INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, September 3, 2022

LAREENA ABDUL HAQ

 A POEM BY

LAREENA ABDUL HAQ


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The way that waterfall alone having its course
in the opposite direction always
the fish discussed with amazement
amongst themselves
The wind which has learnt to balance the angst and repose
of rising against the fall destined
in a lone scale
goes past with a soft smile.
Those defined as something usual and norms
have all been constructed for the sake of
someone or other.
Some trees and creepers too
might initiate on their own
the process of moving themselves
towards the light
Clinging close to a swelling swirl of love
is not the same as
strolling along bearing one’s body
It is like the waterfall rising in the opposite direction
It is Resistance…. Rickety
The last word uttered by the waterfall
with all its moss-filled rocky sediments
that the existential crisis of the fish
is not its responsibility ,
it is the job of the Almighty
crossed her floating with marble-tinged foam.
At last with an all too dense silence
when she crossed the waterfall
coming back to its original self
it flowed on rustling
bearing the ever-stinging angst of Love.

Abdul Haq Lareena
அந்த அருவி மட்டும்
எப்போதும் எதிர்திசையில் பயணிப்பதை
மீன்கள் வியப்புடன் பேசிக்கொண்டன.
வீழுமாறு விதிக்கப்பட்டிருத்தலை
மீறியெழுவதன் வலியையும் ஆசுவாசத்தையும்
ஒற்றைத் தராசில் நிறுக்கப் பழகிவிட்ட காற்று
ஒரு புன்னகையோடு கடந்துபோகிறது.
இயல்புகள், நியமங்கள் என வகுக்கப்பட்டவை எல்லாம்
யார் யார் பொருட்டோ கட்டமைந்தவை தாம்
எனின்,
சில மரங்களும் கொடிகளும்கூட
ஒளியீர்ப்பு நோக்கிய சுயாதீன முன்னகர்வினை
தாமாகவே மேற்கொள்ளக்கூடும்.
உடலைச் சுமந்தலைவது போன்றதல்ல
ஒரு நேசப்பெருக்கினைக் காவித் திரிவது
மறுதலையாய் நிமிர்ந்தெழும் அருவியைப் போல
புறநடையானது... தத்தளிப்பானது...
தமது இருத்தல் குறித்த மீன்களின் கவலைக்கு
பொறுப்புக் கூறுதல் என்பது
தனக்கு உரியதல்ல, கடவுளின் வேலையென்று
பாசிபடிந்த கற்பாறைப் படிவுகளோடு
அருவி இறுதியாய்ச் சொன்ன சொல்
பளிங்கு நிற நுரையோடு மிதந்துசென்றது
இறுதியாக ஓர் அடர்ந்த மௌனத்தோடு
அவள் அருவியைக் கடந்தபோது
அது தன்னியல்பு மீண்டு
காதலின் ஆறாத்தவிப்பினைச் சுமந்து
சலசலத்தோடியது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE