THREE POEMS BY
THAMARAI BHARATHI
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
(*With corrections suggested by the poet duly incorporated)
......................................................................................
* மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிப் படையாகக்கொண்டு அதன்மேல் கட்டமைக்கப்படும் கவிதை அந்த அடிப்படை விஷயம் புரிந்தாலொழிய புரிவது கடினம். உதாரணத்திற்கு, கர்நாடக சங்கீதம் தெரியாதவர்களுக்கு கவிதையில் பேசப்படும் ஒரு ராகம் எந்த மனவுணர்வைக் குறிக்கிறது என்று புரிவது கடினம். கவிஞர் பிரம்மராஜனின் கவிதைகளில் இப்படி நிறைய வரும். ஒரு கவிஞர் சொல்ல வந்த விஷயத்தை எளிமையாக, நேரிடையாக சொல்லக்கூடாதா என்று கேட்பது அபத்தம். ஒரு கவிதை அதிலுள்ள புரியாச்சொற்களை மீறி, உவமான உவமேயங்களை மீறி வாசிப்போரிடத் தில் ஆர்வத்தை ஏற்படுத் தும்போது, நல்ல கவிதையாக புரிபடும்போது அதிலுள்ள அந்தப் புரியா வார்த்தைக ளைப் புரிந்துகொள்ள முயல்வார் வாசகர். அப்படி முயலும் போது நிறைய புது விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும். மொழிரீதியான பரிசோதனை என்பது மொழிவழியான படைப்புகளின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமே. அப்படித்தான் கவிஞர் தாமரை பாரதி யின் இந்தக் கவிதையும். அவர் அடிக் குறிப்பு தரவில்லை. நான் கூகுளிலி ருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன். ஃபெர்மியோன்ஸ், போஸோன்ஸ் பற்றியெல் லாம் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் சரியான ஆங்கில இணைபதங்களை மொழிபெயர்ப் பில் பயன்படுத்த முடியும். அப்படிக்கூட என் மொழி பெயர்ப்பில் சில பல போதாமைகள் இருப்பதா கவே உணர்கிறேன்.
...........................................................................................................................
FERMIONS AND BOSONS
(1)
In this love life
the Shadow particle
equalling my Mass
You
Are there
Or not
I am.
(2)
.Assuming of Being
And so being
What is in it?
Nothing.
3
Can there be an infinitesimal
Shadow particle
sans Mass?
3.
Don’t I live
Without your love
Or
Aren’t you living on ?
4.
When rings of Love
Expand in elliptic orbit
I, the shadow matter
as vision
Sitting at the last rim
At the utmost corner
the gravitational mass alone
keeps pulling on and on
5
In this life of sulking and pouting
Though there are millions of shadow particles
Wandering
Though we both are
Virtual Mass Shadow s
We revolve always
In opposing directions.
.பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து துகள்களும் ஃபெர்மியன்கள் மற்றும் போஸான்கள் என இரண்டு வகைப்படும். ஃபெர்மியன்கள் பருப்பொருட்களை உருவாக்குகின்றன. போஸான்கள் துகள்களுக்கு இடையே உள்ள விசைகளை கடத்துகின்றன. ஃபெர்மியன்கள் பவுலி விலக்குக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. போஸான்கள் ஒரே குவாண்டம் நிலையில் கூட்டமாக இருக்க முடியும்.
Note: All particles in the universe are classified as either fermions or bosons based on their quantum spin. Fermions make up matter and obey the Pauli Exclusion Principle (preventing two from occupying the same space). Bosons are force-carrying particles that can overlap and occupy the exact same quantum state
...................................................................................................................
ஃபெர்மியானும் போசானும்
***************************
1.
இக்காதல் வாழ்வில்
என் நிகர்
நிறை ஒத்த
நிழல் துகள்
நீ
இருக்கிறாயா
இல்லையா
நான்
இருக்கிறேன் .
2.
இருப்பதாக
எண்ணிக்கொண்டு
இருப்பதில்
என்ன
இருக்கிறது
ஒன்றுமில்லை
3.
மிக குறைந்த
மீச்சிறு
நிறையற்ற
நிழல் துகளொன்று
இருக்க முடியுமா?
உனதன்பில்லாத
நான் வாழவில்லையா?
இல்லை
நீதான் வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா?
4.
அன்பின் வளையங்கள்
நீள் வட்டப்பாதையில்
விரிவடைகையில்
கடைசி விளிம்பில்
கடைக்கோடியில் அமர்ந்து
உன்னைச் சுழலும்
கட்புலனாக
நிழல் துகள்
நான்.
ஈர்ப்பின் பொருண்மை மட்டும்
இழுத்துக்கொண்டு கிடக்கிறது
5.
இவ்வூடல் வாழ்வில்
கோடி கோடி
நிழல் துகள்கள்
உலவினும்
நாமிருவரும்
நிறை நிகர் நிழல்
துகள்களாயிருப்பினும்
சுழல்வதென்னவோ
எதிர் எதிர்
திசைகளில்தான்
.jpg)






No comments:
Post a Comment