப்பவனை
சார் அடுத்து நீங்க தான் என செவிலின் குரல் உசுப்ப
கிடைக்கும் மீச்சிறு நொடிக்குள் யாவற்றையும் மறந்து தன்னையே விற்கிறான் மருத்துவப் பிரதிநிதி

7.
குறிப்பிட்ட மருந்தாளுனருக்கு மட்டுமே புரியும் படி எழுதும் மருத்துவரின் பரிந்துரை மொழிக்குப் பின்னால் ஒரு மருத்துவப் பிரதிநிதி இருக்கிறான்


(2)
The Temple Car gone around
should return to its shed
Was it because those who came and went pulled
that it had returned to its place
As the rightful ones too touched it
It moved – isn’t it
One and all do
operate thus
Riddles beyond the reach of Science
are always there
Though God is One
Is the One seated in the sanctum sanctorum
And the One going on a procession
one and the same?
One and all has time appropriate
Though somewhat more or less
Take the course of water
If more
Tears of Joy
Less means
Go dip your head in the river and return
Water knows
The art of dissolving everything and
escaping one and all
and so running on
Be water
Or else
Be Watery
ஊர் சுற்றப் போன
தேர் நிலை வந்தாக வேண்டும்
வந்தவரும் சென்றவரும் இழுத்ததாலா நிலைதிரும்பியது
பாத்தியப்பட்டவர்களும்
உரிமையானவர்களும் கைவைத்ததால் தானே நகர்ந்தது.
அததது அப்படித்தான்
அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதிர்கள் உண்டு எப்போதும்
என்னதான் தெய்வம் ஒன்றென்றாலும்
கருவறையில் வீற்றிருப்பதும்
உற்சவராக உலாப்போவதும் ஒரே மனநிலையில் தானா
அததற்கு ஒரு காலம் உண்டு
கூடக்குறைய இருந்தாலும்
நீர் வழிப் படு
நிறைந்தால் ஆனந்தக் கண்ணீர்
குறைந்தால்
ஆற்றில் தலைமூழ்கி வா
தண்ணீருக்குத் தெரியும்
அத்தனையையும் கரைத்து யாருக்கும் அகப்படாமல் ஓடும் சூட்சுமம்
தண்ணீராக இரு
அல்லாது போனால்
நீர்மையோடிரு...
(கடங்கநேரியான்)

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS