INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, February 17, 2024

NAANARKAADAN SARA

INSIGHT - NOV-DEC, 2023


A POEM BY

NAANARKAADAN SARA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


My precious eyes!
What are you looking at?
It is you who speak to us too
who are your eyes two
that we keep looking at
Ho, the Great Grand Space!
My lovely lips!
Within your lines
What words you keep hidden?
You who is love with your own self
And the one who kisses itself
Lover or Beloved
-these words we keep hidden in our lines
That are your lips
My Love
My Sweet Ears!
What are you presently listening to?
The sound of the paddy grains scattered by thee
in the courtyard
for feeding the sparrows that compose the tune
for the song that you murmur within
We who are your ears
Do hear
Ho, You Our Sound
Ho, My Darling Nostrils!
What is it that you smell
And in ecstasy divine revel?
The scent unparalleled of your armpits
that none smelt
inhaling it all too deeply
repeatedly
Feeling sublime
Oh, why pretend ,you ripe Jackfruit!
As if you are not aware of it!
Ho, My finger-nails!
Why this quiet absolute?
Keeping open our nail-beds
in great expectation of the day
when you would trim us and apply a little Mehendhi
and so celebrate yourself
keeping them open
calm we remain
Ho, our carnival consummate!
Ho, my strong legs!
Where are you going
In such haste?
Experiencing the pleasure of bearing you
Who having chosen the path of Death
imagines not of treading along Life’s passage
I am on a journey sans destination
My Dearest!
Ho, my fifty-eight kilo Body?
What at all do you want?
That saving me from the violence of
Evaporating through the chimney of
Electric crematorium
And dissolving in the Space
you would carefully choose and set aside a burial pit for me
where worms can feast on me
remaining with this hope is me
I of Thee _
Ho, Kindness Supreme
Naanarkaadan Sara
எனதருமைக் கண்களே!
என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
உன் கண்களாகிய
எங்களோடும்
பேசுகிற உன்னைத் தான்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்
பெருவெளியே!
எனதழகு உதடுகளே!
உங்கள் வரிகளுக்குள்
எந்தச் சொற்களை
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?
தன்னைத் தானே
காதலித்துத்
தனக்குத் தானே
முத்தமிட்டுக் கொள்ளும் நீ
காதலனா, காதலியா?
என்கிற சொற்களை
உன் உதடுகளாகிய எங்களின்
வரிகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறோம் அன்பே!
எனதினிய காதுகளே!
இப்போது எதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
நீ உன் இதயத்தில் முணுமுணுக்கும்
பாடலுக்கு
இசை கோர்க்கும் குருவிகளுக்காக
முற்றத்தில் நீ வீசும்
நெல் மணிகள்
இரைகிற ஒலியை
உன் காதுகளாகிய நாங்கள்
கேட்டுக் கொண்டிருக்கிறோம்
எங்களின் ஒலியானவனே!
எனது செல்ல மூக்குகளே!
எதை நுகர்ந்து
பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
யாருமே நுகர்ந்து இன்புறாத
உனது அக்குள் வாசனைக்கு
நிகரேதுமில்லை என்பதை
உள் மூச்சாக
இழுத்திழுத்துத் திளைத்துக் கிடக்கும் எங்களை
அறியாதது போல்
ஏன் நடிக்கிறாய்
பழுத்த பலாப் பழமே!
என் கை விரல் நகங்களே!
இத்துணை பேரமைதி எதற்கு?
எங்களை வெட்டித் திருத்தி
கொஞ்சம் மருதாணி பூசி
உன்னைக் கொண்டாடப் போகும்
நாளை எதிர்பார்த்து
எங்கள் நகக் கண்களைத் திறந்து வைத்து
அமைதி காக்கிறோம்
எங்களின் திருவிழாவே!
என் வலிமையான கால்களே!
இவ்வளவு விரைவாக
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?
மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டு
வாழ்க்கையின் பாதையில் நடப்பதாகக்
கற்பனை செய்யாத உன்னைச்
சுமந்து திரிகிற சுகத்தோடு
இலக்கற்ற பயணம்
மேற்கொண்டிருக்கிறேன் உயிரே!
எனது ஐம்பத்தெட்டு கிலோ உடலே!
உனக்கு என்ன தான் வேண்டும்?
நவீன எரிமேடை புகைபோக்கி வழியாக
வான் பரப்பில் கலந்து கரையும்
வன்கொடுமை மறுத்து
புழுக்கள் தின்று வாழும் படி
ஒரு புதைகுழியை
எனக்காகப் பார்த்து வைப்பாய்
என்றே
உனதாகிய நான்
நம்பிக் கிடக்கிறேன்
பெருங்கருணையே!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE