INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

S.VAIDHEESWARAN

 TWO POEMS BY 

S.VAIDHEESWARAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)




“Whether you like it or not
the Sun scatters its heat rays.
Can’t stop the rain
Saying “Don’t want.
“Can’t command the tempest
Saying “Enough. Quit at once”
Only after surging downwards
and pouring out
the cataract turns into river
and calms down..
Poems too seem to be of the same
essence;
The mysterious outcome of an
intrinsic persistence.

“நீ விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
வெயில் அடிக்கிறது.
வேண்டாம் என்று
மழையைத் தடுக்க முடிவதில்லை.
போதும் நிறுத்து என்று
புயலுக்கு உத்தரவிட இயல்வதில்லை.
நீர்வீழ்ச்சி விழுந்து கொட்டியபின் தான்
ஆறாகி அடங்குகிறது.
இந்தக் கவிதைகளும் அப்படித்தான் போலும்
ஒருவித மானஸீகப் பிடிவாதத்தின்
மர்மவெளிப்பாடு.

வைதீஸ்வரன்


(2) BEING
The moisture on the tip of grass-blade
A towering tree’s newborn leaf
A droplet of mercy of the innermost heart.
Heat of the lightning’s forehead
Scattering seed dust.
Memories’ sperm anew
Din gone into hiding before knowledge
Deluge that devoured the dam
I, Myself devoured.
Honey born within
Poem’s carnival.

பிறவி

புல்லின் நுனி ஈரம்
நெடுமரத்தின் இலைக்குஞ்சு
அடி மனசின் துளிக்கருணை
மின்னலின் நெற்றிச்சூடு
சிதறும் விதைப்புழுதி
நினைவின் புது விந்து
அறிவுக்கு மறைந்த ஆரவாரம்
அணையை விழுங்கிய வெள்ளக்காடு
என்னைத் தின்ற நான்
எனக்குள் பிறந்த தேன்
கவிதையின் கும்மாளம்
வைதீஸ்வரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE