INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

FAIZA ALI

 A POEM BY

FAIZA ALI

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)



Drawing the pipe on the blackboard and allowing excitement to flash luminously
As a terrible thunder has alighted
the resultant curse.
As usual I am the only one
With no Cent percent.
From out of those fingers that danced
for wholesome applause
Index fingers stretch at me also.
What more
My teaching has become
a common subject for all
to comment
Searching for the ‘gap’ not there
files and documents might be scrutinized.
The days of maternity leave at the start of
the academic year
or
those moments when I wiped off the
heartrending tears of the weeping baby
oozing beyond the sari-wrap
would never be taken into account
in the count of these moments
counted as a terrible time-pilfering.
When their substitutes would be
dust-filled and in deep slumber
Just as the kitchenettes swollen
with eatables uneaten, all turning rotten
in halls everywhere
my own query also born of the doubt
whether all that I have demonstrated
in the air
drawing pipes on the blackwall
would have travelled as far as the answer-sheets
dissolved in the same air
with all too loaded silences.

AALIYA AALIYA •

கருஞ்சுவரில் குழாய் வரைந்து
ஆவலை மின்னவிட்டவாறே இடியாய் வந்திறங்கியிருக்கிறது பெறுபேறு.
எப்போதும்போல எனக்கு மட்டுமில்லை
நூறு விழுக்காடு.
முழுமைக்கான கரகோசங்களுக்காய்
நடனமாடிய விரல்களில் இருந்தே..
எனை நோக்கியும் நீள்கின்றன
சுட்டுவிரல்கள்.
இனியுமென்ன..
சுரண்டித் தெரியும் கடைக் கத்தரிக்காய் ஆகிற்று என் கற்பித்தல்.
இல்லா இடைவெளி வேண்டிக்
கிளறப்படலாம் ஆவணக்கோப்புகள்.
துவக்க வருசத்தின் பேறுகால விடுமுறை நாட்களோ...இல்லை
நிறைந்து
முந்தானைக்கு மேலாயும் கசிந்த
செல்லக் குழந்தையின்
கதறல் துடைத்த நிமிசத்துளிகளோ..
மிகப்பெரும் நேரத் திருட்டாய்
உணரப்படுகிற இக்கணங்களுக்குள்
கணக்கில் வரப்போவதேயில்லை..
அதற்கான பதிலீடுகள்.
உண்ணப்படாமலே குவிந்தழுகும்
கொழுத்த சமையலறைபோலே
பலகூடங்கள் தூசித்துத் தூங்கையிலே..
கருஞ்சுவரில் குழாய்கள் வரைந்தே
காற்றிலே நான் செய்துவித்த
செயற்பாடுகள் யாவுமே..
பயணப் பட்டிருக்குமோ விடைத்தாள்கள் வரைக்குமென்ற
சொந்த வினாவும்கூட
அதே காற்றில்தான் கரைந்தும் போயிற்று..
கனத்த மௌனங்களுடன்.
எஸ். ஃபாயிஸா அலி.
***
//நான் கேட்கிறேன்... மறக்கிறேன்.//
//நான் பார்க்கிறேன்...உணர்கிறேன்.//
//நான் செய்கிறேன்..அதனால்தான் நான் விளங்கிக் கொள்கின்றேன்.//
(சீனா.)

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024